அதிதி தேவி விரைவில் பகவானை தன் கர்ப்பத்தில்
சுமந்தாள்.அதனால் பிரமானந்த பரவசநிலை எய்தினாள். கச்யர் தியான சமாதியில் அனைத்தும் அறிந்து
விட்டார்.பிரம்ம தேவர் பிறக்க போகும் வாமன பகவானை துதி செய்தார்.ஒரு சுபயோக சுப தினத்தில்
சந்திரன் திருவோண நட்சத்திரத்தில் இருக்க புரட்டாசி மாதம் சுக்கிலபட்சம் துவாதசி திதியில்
பகவான் அவதரித்தார்.சகல நட்சத்திர தாரகைகள் அனுகூலமாகவும் மங்களகரமாகவும் அமைந்திருந்தன.பகவானின்
அவதார திதியை விஜயா துவாதசி என்றும் கூறுவர்.அவர் அவதார சமயத்தில் வானகத்தில் தேவ துந்துபிகள்
அதிர்ந்தன.சங்கம் மிருதங்கம் அதிர அப்சரஸ்கள் நடனமாடினார்கள்.தேவர்களும்,முனிவர்களும்,பித்ருக்களும் துதி பாடினார்கள்.அதிதியின்
ஆசிரமத்தில் பூமாரி பொலிந்தன.அதிதி பரம புருஷ பரமாத்மாவை கண்டு பேரானந்தம் அடைந்தாள்.தந்தை
கச்யபரும் அளவில்லா ஆனந்த பரவச நிலை அடைந்தார்.சங்கு சக்கிரதாரியாக பிறந்தவர் திடீரென
பிரம்மச்சாரி பாலகனாக மாறினார்.நாடகத்தில் நொடியில் நடிகன் வேஷம் மாற்றிக்கொண்டது போல
இருந்தார்.அவர் வேதம் பயிலும் பிரம்மச்சாரி மாணவன் போல இருந்தார்.தேவரிஷி,மகரிஷிகள் அனைவரும் ஜாதக புனித சடங்கு
செய்தனர்.பூணூல் அணிவித்தனர்.காயத்திரி தேவி சக்தியே காயத்திரியாக வந்து காயத்திரி
உபதேசம் செய்வித்தாள். பிரகஸ்பதி பூணூலயும் கச்யபர் அரை ஞான் கயிரயும் தந்தனர்.பூமிமாதா
மான் தோலை தந்தாள்.சந்திரன் தண்டத்தயும் அதிதி மாதா கௌடீன வஸ்திரத்தயும் தந்தார்கள்.ஆகாயம்
குடை தந்தது.பிரம்மா கமண்டலத்தாயும் சப்தரிஷிகள்
தர்பயை அளித்தனர்.குபேரன் பிட்சா திருவோட்டயும்,சரஸ்வதி ருத்திராசை மாலை யயும் தந்தனர்.சாட்சாத்
அன்னபூரனேஸ்வரி பிசையிட்டாள்.பகவான் முறைப்படி சமித்துக்களால் ஹோமம் செய்தார்.(தொடரும்)
No comments:
Post a Comment