Showing posts with label ஓங்கார மந்திரத்தின் மகிமை. Show all posts
Showing posts with label ஓங்கார மந்திரத்தின் மகிமை. Show all posts

Friday 4 November 2011

ஓங்கார மந்திரத்தின் மகிமை

உலக மக்கள் க்ஷேமத்திற்காக பிரம்ம தேவர் அ +உ +ம இந்த மூன்றெழுத்து சேர்ந்த ஓம் என்ற பிரணவ மந்திரத்தையும் பூ: புவ :ஸ்வ: என்ற வியாஹிருதிகளையும் மறைகளில் இருந்து தோற்றுவித்தார். பரமாத்ம ரூபமாக இருக்கும் ஓம் எல்லா மந்திரங்களுக்கும் காரணமாக உள்ளது.

     ஓங்காரம் அண்டத்திலும் பிண்டத்திலும் இருப்பதனால் அதனை வழிபடும் போது தனக்கும் உலகிற்கும் தாமாக ஷேமம் உண்டாகிறது.பிரக்ருஷ்ட நூதனோ வர்ணோ நித்ய நூதன விக்ர்ஹா என்று ஆதி சங்கரர் கூறுகிறார்.

     அதாவது பிரணவம் சிறந்ததிலும் சிறந்தது. புத்தம் புதியது. தெவிட்டாதது. அதனை ஒலிக்கும் போது சலிப்பில்லாதது. புத்தம் புதிய அனுபவம் ஏற்படுகிறது. அதனை வழிபடுவதற்கு தேசமோ காலமோ தேவையில்லை . எங்கும் நிறைந்து ஏகரசமாக எப்போதும் இனிமையாக விளங்குகிறது. அது குறைவதும் கூடுவதும் இல்லாதது. பூரணமாக தொடக்கமும் இல்லாதது. நிலைத்து இருக்கிறது. ஓம் என்ற சக்திக்கு எந்தவித நிலையும் வர்ணமும் ஏற்படுவதில்லை. 
      நூதனம் என்றால் எப்போதும் புதிதாக இருப்பது. பழையதாவதில்லை. என்றும் சாச்வதமாக நித்யமாக இருப்பது, எல்லாவற்றையும் கவர்ந்திழுக்க கூடியது. கவர்ந்திழுப்பது என்றும் பேரழகு படைத்ததாகவே இருக்கும் . அதனால் சத்தியமானது, சுந்தரமானது, சிவமானது .
      உருவமில்லா பரமாத்மாவை விக்ரஹதில் வைத்து வணங்குகிறார்கள். ஏனெனில் மனதை ஒருமுகபடுத்தி தியானம் செய்ய இந்த முறை மிகவும் உதவியாக இருக்கிறது.
      ஒரு பொருளில் மட்டும் மனதை செலுத்த அதாவது கவனம் செலுத்த உருவம் மிகவும் தேவைபடுகிறது . உண்மையில் இறைவனுக்கு உருவம் இல்லை .நாம் சிறந்ததாக அதாவது இதற்க்கு மேல் சிறந்தது எதுவுமில்லை என்று எதனை கருதுகிறோமோ அதனை கற்பனை செய்து கண்டு களித்து இன்புறுகிறோம். அவ்வகையில் தான் பகவானை வழிபடுகிறோம். அச்சிறந்த பொருளே எல்லாம்  வல்ல இறைவனை உணர்த்தும் ஓங்காரம்.
     ஓங்காரத்தின் மகிமையை வருணிப்பது பூமியில் இருக்கும் மண்துகள்களை எண்ணுவதற்கு ஒப்பாகும், அல்லது ஆகாயத்தை முலம் போட்டு அளப்பதாகும்.  கடலை ஓர் எட்டில் தாண்டுவதற்கு சமமாகும்.