இதற்க்கு உதாரணமாக அரிவாட்டாய நாயனார் கதையும் இளையான்குடி மாற நாயனார் கதையும் கூறலாம்.உளவு தொழில் புரியும் வேளாளர் குலத்தில்,அக்குலத்தினர் செய்த தவத்தினால் மாறனார் என்னும் பெயருடன் ஒருவர் சிறந்து விளங்கினார்.மாறனார் படிப்பறிவும் ஞானமும் இல்லாதவர்.பக்தியால் மட்டும்இவருக்கு இறைவனருள் எப்படி கிடைத்தது என்பதை இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.
மாற நாயனார் தம் இல்லத்திற்கு எந்த நேரத்தில் சிவனடியார்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு கொடுப்பதையே பெருந்தொண்டாகவும் தம் பிறவி பயனாகவும் கருதி வாழ்ந்து வந்தார்.இவ்வாறு அவர் வாழும் நாளில் சிவபெருமான் ஓர் எண்ணம் கொண்டார்.சிவனடியாருக்கு உணவிடும் திருத்தொண்டை மாறனார் செல்வம் மிகுந்திருக்கும் காலத்தில் செய்வதோடல்லாமல் வறுமை வந்தடைந்து துன்புறுத்தும் காலத்திலும் அத்திருதொண்டை தளராது செய்யும் வல்லமை கொண்டவர் என்பதை உலகுக்கு உணர்த்த கூத்த பெருமான் விரும்பினார்.அதனால் மாறனாரின் செல்வ வளம் மெல்ல மெல்ல தேய்ந்து மறைந்து போகும்படி திருவுல்லம் கொண்டார். வளமான செல்வம் நாள் தோறும் மாறி மாறி மறைந்ததும் வாட்டும் வறுமை நிலை மாறனாரை வந்தடைந்தது.ஆயினும் அடியார்களுக்கு சோறிடும் தொண்டில் அவர் சிறிதும் சலிப்பும் தளர்ச்சியும் கொள்ளாமல் குறைவற செய்து வந்தார்.நாளுக்கு நாள் வறுமை வளர வளர அவர் தம் வீட்டிலுள்ள பொருட்களை விற்றும் பிறகு தம்மையே விற்று கொடுக்கத்தக்க அளவுக்கு கடன்கள் வாங்கியும் சிவனடியார்களுக்கு உணவிடும் திருத்தொண்டை சிறிதும் வழுவாமல் அன்போடு செய்து வந்தார்.
இவ்வாறு நிகழ்ந்து வரும் நாளில் மாறனார் திருத்தொண்டின் பெருமை இத்தகையதென இவ்வுலகிற்கு எடுத்து காட்டுவதற்க்காக சிவபெருமான் ஒரு சிவயோகி போல திருவேடம் தாங்கி ஒரு மழை காலத்தில் நள்ளிரவில் மாற நாயனார் வீட்டுக்கதவை தட்டினார்.அச்சமயம் மாறனார் எந்த உதவியும் கிடைக்காததால் உண்ணுவதற்கு கூட உணவில்லாமல் பல நாள் பட்டினி கிடந்தாலும் பெரும் பசியை சமாளித்துக்கொண்டு இரவில் வெகுநேரம் வரை கண் விழித்திருந்தார்.
தம் இல்லத்திற்கு சிவனடியார் வருகையை உணர்ந்து கதவை திறந்தார்.சிவனடியார் நிற்பதை கண்டு உள்ளம் மகிழ்ந்து வரவேற்று விருந்தினராக அன்போடு உள்ளே அழைத்து சென்றார்.பின்பு மழையால் நனைந்திருக்கும் சிவயோகியாரின் உடம்பிலுள்ள ஈரத்தை துடைத்து நல்லதொரு இடத்தில அடியாரை அமர செய்தார்.
நாயனார் தம் மனைவியாரிடம் சென்று தம் வீட்டிற்க்கு வந்திருக்கும் சிவனடியார் மிகவும் பசித்திருக்கிறார் என்ன செய்வது? என்று கேட்டார்.நமக்கு உண்ண உணவில்லை என்றாலும் அம்மையப்பருக்கு இனியவரான சிவனடியாருக்கு நாம் இனிமையாக உணவிட வேண்டுமே அதற்க்கு என்ன வழி என்று கேட்டார்.அவரது மனைவியாரோ இன்னும் வருத்ததோடு நம் வீட்டில் எதை வைத்து எப்படி சமைப்பது?விற்பதர்க்கோ வீட்டில் ஒரு பொருளும் இல்லை.அண்டை அயலாரிடம் கடன் வாங்கலாமென்றால் அதற்கும் வழி இல்லை.இனியும் நமக்கு கடன் தருவார் யாரும் இல்லை.பொழுதும் போய் இரவு வெகு நேரம் ஆகிவிட்டது என்று கூறி திகைத்தார். (தொடரும்)
No comments:
Post a Comment