Saturday 12 November 2011

நாரத பக்தி சூத்திரம்




பக்தியோகம் மார்க்கம் மிக எளிமையானது. இறைவன்பால் அன்பும் பிரேமையும் மனதில் நிறைந்து இருந்தால் அது மிக சுலபமாக மனிதர்களை இறைவனிடம் சேர்த்துவிடும். இந்த தத்துவத்தை நாரத பக்திசூத்திரம் உணர்த்துகிறது.
          எல்லாம் வல்ல சர்வசக்தி படைத்த இறைவன் ஒருவனே தான், உருவமற்றவன். இந்து மதத்தில் இந்த சித்தாந்தம் கற்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் மனிதர்களின் மனபாங்கு வேறுவிதமாக உள்ளது. அதன் காரணத்தால் அவர் அவர்கள் பிரியப்படும் தெய்வங்களை வழிபட இந்துமதம் அனுமதி அளிக்கிறது. நாரத பக்தி சூத்திரம் எந்த தெய்வ வழிபாட்டிற்கும் பொருத்தமானது. அவர் வைணவ சம்பிரதாயத்தை தோற்றுவித்தாலும் அவர் எழுதிய பக்தி சூத்திரங்களை நமக்கு இஷ்டமான எந்த தெய்வத்தையும் வசபடுத்தலாம். 
          மேற்சொன்ன சித்தாந்தத்தை வைத்து நான் சிவனடியாரின் தெயவிககதைகளை மேற்கோள் காட்டியும் ஆல்வார்பாசுரங்களை உதாரணம் காட்டியும் நாரத பக்திசூத்திரதுடன் எழுதியுள்ளேன்.தங்களது மேலான ஆதரவுடன் தங்கள் கருத்துகளை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன். இதை ஒரு தொடராக வெளியிடுகிறேன். நன்றிகலந்த வணக்கங்களுடன் 
                                                                                               சுலோச்சனா பத்மநாபன் 

1 comment:

  1. அன்புள்ள அம்மா அவர்களுக்கு
    வணக்கம். இன்று நண்பர் மதிவாணனின் ஊருலகம் பிளாக் மூலம் உங்ககளது ஆன்மீகதேடல்கள் பிளாக்கைப் படித்தேன் ."வயது எனக்கு ஒரு பொருட்டல்ல " என்று சொல்லி புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உங்களது ஆன்மிக அறிவையும் அனுபவங்களையும் தமிழ் அறிந்த மக்களிடம் பரப்பி வருகிறீர்கள் . அதற்கு என் பாராட்டுக்கள் .
    "சமஸ்கிருதம் அறிந்தவர் . வேதங்களைக் கற்றவர் . முதுநிலை பட்டம் பெற்றவர் " என் எனக்கு முன்னரே உங்களைப் பற்றி தெரியும். கொல்கத்தா மற்றும் நாக்பூர் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர் என்ற கூடுதல் விபரங்களை உங்கள் அறிமுகம் மூலமே தெரிந்து கொண்டேன் .
    எனக்கு ஆன்மீக ஈடுபாடு இல்லாவிட்டாலும் எல்லவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதலில் எல்லாவற்றையும் படிப்பதுபோல் ஆன்மீக விஷயங்களையும் படித்து வருகிறேன் .அதன்படி உங்களது பதிவுகள் அனைத்தையும் படித்தேன் .சுற்றயுள்ள மனிதர்களை நேசிக்கும் அன்பை உங்களது ஆன்மீகம் கற்றுத் தரட்டும்
    நான் தொழிற்சங்கத்தில் பணியாற்றிய காலத்தில் பத்மநாதன் சார் அவர்கள் என் மீது காட்டிய அன்பையும் பாசத்தையும் என்னால் மறக்க முடியாது
    நிறைந்த அன்புடன்
    ப.சேர்முக பாண்டியன்

    ReplyDelete