Friday 30 November 2012

வாமன அவதாரம் தொடர்ச்சி 4

 
பலிசக்கரவர்த்தி மஹாராஜா பார்க்கவ பிராமண ரிஷிகளுடன் அசுவமேத யாகம் செய்வதை கேள்விப்பட்டு யாகசாலையை நோக்கி புறப்பட்டார்.அவர் செல்லும் போது,ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் பூமி நிலை தடுமாறியது.நர்மதா நதிக்கரையில் பிருகு கச்சம் என்ற ஒரு ரம்யமான இடத்தில் யாக அனுஷ்டானம் நடந்துகொண்டு இருந்தது.
 
     யாகம் செய்யும் திக்விஜர்களும்,சபயோர்களும் அந்த தெய்வ பாலகனை கண்டு பிரமித்து போய் நின்றனர்.நம் யாகசாலையை நோக்கி பேரொளியுடன் பிரகாசித்துக்கொண்டு வருவது யாரோ?சூரியனா? அல்லது அக்னி சனத்குமாரரோ?என்று யோசித்தனர்.வாமன பகவான் இளம் பிஞ்சு கரங்களில் குடை தண்ட கமண்டலங்களுடன் வந்து பிரவேசித்தார். அங்கங்கள் ஒவ்வொன்றிலும் பிரகாசமான ஒளி சிந்திக்கொண்டிருக்க சிறுவனாக காட்சியளிக்கும் அவரை கண்டு முதிய தவசீலர்களும் ஆசாரியர்களும் தன்னை மறந்து எழுந்து  நின்று வரவேற்றனர். அவர் தேஜசால் கட்டுண்ட பலிராஜா அவரை ஒரு சிறந்த பொன்னாசனத்தில் அமரச்செய்து அவர் பாதங்களில் பாதபூஜை செய்வித்தார்.பற்றற்ற மகான்களுக்கும் மனோரம்யாமான பாதகமலங்களின் தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டார்.
     பலி ராஜா கூறினார்.”ஸ்வாமி தங்கள் நால்வரவால் யாம் பெருமாகி ழ்சி   அடைந்தோம்.மகரிஷிகள் தவமே உருவெடுத்து வந்தது போல வந்திருக்கிறீர்கள்.இங்கு என் இல்லத்திற்க்கு வருகை புரிந்ததால் நாங்கள் அனைவரும் புனிதமாகி விட்டோம்.எங்கள் பித்துருக்கள் திருப்தி அடைந்து விட்டார்கள்.எங்கள் வம்ஸமே புனிதமானது.இன்று யாகத்தின் முழு பலனும் கிடைத்து விட்டது.பிராமண பாலகரே தாங்கள் எதை வேண்டுமானாலும்என்னிடம்இருந்துபெற்றுக்கொள்ளலாம்.சொல்லுங்கள்.வலம் மிக்க சாம்ராஜ்யங்கள்,கிராமங்கள், வேண்டுமா?யானை,குதிரை,தேர் படைகள் வேண்டுமா?பொன்,ரத்தினபொக்கிஷங்கள்,பணிப்பெண்கள்,பிராமண கன்னிகள் வேண்டுமா?எதையும்கேட்டுக்கொள்ளுங்கள் நான் தருவதற்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்.” என்றார்.
     வாமன பகவான் திருவாய் மொழிந்தார்.: அசுர குல ராஜாவே!கீர்த்தியை வளர்க்கும் அறம் கலந்த வார்த்தைகள் தங்கள் குல பரம்பரைக்கு தகுந்தபடி தான் இருக்கின்றன.நீங்கள் பிருகு வம்ச சுக்கிராசாரியாரின் சிஷ்யர்.பிரகலாதனின் பேரன்.உங்கள் குல பரம்பரையில் தைரியமும் வீரமும் குறைந்தவர் எவரும் இல்லை.யுத்ததிற்க்கு சவால் விட்டவனை எவரும் சும்மாவிட்டதில்லை.சத்தியம் தவறாத பரம்பரையில் பிறந்தவர் நீங்கள்.அன்று ஹிரணியாக்ஷனிடம் போரிட்டு ஜெயித்த பின்பும் விஷ்ணு பகவானுக்கு ஜெயித்த திருப்தி ஏற்படவில்லை.எப்படியோ கஷ்டப்பட்டு ஜெயித்தோம் என்று நினைத்தார்.மேலும் ஹிரணியகசிபு மூவுலகங்களை ஜெயித்த பின்பு விஷ்ணு பகவானிடம் போர் செய்ய வைகுண்டம் வந்த போது விஷ்ணு பகவான் கண்களுக்கு புலப்படாமல் ஹிரனியனின் இதயத்திற்குள் நுழைந்து விட்டார்.அவரை வைகுண்டத்தில் காணாமல் ஹிரணியகசிபு சிம்மகர்ஜனை செய்துவிட்டு போய்விட்டார்.(தொடரும்)

Saturday 24 November 2012

வாமன அவதாரம் தொடர்ச்சி 3

அதிதி தேவி விரைவில் பகவானை தன் கர்ப்பத்தில் சுமந்தாள்.அதனால் பிரமானந்த பரவசநிலை எய்தினாள். கச்யர் தியான சமாதியில் அனைத்தும் அறிந்து விட்டார்.பிரம்ம தேவர் பிறக்க போகும் வாமன பகவானை துதி செய்தார்.ஒரு சுபயோக சுப தினத்தில் சந்திரன் திருவோண நட்சத்திரத்தில் இருக்க புரட்டாசி மாதம் சுக்கிலபட்சம் துவாதசி திதியில் பகவான் அவதரித்தார்.சகல நட்சத்திர தாரகைகள் அனுகூலமாகவும் மங்களகரமாகவும் அமைந்திருந்தன.பகவானின் அவதார திதியை விஜயா துவாதசி என்றும் கூறுவர்.அவர் அவதார சமயத்தில் வானகத்தில் தேவ துந்துபிகள் அதிர்ந்தன.சங்கம் மிருதங்கம் அதிர அப்சரஸ்கள் நடனமாடினார்கள்.தேவர்களும்,முனிவர்களும்,பித்ருக்களும் துதி பாடினார்கள்.அதிதியின் ஆசிரமத்தில் பூமாரி பொலிந்தன.அதிதி பரம புருஷ பரமாத்மாவை கண்டு பேரானந்தம் அடைந்தாள்.தந்தை கச்யபரும் அளவில்லா ஆனந்த பரவச நிலை அடைந்தார்.சங்கு சக்கிரதாரியாக பிறந்தவர் திடீரென பிரம்மச்சாரி பாலகனாக மாறினார்.நாடகத்தில் நொடியில் நடிகன் வேஷம் மாற்றிக்கொண்டது போல இருந்தார்.அவர் வேதம் பயிலும் பிரம்மச்சாரி மாணவன் போல இருந்தார்.தேவரிஷி,மகரிஷிகள் அனைவரும் ஜாதக புனித சடங்கு செய்தனர்.பூணூல் அணிவித்தனர்.காயத்திரி தேவி சக்தியே காயத்திரியாக வந்து காயத்திரி உபதேசம் செய்வித்தாள். பிரகஸ்பதி பூணூலயும் கச்யபர் அரை ஞான் கயிரயும் தந்தனர்.பூமிமாதா மான் தோலை தந்தாள்.சந்திரன் தண்டத்தயும் அதிதி மாதா கௌடீன வஸ்திரத்தயும் தந்தார்கள்.ஆகாயம் குடை தந்தது.பிரம்மா கமண்டலத்தாயும் சப்தரிஷிகள் தர்பயை அளித்தனர்.குபேரன் பிட்சா திருவோட்டயும்,சரஸ்வதி ருத்திராசை மாலை யயும் தந்தனர்.சாட்சாத் அன்னபூரனேஸ்வரி பிசையிட்டாள்.பகவான் முறைப்படி சமித்துக்களால் ஹோமம் செய்தார்.(தொடரும்)