ராமாயணத்தில் ராமன் மனம் பரதனிடம் இருந்தது.பரதன் மனம் ராமனிடம் இருந்தது.
கோபிகை பெண்கள் என் மகிமை பாடி என்னையே பூஜித்து சிரத்தை கொண்டு என்னையே மனதில் வைத்திருந்தார்கள்.நானும் அவர்களை மனதில் வைத்து இருக்கிறேன்.பூஜிக்கிறேன் என்று பகவான் கூறுகிறார்.ஒரு கட்டத்தில் கோபிகை பெண்கள் கண்ணனாகவே மாறி விடுவார்கள்.பகவத் கீதையில் கூறுகிறார்: பக்தர்கள் எப்படி என்னை பூஜிக்கிறார்களோ அப்படியே நான் அவர்களை பூஜிக்கிறேன்.இதுவே உண்மையான மகான்களின் அடையாளம்.
" ததேவ ஸாத்யதாம் ததேவ ஸாத்யதாம்"
ஆதலால் மகான்களை சந்திக்க அவசியம் முயற்சிக்க வேண்டும்.அப்போது
வெகு சீக்கிரமே பகவானின் அருளை பெற்று விடலாம்.
வெளி தோற்றத்தில் மகான்களை பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் நெடுநாள் அவர்கள் கூட இருந்து பழக வேண்டும்.அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று சில காலதிருக்கு பின் அறிந்து கொள்ளமுடியும்.தன்னையும் முழுமையாக அர்ப்பணித்து விட வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ண பகவான் பக்தி யோக தத்துவத்தை நன்கு அறிந்து கொள்ள உத்தவரை கோபிகை பெண்களிடம் அனுப்புகிறார். உத்தவர் பிருந்தாவனதிருக்கு வந்து கோபிகை பெண்களின் உயர்ந்த பிரேமை பக்தியை நேரில் கண்டறிகிறார். அன்பின் உச்சகட்டத்தை தொட்டு விட்ட அவர்களின் வாழ்க்கை முறையை கண்டு மிகவும் வியந்து போகிறார்.இது போலவே மகான்களை நாம் அவசியம் நேரில் காண வேண்டும். அவர்களை தேடி போக வேண்டும்.
மகான்களும் அனைவரையும் உற்றவராக நினைத்து பகவானின் பக்தியோக ரகசியத்தை உபதேசித்து விட மாட்டார்கள்.அவர்கள் உள் மனதில் தெய்வ சங்கல்பம் அனுமதி தந்தால் தான் ஏற்றுக்கொள்வார்கள்,அவர்களிடம் உண்மையாக நடந்து கொண்ட பின் உலகியல் ஆசைகளை பெரிதாக மதிக்கிறோமோ என்று அறிந்த பின் நம்மை பகவானை நோக்கி திசை திருப்புவார்கள்.அவர்கள் அருளால் (நம்மை சோதித்தபின்)நாம் பகவானின் அன்புக்கு பாத்திரமாகி விடுவோம்.நமது மனமும் அருள் தாகம் எடுத்து பகவானுக்காக எங்கும்,உருகும்.
பகவானின் பிரேமையில் இரண்டரகலந்த பக்தர்கள் நம்மை என்றும் கை விட மாட்டார்கள்.அவசியம் நம்மை கரை சேர்ப்பார்கள்.இப்படிப்பட்ட மகான்கள் மோட்சத்தையும் விரும்பாதவர்கள்.மக்களை உய்விப்பதர்காகவே ஜென்மமேடுப்பர்கள்.பகவானின் அருளை பெறுவதற்காக அலையும் பக்தர்களை சந்தித்து மிகவும் மகிழ்ந்து ஞானத்தையும் பக்தியையும் உபதேசிப்பார்கள்.அவர்கள் தரிசனமும் ஸ்பரிசமும் பேசுவதும் மிக புண்ணியத்தை தரும்.உலக துன்பங்களில் இருந்து விடுபட அது ஒரு நல்ல வாய்ப்பு என்று நாம் உணர வேண்டும் (தொடரும்)
No comments:
Post a Comment