Showing posts with label நாரத பக்தி சூத்திரம். Show all posts
Showing posts with label நாரத பக்தி சூத்திரம். Show all posts

Saturday 17 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 36

"யோ விவிக்த ஸ்தானம் ஸேவதே யோ லோக பந்தமுன்மூலயாதி நிஸ்த்ரைகுன்யோ பவதி யோக க்ஷேமம் த்யஜதி "
          இதற்க்கு முன் சொன்ன சூத்திரத்தில் மாயையை கடக்க மூன்று வழிகள் கூறப்பட்டுள்ளன.இந்த சூத்திரத்தில் ஐந்து உபாயங்களை கூறுகிறார்கள்.
           நான் எனது,என்ற பற்று சொத்து சுகங்கள் நடுவில் இருந்தால் வைராக்கியம் உண்டாகாது.மேலும் பற்று தான் உண்டாகும்.ஆதலால் பகவத் விஷயங்கள் அல்லாதவற்றில் நெருக்கம் கொள்ளாமல் தனித்து வாழ வேண்டும்.என்று சூத்திரத்தில் கூறி இருக்கிறார்கள்.பகவத்கீதையிலும் பகவான் அதையே கூறுகிறார்.
"விவிக்ததேசஸேவித்வமரரதிர் ஜனஸம்ஸதி "   
உலகியல் விவகாரங்களில் ஈடுபட்டிருக்கும் ஜனக்கூட்டத்தில் இருந்து விலகி தனித்து இருக்க வேண்டும். இந்த சூழ்நிலை பகவத் தியானத்திற்கு உகந்தது.
எவ்வளவு தான் பகவான் மீது ஈடுபாடாக இருந்தாலும் அதற்க்கு தக்க சூழ்நிலை இல்லாவிடில் எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியாது.பகவானின் பிரேமையில் கட்டுப்பட வேண்டுமானால் உலகியல் பந்தங்கள் என்ற கட்டுக்களை அறுக்க வேண்டும்.உலகியல் விவகாரங்களில் எவ்வளவு துன்பம் இருக்கின்றன.பகவானை நோக்கி போகும் பக்தி வழி எவ்வளவு நிம்மதியும் ஆனந்தமும் இருக்கின்றதென ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.இதனால் தாமாக பந்த பாசங்கள் கழன்று விடும்.
          முக்குணங்களில் உருவானதே இந்த உலகம். உலகப்பற்றை அறுக்க வேண்டுமானால் முக்குணங்களில் இருந்து விடுபட வேண்டும்.சாத்வீக,ராஜச,தாமச குணங்களை ஜெயிக்க வேண்டும். இல்லையேல் அவை உலக விவகாரங்களில் நம்மை அமிழ்த்திவிடும்.
         சாத்வீகம் என்பது அதிக அன்பும் பாசமும் அதிக இரக்கமும் கொள்வது.அதிக அன்பாலும் அதிக இரக்கத்தாலும் ஒருதலை பட்சமாகிவிடும் நிலையில் ஒருவருக்கு பரிந்து, ஒருவரை பகைத்து கொள்ளும் கட்டாயம் ஏற்படும்.அல்லது பிறரை இம்சிக்கும் குணம் தலை தூக்கும்.
         ராஜசம் என்பது கோபம் வேகம் பிறரை இம்சிக்கும் குணம் ஆகியன.தாமசம் சோம்பல்,செயல்படாமல் தூங்கிகொண்டிருப்பது,மயக்கம் முதலியன.இவை மூன்றும் தவிர்க்கப்பட வேண்டும்.
        கிடைக்காதது,கிடைப்பது-யோகம் எனப்படுகிறது.
         கிடைத்ததை காத்துக்கொள்வது க்ஷேமம்.க்ஷேமம் என்றால் நலன்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.இதில் உலகியலில் கிடைக்காத சுக போகங்கள் கிடைப்பதை யோகமும் கிடைத்த நலன்களை காத்துக்கொள்வதை க்ஷேமம் என்றும் கூறலாம்.இந்த உலகியல் யோக க்ஷேமங்களை பற்றி சிந்திக்காமல் இருக்க வேண்டும்.கிடைத்தாலும் விலகி கொள்ள வேண்டும்.
         மற்றொரு யோக க்ஷேமம் -- கடவுள் விசயத்தில் யோகமேன்பது கடவுளை அடைவது அல்லது கடவுளை அடையும் உபாயத்தை ,வழியை அடைவது. க்ஷேமம் என்றால் பகவானை அடையும் வழியை அறிந்து அதிலுருந்து பிறழாமல் சாதனை செய்வது.
         இரண்டுவித யோக க்ஷேமங்களை பற்றி கொண்டு கவலை பட்டுக்கொண்டு இருக்க வேண்டாம். எல்லாவற்றையும் முழு பொறுப்பையும் பகவானிடம் அர்ப்பணித்து விட்டு பகவானை வழிபடுதளிலேயே குறியாக இருக்க வேண்டும்.என்று சூத்திரத்தில் கூறுகிறார்கள்.என்னை மட்டும் உபாசிக்கும் பக்தர்கள் என்னை மட்டும் நம்பி இருப்பார்கள்.அவர்களின் யோக க்ஷேமங்களை நானே பொறுப்பேற்று சுமந்து கொண்டு இருக்கிறேன்.
"போஜனாச்சாதனே.சிந்தா வ்ருதா குர்வந்தி வைஷ்ணவா
யோ அசௌல விச்வம்பரோ தேவ ஸ கிம் தாஸானு பேக்ஷதே "
வைஷ்ணவர்கள் உணவு உடை பற்றி ஏன் வீணாக கவலை பட வேண்டும்? அகில விசுவத்திர்க்கும் உணவளிப்பவன் தன பக்தர்களை மறந்து விடுவானா?
                                                                                                                    (தொடரும்)

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 35

"தரங்காயிதா அபீமே ஸங்காத் ஸமுத்ராயந்தி "
காமமும் (உலகில் இருக்கும் அனைத்து வித ஆசைகள்)குரோதமும் அலைகள் போல எழுந்து எழுந்து பெரும் அலைகடலாக பெருகி விடுகின்றன.மேற்சொன்னது போல தீயவர் சேர்கையால் அல்லது தீமைகளை தன்னில் வளர்த்து கொள்வதால் பெரிய அளவில் பெருகி விடுகின்றன.
          தீமைகளை வேருடன் களைய வேண்டும்.சிறிதளவு தேங்கி விட்டால் கூட அவை படிப்படியாக வளர்ந்து ஆபத்தை விளைவிக்கும்.தீயின் சிறு பொறியை விட்டு வைத்தாலும் அது பெரிய நெருப்பாக மாறி எல்லாவற்றையும் சாம்பலாகி விடும்.
         ஆரம்பத்தில் காமகுரோதாதிகள் சிறு அலை போல தோன்றினாலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பெருகி கடல் போல ஆகி விடும்.என்று கூறுகிறார்கள்.நல்ல எண்ணங்களை விரட்டிவிடும்.நம்மனதில் நல்ல குணங்கள் அதிகமாகவும் தீய எண்ணங்கள் குறைவாகவும் இருக்கின்றன என்று நினைத்து கொள்ள கூடாது.இந்த மனதை அடிக்கடி சோதித்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.இந்த மனமானது கீழான விசயங்களை நோக்கி விரைந்து பாயக்கூடியது. மாயையை எவராலும் வெல்ல முடியும்.என்பதை அடுத்த சூத்திரத்தில் கூறுகிறார்கள்.
"கஸ்தரதி கஸ்தரதி மாயம்? ய : ஸங்கான் ஸத்யஜதியோ மஹானுபாவம் ஸேவதே, நிர்மமோ பவதி " 
மாயையை வென்று எவன் கரை சேருகிறான்?ஜனன மரணத்தை விட்டு எவன் கடைத்தேருகிறான்? என்ற கேள்வி எழும் போது தேவைக்கு அதிகமாக இருக்கும் (ஏனெனில் உலகில் வாழ்வதற்கான சில விஷயங்கள் இன்றியமையாதவை)உலகியல் விசயங்களை துண்டித்து துறந்து விட்டவன் பக்தர் அல்லாதவர்களுடன் அதிக தொடர்பு கொள்ளாமல் தீயவர்களோடு சுத்தமாக தொடர்பை அறுத்து கொண்டவன் கடைதேருவான்.மகான்களோடு தொடர்பு கொள்பவன் பற்றற்று வாழ்க்கை வாழ்ந்து நான் என்ற அகந்தையை விட்டோழிப்பான். 
         நதியில் நீந்த வேண்டுமானால் கைகளாலும் கால்களாலும் நீரை அடித்து விலக்கிக்கொண்டே போனால் மூழ்காமல் இருக்கலாம்.அது போலவே மகா பயங்கரமான மாயை என்ற நதியை நீந்தி கடக்கவேண்டுமேன்றால் இருகைகளாலும் அகங்காரத்தையும் விசயபற்றையும் விலக்கிக்கொண்டே போக வேண்டும்.இல்லையேல் முடிவில்லா பிறவி பெருங்கடலில் மூழ்கி விட வேண்டியது தான்.
         மாயை சம்ஸாரக்கடலில் நீந்திக்கொண்டிருக்கும் போது கைகால்கள் சோர்ந்து விடும்போது ஒரு படகு போல மகான்களின் திருவடிகளை பற்றிக்கொள்ளவேண்டும்.பாகவதபுராணம் கூறுகிறது.மிகுந்த குளிர் பிரதேசத்தில் தீயை மூட்டி பக்கத்தில் குளிர் காய்வார்கள்.அதனால் குளிரும் விலங்குகளில் இருந்து பயமும் நீங்கி இருளும் அகன்று சுகம் கிடைக்கும்.அதுபோல மகான்களின் நிழலில் இருந்து கொண்டால் பாவங்கள் ஜெனனமரண பயம் அஞ்ஞான இருள் இவை மூன்றும் விலகி சென்றவுடன் நமக்கு அலாதியான அமைதி கிடைக்கும்.
          தந்தை இரண்யன்,மகன் பிரகலாதனை நோக்கி கேட்கிறான்."உனக்கு இந்த மதி எப்படி வந்தது?விடாப்படியாக எப்படி ஹரியை பற்றிக்கொண்டு இருக்கிறாய்?
          பிரகலாதன் அதற்க்கு பதில் அளிக்கிறான்."தந்தையே இறைவனை நோக்கி பக்தி கொள்ளும் மதி எவருக்கு எப்படி வரும் என்று கூறுகிறேன்.-பற்றற்ற சாதுக்களான மகான்களின் பாத தூசி தன் தலை மீது பட்டவுடன் எல்லா அனர்த்தங்களையும் அது விரட்டி அடிக்கும்.அப்போது ஸ்ரீ ஹரியின் பாத கமலங்களை பற்றிக்கொள்ளும் மதி ஏற்படுகிறது.
         ஜட பரதன் ரஹூகணன் என்ற மன்னனிடம் கூறுகிறார்:கிடைப்பதற்கரிய பகவானின் பேரருள் பகவத் தத்துவ ஞானம், பிரேமை எல்லாம், தவம்,யக்ஞம்,கிரஹச்தாசிரம கடமைகள் வேத அத்யாயனம், தீர்த்தாடனம், அக்னி உபாசனை, சூரிய உபாசனை யாவற்றாலும் கிடைக்ககூடியவை அல்ல. ஆனால் மகா புருஷர்களை அண்டி சேவை செய்யும் பாக்கியம் கிடைத்து அவர்கள் பாத தூசி மேனியில் பட்டு விட்டால் மட்டும் கிடைத்து விடும்.
                                                                                    (தொடரும்)

Friday 16 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 34

தீயவர்களின் சேர்க்கையில் இருந்து தப்பித்து இருக்க வேண்டும்.நல்லவர்களின் சேர்க்கையின் அவசியத்தை கூறிவிட்டு தீயவர்களை தவிர்க்க வேண்டும்.என்று கூறுகிறார்கள்.நல்லவர்களின் சேர்கையால் பகவானின் கதை கேட்பதும் பஜனையும் நாமஜபமும் செய்தால் பகவான் மீது பிரேமை வளரும்.நல்லொழுக்கம் நிலைத்து இருக்கும்.சாஸ்திர ஞானமும் வைராக்கியமும் உண்டாகும்.அப்யாசம் பலப்படும்.பெரியோர்கள் மகான்கள் சேவை தொடரும்.நேர்மை இருக்கும்.
          மேற்சொன்ன விசயங்களுக்கு எதிராக தீயவர்களின் நட்பால் தீய விஷயங்கள் மனதில் குடி புகும்.புலன் விசயங்களுக்கு அடிமையாகி விடுவது,பிறரை துவேசிப்பது,தன சொந்த சுகத்தை நாடி போவது,.ஒழுக்கம் கேட்டு திரிவது,பெரியோருக்கு கீழ் படியாமல் இருப்பது,தன்னுடைய சந்தோசமே பெரிது என்று நினைப்பது, தீய விசயங்களை பற்றி கொள்வது,சுய கௌரவம் கருதுவது,கோபம் கர்வம்,பொறுமையின்மை அகத்தூய்மை புறத்தூய்மை இல்லாமல் இருப்பது, இரக்கமின்மை,அசாத்தியமாக இருப்பது,அமைதி இல்லாமல் அலைவது, இவற்றுடன் உயிர் வாழ்ந்தால் தன் ஆத்மாவை அதொகதிக்கு தள்ளிவிட்டவன் ஆவான் மனிதன்.அசுர சம்பத்து படைத்த அனைத்து குணங்களும் குடியேறி விடும்.
          பாகவத புராணத்தில் கபில முனிவர் தன் தாயிடம் கூறுகிறார்:
நல்லவர் நலபை துறந்து மீண்டும் ஏன் பாவகுழியில் விழவேண்டும்? பெண் பித்து பிடித்தவர்களோடு சேர்ந்தால் அவர்கள் மனதில் இருள் சூழும்.மேலும் சத்தியம்,தூய்மை, தயை,நல்லறிவு,திரு,மானம்,புகழ், சாந்தி எல்லாம் பறந்தோடி விடும்.இவர்கள் எதிர்காலம் சிதறுண்டு போகும்.ஆதலால் புலன் இன்பங்களை பெரிதாக நினைக்கும் கீழ் பிறவி அடைந்த மனிதர்களோடு தொடர்பு கொள்ள கூடாது.துளசிதாசர் ராமாயணத்தில் கூறுகிறார்.நரகம் மிக மோசமானது.தீயவர்களின் சேர்கை அதனினும் கீழானது.தீயவர்களின் சேர்கை இல்லாதபோதும் மனம் வேறு விசயங்களை பற்றி சிந்தித்து தடுமாறினால் உடனே பகவானை சரணடைய வேண்டும்.தன்னுடைய முயற்சியிலும் வெற்றி காண வேண்டும்.நாம் வாழும் வாழ்க்கை முறை தீமைகள் இருக்கின்றனவா என்று எப்போதும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
" காமக்க்ரோத மோஹஸ்ம்ருதிப்ப்ரம் ச புத்திநாச ஸர்வநாச காரணத்வாத்"
தீயவர்களின் சேர்கையால் காம குரோத மதி மயக்கங்களால் நினைவாற்றல் அழிந்து அறிவும் நாசமாகி இறுதியில் சர்வ நாசமும் ஆகிவிடும்.
          பகவான் சம்பந்தப்பட்ட தத்துவங்களையும் நாம ஜெபம் பஜனைகளும் விட்டு விட்டு புலன்களுக்கு இன்பம் தரும் உலகியல் விசயங்களில் கவனம் செலுத்துவதே தகாத விஷயம்.சர்வ நாசத்திற்க்கும் இதுவே மூலகாரணம்.
சித்தம் ஓயாது எதை சிந்திக்கிறதோ அதில் பற்று ஏற்படுகிறது.தீயவர்கள் அல்லது தீமை விளைவிக்கும் விசயங்களோடு தொடர்பு கொள்வதால் மனிதனின் சரீரம், வாக்கு,மனம் யாவும் அடங்காத ஆசைகளோடு அடிமையாகின்றன.ஆசைக்கு அடிமையாகிவிடும்போது பேராசை மேலும் பெருகுகிறது.ஆசை நிறைவேறாவிட்டால் கோபம் வருகிறது.கோபத்தால் மதி மயக்கமும் நினைவாற்றலும் அழிகிறது.அறிவு நாசத்தால் இகலோக பரலோக நலன்கள் அழிகின்றன.பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.ராஜச குணத்தால் உண்டாகும் காமமும் (சகலவித ஆசைகளும் காமத்தில் அடங்குகின்றன)குரோதமும் தான் மனிதனை பாவக்குழியில் தள்ளுகின்றன.எல்லா நன்மைகளையும் இவை அழித்து விடுகின்றன.அர்ஜுன இவை இரண்டையும் நீ பரம வைரிகளாக நினைப்பாயாக.(தொடரும்) 

Thursday 15 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 33

துஸ்ஸங்க: ஸர்வதைவ த்யாஜ்ய :"


பாண்டிய மன்னன் தீயவர்களான சமணர்களோடு இணைந்து நட்பு கொண்டதால் இறைவன் அருளை இழந்து பெரும் துன்பத்திற்கு ஆளானான்.அந்த நாட்களில் பாண்டிய நாட்டில் சமண மதம் பெருகி சைவ மதம் குன்றி இருந்தது.பரம்பரை பரம்பரையாக சைவ நெறியில் நின்ற பாண்டியமன்னன் முந்தய பிறவியில் செய்த தீவினையின் பயனாக சைவ சமயத்தை நீக்கி சமண சமய நெறியின் சார்பையே நல்லறம் எனகருதியிருந்தான்.
          இந்நிலையில் பாண்டிய மன்னனின் பட்டத்து மஹா ராணியார் மங்கையர்க்கரசி மந்திரியாரையும் வீரர்களையும் அனுப்பி திருஞானசம்பந்தரை அழைத்து வர செய்தார்.இதற்கிடையில் சமணர்கள் தவ வேடத்தில் தங்களை மறைத்துக்கொண்டு திருஞானசம்பந்தர் தங்கி இருக்கும் திருமடத்தை அடைந்தார்கள்.அங்கு தீ மூட்ட மந்திரம் ஜெபித்தார்கள். மந்திரத்தால் மடத்திற்கு தீ மூட்ட முனைந்தார்கள்.ஆனால் அவர்கள் மந்திரம் ஜெபித்தும் தீபற்றவில்லை.இதனால் மனம் தளர்ந்து ஒன்று கூடி அச்சம் பெருகிடக்க ஆலோசித்தார்கள்.பிறகு அரசன் இதை அறிந்ததால் நமது மேன்மையை மதிக்கமாட்டான் நமது பிழைப்பையும் கெடுப்பான் என்று எண்ணி அவர்கள் தம் கையால் தீக்கோல் எடுத்து சென்று சிவனடியார்களின் மடத்திற்கு தீயிட்டார்கள்.
         மடத்தின் வெளிப்புறத்தில் பற்றிய தீயை கண்ட சிவனடியார்கள் மனம் கலங்கி அதை தணித்தார்கள். சமணர்கள் செய்த பாவ காரியங்களால் அந்த வினைப்பயன் வீண் போகவில்லை.அவர்கள் மூட்டிய தீ பாண்டியமன்னனிடம் வெப்ப நோயாக வந்து சேர்ந்தது பாண்டியனுடைய உடல் வெப்பு நோயின் கொடுமையால் நடுங்கியது.எரியும் நெருப்பை போன்ற சூடு கணகண வென்று அவன் உடம்பெல்லாம் பரவியது.மன்னன் சமணர்களை பார்த்து "நீங்களும் சிவனடியாரான ஞானசம்பந்த பிள்ளையாரும் என் நோயை தீர்த்து உங்கள் தெய்வத்தன்மையை நிலை நிறுத்தி கொள்ளுங்கள் "என்றான்.
        பாண்டியன் தன்னை சூழ்ந்து ஓலமிடும் சமணர்களையும் அருளுடைய ஞானசம்பந்தரையும் நோக்கி "எனக்குள்ள அந்த வெப்பு நோயை நீங்கள் தனித்தனியாக வெவ்வேறு  விதமாக விரைவில் தீர்த்து வையுங்கள்.அதை தீர்த்து வைபவர்களே வாதில் வெற்றிபெற்றவர்கலாவர் "என்று மன்னன் சொன்னான்.உடனே சமணர்கள் அரசே நாங்கள் மந்தரித்து எங்கள் தெய்வ வல்லமையால் உமது உடம்பின் இடது பாகத்திலுள்ள நோயை தீர்ப்போம். என்று சொல்லி அரசனது இடது பாகத்து நோயை தீர்பதற்காக அவர்கள் மன்னவனருகே தங்கள் நாமத்தை முழங்கி மயிர்ப்பீலிக்கற்றயினால்  அரசனது இடப்பாகத்தை தடவினார்கள்.அதனால் வெப்பம் முன்னிலும் அதிகமாக கொதிதெழுந்து பாண்டிய மன்னனை வருத்தி எடுத்தது.மன்னன் அதை பொறுக்கமுடியாதவனாகி ஞானசம்பந்தரை பார்த்தான்.சம்பந்தர் ஆலவாய் சொக்கநாதரை நினைத்து "ஆலவாய் அண்ணலே அரசனின் வலப்பக்கத்து வெப்பு நோயை நீரே மந்திரமாகி, மருந்துமாகி தீர்ப்பீர் என்று வேண்டிக்கொண்டு பெருமானை நினைத்து மந்திரமாவது  நீறு என்னும் திருநீற்று பதிகத்தை பாடி அந்த திருநீற்றை கொண்டே அரசனது வலப்பக்கத்தில் தடவியருளினார்.தடவியதும் வலப்பக்கமிருந்த வெப்புநோய் முழுவதும் நீங்கி பொய்கை போல குளர்ந்தது. ஆனால் அவ்வலப்பக்க நோய் 
இடப்பக்கம் புகுந்து முன்பிருந்த நோயோடு சேர்ந்து இருமடங்காக பெருகலாயிற்று.சமணர்களின் பீலிகள் அந்த நோயின் வெப்பத்தால் எரிந்து கருகின.உடம்பின் இடப்பக்கத்து வெப்பம் தங்களையும் தாக்க ஆரம்பிக்கவே சமணர்கள் நடுங்கி அதை தாங்க முடியாமல் தள்ளி பொய் ஒதுங்கி நின்றார்கள். திருஞானசம்பந்தர் வலப்புறத்து வெப்பு நோயை போக்கியது கண்டு அங்கிருந்த பெரியவர்கள் அதிசயித்து அவரை சூழ்ந்து கொண்டார்கள்.உலகில் வெப்பமும் தட்பமும் பொருந்தி இருப்பது போல அரசன் உடம்பிலும் ஒரு பக்கம் வெப்பமும் மறுபக்கமும் குளிர்ச்சியும் பொருந்தி இருந்தது.
          மன்னன் கூறினார்.என்னுடல் ஒன்றிலேயே இந்த இருவேறு தன்மைகளின் இயல்பையும் அனுபவித்தேன்.என்னே அதிசயம்.வெப்பமான சமணர்களே நீங்கள் தோற்று விட்டீர்கள்.என்னை விட்டு தூர போய் விடுங்கள்.என்று கூறி ஞானப்பிள்ளையார் சம்பந்தரை நோக்கி என்னை வாழ்விக்க வந்த மறைக்குல வள்ளலாரே என் உடலின் இடப்பக்கத்திலுள்ள வெப்பு நோயும் தீர நீரே அருள் செய்யும் என்று வேண்டினார்.ஞானசம்பந்தர் தமது திரு முகத்தில் கருணை காட்டி திருக்கையில் வெண் திருநீறு காட்டி திருப்பதிகம் நிறைவாக்கிதுதித்து பாண்டியனுடலில் இடது பக்கம் ஒருமுறை தடவ அரசனது இடப்பக்கத்து வெப்பம் அகன்று நோய் முழுவதும் நீங்கியது.பாண்டி மா தேவியாரும் மந்திரி முதலிய பெரியோர்களும் சம்பந்தர் திருவடிகளை தங்கள் தலைகளால் வணங்கி நாங்கள் பெருமை பெற்றோம் மேன்மையுற்றார் எங்கள் மன்னர் என்று கூறி உள்ளம் மகிழ்ந்தனர்.
                                                                                      (தொடரும்) 

Wednesday 14 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 32

          ராமாயணத்தில் ராமன் மனம் பரதனிடம் இருந்தது.பரதன் மனம் ராமனிடம் இருந்தது.
         கோபிகை பெண்கள் என் மகிமை பாடி என்னையே பூஜித்து சிரத்தை கொண்டு என்னையே மனதில் வைத்திருந்தார்கள்.நானும் அவர்களை மனதில் வைத்து இருக்கிறேன்.பூஜிக்கிறேன் என்று பகவான் கூறுகிறார்.ஒரு கட்டத்தில் கோபிகை பெண்கள் கண்ணனாகவே மாறி விடுவார்கள்.பகவத் கீதையில் கூறுகிறார்: பக்தர்கள் எப்படி என்னை பூஜிக்கிறார்களோ அப்படியே நான் அவர்களை பூஜிக்கிறேன்.இதுவே உண்மையான மகான்களின் அடையாளம்.
      "  ததேவ ஸாத்யதாம்     ததேவ ஸாத்யதாம்"
ஆதலால் மகான்களை சந்திக்க அவசியம் முயற்சிக்க வேண்டும்.அப்போது
வெகு சீக்கிரமே பகவானின் அருளை பெற்று விடலாம்.
         வெளி தோற்றத்தில் மகான்களை பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் நெடுநாள் அவர்கள் கூட இருந்து பழக வேண்டும்.அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று சில காலதிருக்கு பின் அறிந்து கொள்ளமுடியும்.தன்னையும் முழுமையாக அர்ப்பணித்து விட வேண்டும்.
        ஸ்ரீ கிருஷ்ண பகவான் பக்தி யோக தத்துவத்தை நன்கு அறிந்து கொள்ள உத்தவரை கோபிகை பெண்களிடம் அனுப்புகிறார். உத்தவர் பிருந்தாவனதிருக்கு வந்து கோபிகை பெண்களின் உயர்ந்த பிரேமை பக்தியை நேரில் கண்டறிகிறார். அன்பின் உச்சகட்டத்தை தொட்டு விட்ட அவர்களின் வாழ்க்கை முறையை கண்டு மிகவும் வியந்து போகிறார்.இது போலவே மகான்களை நாம் அவசியம் நேரில் காண வேண்டும். அவர்களை தேடி போக வேண்டும்.
          மகான்களும் அனைவரையும் உற்றவராக நினைத்து பகவானின் பக்தியோக ரகசியத்தை உபதேசித்து விட மாட்டார்கள்.அவர்கள் உள் மனதில் தெய்வ சங்கல்பம் அனுமதி தந்தால் தான் ஏற்றுக்கொள்வார்கள்,அவர்களிடம் உண்மையாக நடந்து கொண்ட பின் உலகியல் ஆசைகளை பெரிதாக மதிக்கிறோமோ என்று அறிந்த பின் நம்மை பகவானை நோக்கி திசை திருப்புவார்கள்.அவர்கள் அருளால் (நம்மை சோதித்தபின்)நாம் பகவானின் அன்புக்கு பாத்திரமாகி விடுவோம்.நமது மனமும் அருள் தாகம் எடுத்து பகவானுக்காக எங்கும்,உருகும்.
          பகவானின் பிரேமையில் இரண்டரகலந்த பக்தர்கள் நம்மை என்றும் கை விட மாட்டார்கள்.அவசியம் நம்மை கரை சேர்ப்பார்கள்.இப்படிப்பட்ட மகான்கள் மோட்சத்தையும் விரும்பாதவர்கள்.மக்களை உய்விப்பதர்காகவே ஜென்மமேடுப்பர்கள்.பகவானின் அருளை பெறுவதற்காக அலையும் பக்தர்களை சந்தித்து மிகவும் மகிழ்ந்து ஞானத்தையும் பக்தியையும் உபதேசிப்பார்கள்.அவர்கள் தரிசனமும் ஸ்பரிசமும் பேசுவதும் மிக புண்ணியத்தை தரும்.உலக துன்பங்களில் இருந்து விடுபட அது ஒரு நல்ல வாய்ப்பு என்று நாம் உணர வேண்டும் (தொடரும்)

Tuesday 13 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 31

"லப்யதே அபி தத்க்ருபயைவ "
          எல்லாம் வல்ல அந்த இறைவனின் திருவருளால் மட்டும் மஹா புருசர்கள் சந்திப்பு நிகழும்.
          பகவான் எவரை தன்னுடயவனாக்கிகொள்ள விரும்புகிறாரோ அவரிடம் தன சொருபமாக விளங்கும் மகானை அனுப்புகிறார்.


         திருஞானசம்பந்தர் என்ற மகானுக்கு நேரடியாக சிவபெருமானின் அருள் கிடைத்து இருந்தது.பிள்ளை பிராயத்தில் இருந்தே சிவபெருமானை நினைத்து உருகிபதிகங்களை பாடிகொண்டே இறைவன் குடிகொண்ட கோயில்களுக்கு சென்ற வண்ணம் இருந்தார்.
         திருநெல்வாயில் அறத்துறையில் மூர்த்தியாக வீற்றிருக்கும் சிவபெருமான் ஞானசம்பந்தர் தம் காலால் நடந்து வந்ததை கண்டு மனமிரங்கினார்.சிவபெருமான் அன்று இரவே அவூரில் உள்ள ஒவ்வொரு அந்தணர் கனவிலும் தோன்றி "ஞானசம்பந்தன் நம்மிடம் வருகிறான் முத்து சிவிகையும், முத்து மணிக்குடையும் நம்மிடம் இருந்து எடுத்து சென்று அவனுக்கு கொடுங்கள் " என்று கூறி மறைந்தார்.வேதியர்கள் எல்லோரும் விழித்து எழுந்தனர்.அவ்வூரில் உள்ள சந்திரசேகர பெருமானின் ஆலயத்திற்கு எல்லோரும் திரண்டு சென்றனர்.ஆலயத்தினுள் இருந்தவரும் அக்கனவு கண்டு எழுந்தார்.அனைவரும் சேர்ந்து ஆச்சர்யம் அடைந்தனர்.திருப்பள்ளி எழுச்சிக்காலம் வந்தது.அன்பர்கள் திருக்காப்பு நீக்கினார்கள்.
         அங்கே சந்திரசேகர பெருமானின் முன்னிலையில் சந்திரனை போல பிரகாசமான ஒரு முத்து சிவிகையும் ஒரு வெண்குடையும் ஊதும் முத்து சின்னமும் காணப்பட்டன.எல்லோரும் அளவில்லா ஆனந்தம் அடைந்து தலை மீது கை குவித்து கும்பிட்டு ஆரவாரம் செய்தார்கள்.
          அங்கு திருஞானசம்பந்தர் அன்று இரவே கனவில் சிவபெருமான் தோன்றி நாம் உனக்கு கொடுத்துள்ள முத்து சிவிகை முதலானவற்றை ஏற்றுக்கொண்டு சிவிகையில் ஏறி எம்மிடம் வருவாயாக என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.இவ்வாறு இறைவனை முழுமையாக அறிந்து கொண்ட ஞானசம்பந்தர் சிவபெருமானின் பேரன்பு பொழியும் பக்தராக இருந்தார்.
          உண்மையில் பகவானின் அருளும் மகான்களோடு ஏற்படும் தொடர்பும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கும்.
      "  தஸ்மின் ஸ்தஜ்ஜனே பேதா பாவாத் "
பகவானுடன் ஒன்று கலந்து பிரேமையில் திளைத்த பக்தர்களுக்கும் பகவானுக்கும் எந்த வித வித்யாசமும் இல்லாததால் மகான்கள் உயர்ந்தவர்கள்.
       "  ப்ரஹ்மவித் ப்ரஹ்மை பவதி " என்ற உபநிசத வாக்கு படி இறைவனை முழுமையாக அறிந்து கொண்டவர்கள் பிரம்மமாகி விடுவார்கள்.அப்படிப்பட்ட மகான்களை சேவித்தால் அது பகவானுக்கே செய்யும் சேவை ஆகிறது.பாகவத புராணத்தில் பகவானே கூறுகிறார்.சாதுக்கள் என் இதயம் ஆவார்கள்.என் இதயம் சாதுக்களிடம் உள்ளது.என்னை தவிர எவரையும் அறிய மாட்டார்கள்.நானும் அவர்களை விட்டு பிரிய மாட்டேன்.(தொடரும்)
          

Monday 12 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 30

மகான்களின் அருள் கிட்டுவது மோட்சத்திற்கும் அது ஈடாகாது. பகவானின் பிரேமையில் இரண்டற கலந்த பெரியோர்கள் நாடி வந்தவர்கள் மனதில் பக்தியை வித்திடுவார்கள்.என்று துளசிதாசர் கூறுகிறார்.
          மகா புருஷர்களின் சேர்கையால் சீக்கிரமே நமக்கு இறையருள் கிடைத்துவிடும்.அவ்வளவு குறுகிய காலத்தில் யோகம் செய்தாலும் சாங்கிய யாகம் அறிந்திருந்தாலும் புண்ணியம் செய்தாலும் வேதங்களை படித்தாலும் தவம் தியாகம் யாகங்கள் செய்தாலும் தான தட்சிணைகள் கொடுத்தாலும் யம நியமங்கள் கடைபிடித்து தீர்த்தாடனம் செய்தாலும் விரதங்கள் இருந்தாலும் அவர்களுக்கு நான் வசப்பட மாட்டேன்.என்று பாகவதத்தில் பகவானே கூறுகிறார்.இதற்க்கு காரணம் என்ன வென்றால் மேற்சொன்ன சில சாதனைகள் இகலோக ஆசையின் அடிப்படையில் அல்லது பரலோக ஆசையின் அடிப்படையில் செயாப்படுகின்றன.மேலும் அந்த சாதனைகள் நிஷ்காம பாவமாக (பலனை எதிர்பாராத ) செய்த பின் சித்தம் தூய்மை அடைந்து முக்தி யடைய தகுதி கிடைக்கிறது.ஆனால் மஹா புருசர்களின் சேர்கையால் மிக எளிதாக சுதந்திரமாக மாறாத பிரேமை பக்தி கிடைத்து விடுகிறது.அது அவர்கள் நம் மீது அன்பு கொண்டு பேரருளை பொழிவதற்கு மட்டும் கிடைக்கும் மிக அரிதான வாய்ப்பு.
          சூத்திரத்தில் மேலும் கூறப்படுவதாவது:
பூர்வ ஜென்மத்தில் புண்ணியமான பலனால் அல்லது இறைவனை தொழுத பலனால் நேரடியாக பகவானின் சிறிதளவு அருள் கிடைத்தாலும் உய்வடயலாம்.ஆனால் பகவானின் அருளால் தான் மகா புருஷர்களின் சந்திப்பும் கிடைக்க கூடும்.அந்த சந்திப்பு மிக அரிதானது என்று அடுத்த சூத்திரத்தில் கூறுகிறார்கள்.
 "மஹத்சங்கஸ்து துர்லபோ அகம்யோ அமோகச்ச "
உலகில் நேரான சுபாவமுள்ள தர்ம சிந்தனை உள்ள நல்லொழுக்க சீலர்களாக இருக்கப்படும் தெய்வ சம்பத்து படைத்த மகான்களை காண்பது அரிது.உபதேசங்கள் சொல்வது சுலபமானது.அதை கடைபிடிக்கும் சாதுக்களோ பரம ஞானிகளோ எளிதில் கிடைக்க மாட்டார்கள்.நாம் உண்மையாக சரண் அடைந்தாலும் பாராமுகமாக இருப்பார்கள்.யோகிகளும் ஞானிகளும் விரும்பும் பிரேமை பக்தி அவர்கள் மூலமாக சாமானியமாக கிடைப்பதும் இல்லை.மேலும் உயர்ந்த ஞானிகளை அடையாளம் காண முடியாமல் போகிறது.
          சிலர் எல்லாம் அறிந்தவர்களாக சாஸ்திரம் படைத்தவர்களாக இருப்பார்கள்.கவர்ந்திழுக்கும் பேச்சு திறமை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.பக்தர்கள் போல தத்துவ மேதைகள் போல நடிப்பார்கள்.மனம் உருகுவது கண்ணிற் வடிப்பது,தெய்வம் தன்னில் இறங்கி விட்டது என்று ஆடுவது எல்லாம் புற தோற்றதால் எதையும் நிச்சயமாக நம்ப முடியாது.சிலர் ஆழ்கடல் போல எந்த ஆர்பாட்டமும் அல்லாது இருப்பார்கள்.எதையும் நிச்சயிக்க முடியாது.நான் தான் பெரிய ஞானி என்று எவரும் தன வாயால் சொல்வதில்லை. ஆதலால் உண்மையான மகானை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.அதிஷ்டவசமாக ஒருவர் கிடைத்துவிட்டால் பிறவி எடுத்த பலனை அடைந்துவிடலாம்.அவரிடம் சென்று சரண் அடைந்தது வீண் போகாது.
         சாதரணமாக ஒரு நல்லவரோடு நட்பு கொள்ளும்போது நம் மனதிற்கு இதமாக இருக்கிறது.நமது துன்பங்கள் தீர்ந்துவிட்டது போல அனுபவம் உண்டாகிறது.அதற்கும் மேலாக நமக்கு மகா புருசர்கள் கிடைத்தால் நமது பாக்கியமே பாக்கியம்.அவர்கள் நம் மனதை தூய்மை படுத்தி பகவானை நோக்கி திருப்பி விடுவார்கள்.அவர்கள் தரிசனத்தால் நமக்கு அடிமனதில் பக்தி சுரக்கும்.(தொடரும்)

Sunday 11 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 29

விஷ வேகம் என் தலைக்கு ஏறி என்னை சாய்த்து விடுமே ! அதற்க்குள்ளாக நான் கொய்த இந்த வாளைக்குருத்தை வேகமாக கொண்டு போய் கொடுப்பேன்.நிகழ்ந்ததை ஒருவரிடமும் சொல்ல மாட்டேன்.பெரியவர் போஜனம் செய்தருளல் வேண்டும்.என்று நினைத்து வீட்டினுள் புகுந்து தன தாயிடம் வாழை குருத்தை கொடுத்து மயங்கி சுருண்டு விழுந்தான்.மகனின் கையில் உதிரம் வடிவத்தையும் உடலின் குறிகளையும் கண்டு விஷம் தீண்டியதால் மாண்டுவிட்டான் என்று உணர்ந்து கொண்டு விட்டார்கள்.ஆனாலும் அவர்கள் சிறிதும் மனம் கலங்காமல் திருநாவுக்கரசர் போஜனம் செய்வதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்தார்கள்.அருமை புதல்வனின் சவத்தை ஒரு பாயில் வைத்து சுற்றி மூடி வீட்டின் ஒரு புறத்தில் மறைத்து வைத்தார்கள்.பின்பு பெரியவர் அமுது செய்ய காலதாமதம் ஆகிறதே என்று பரபரப்போடு இல்லை விரித்து சோறு காய்கறிகளெல்லாம் அழகுற வைத்து விட்டு திருநாவுக்கரசர் சுவாமிகளிடம் வந்து வணங்கி எழுந்து நாங்கள் பகவான் அருள் பெற்று பாக்கியசாலி யாக திருவமுது செய்து எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார்கள்.
           திருநாவுக்கரசர் எழுந்து கை கால்களை கழுவி வேறொரு ஆசனத்தில் அமர்ந்து இலையில் உணவிற்கு முன் வெந்திருநீறு பூசிக்கொண்டார்.பிறகு அவர் அப்பூதியடிகளுக்கும் அவரது மனைவியாருக்கும் திருநீறு வழங்கினார்.அவர் புதல்வர்களுக்கும் திருநீறு கொடுக்கும் போது உங்கள் மூத்த மகனையும் அழையுங்கள் விபூதி சாத்த வேண்டும்.என்றார்.அப்பூதியடிகள் நிகழ்ந்ததை ஒன்றும் சொல்லாமல் "இப்போது இங்கு அவன் வரமாட்டான் என்றார்." இதை கேட்டதும் அப்பர் சுவாமிகளுக்கு இறைவன் அருளால் ஒருவித தடுமாற்றம் உண்டாகியது.அவர் அப்பூதியடிகலாறை பார்த்து இவ்வார்த்தையை எம் உள்ளம் தாங்காது.அவன் என்ன செய்தான் நீங்கள் உண்மையை சொலுங்கள்.என்றார்.உடனே அப்பூதியடிகள் உடல் நடுங்கி பயந்தார்.உண்மையை சொன்னால் பெரியவர் அமுது செய்வதற்கு இடையுறு நேரிட்டு அப்பாக்கியத்தை இழக்க நேரிடும் .ஆனால் மாதவர் கேட்கும் போது உண்மையை மறைக்காமல் சொல்லவும் வேண்டியிருக்கிறதே என்று சிந்தை நொந்து சுவாமிகளை பரிவோடு வணங்கி தம் மைந்தனுக்கு நிகழ்ந்ததை கூறினார். அதை கேட்டதும் திருநாவுக்கரசர் நீர் செய்தது  நன்றாக இருக்கிறது , யார் தான் இப்படி செய்வார்? என்று சொல்லி எழுந்தார்.ஆவி நீங்கிய பிள்ளையின் சவத்தை பார்த்தார்.இறைவன் திருவருள் புரியும் வண்ணம் "ஒன்று கொலாம் " என்னும் திருப்பதிகத்தை பாடி பாம்பின் விஷத்தை போக்கலானார்.தீய விஷம் நீங்கியது.மூத்த புதல்வரான திருநாவுக்கரசு ,சுவாமிகளின்சிவந்த  திருவடிகளை வணங்கினார்.   அவனுக்கு அவர் தூய வெண்ணீறு அளித்தார்.அப்பூதியடிகளும் அவர் மனைவியாரும் ஸ்வாமிகள் உணவு உண்ண இவன் சிறிது இடையூறு செய்தானே என்று மனம் வருந்தினார்கள்.
          மற்ற விசயங்களில் ஆசையை துறந்து பற்றற்ற நிலை வந்து அகண்ட பஜனை செய்த பின் பக்தி மேலும் எப்படி உறுதியாகிறது என்பதை கூறுகிறார்கள்.அந்த மேலான பக்தி மகான்களின் கருணை பார்வையால் வருகிறது.பகவானின் அருளால் கூட வரலாம்.
         மகா புருஷர்கள் என்றும் கருணையுள்ளவர்கள் அவர்கள் அருளுக்கு பாதிரமாகிவிட்டாலே போதும்.அவர்களுடன் பொழுதை கடத்த வேண்டும்.
அவர்களை உதாரணமாக வைத்துக்கொண்டால் தாமாக உலக பற்றுகள் விலகி விடும்.பகவானை மறக்காத பாக்கியம் கிட்டும்.மகா புருஷர்கள் சாஸ்திர ஞானம் உள்ளவர்களாக ஒழுக்க சீலர்களாக இருப்பதுடன் பகவானின் தத்துவங்களை உணர்ந்து பக்தயுள்ளவர்கலாகவும் இருப்பார்கள்.இவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள்.
        பாகவத புராணத்தில் சூத ரிஷி கூறுகிறார்:
        அடியார்களான மகான்களின் நட்பு கிடைத்தால் போதும் அதற்க்கு இணையாக சொர்க்கத்தில் கிடைக்கும் மேன்மையும் ஈடாகாது.பிறவாமை என்ற மோட்சமும் பெரிதல்ல.மற்ற ஐஸ்வர்யங்களை கேட்கவா வேண்டும்.மகான்களின் அருகாமையில் வரும் சாந்தியும் சுகமும் வேறு எந்த சாதனத்திலும் வராது.(தொடரும்)

Saturday 10 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 28

அறியாது தன்னிச்சையால் பகவான் நாமம் உச்சரிக்கப்படும் போதே இவ்வளவு பலன்கள் கிடைகின்றதேன்றால் பிரியமுடன் அன்பு மேலிட உள்ளம் உருகி உச்சரிக்கும் போது அதன் பலனை கேட்கவா வேண்டும்.பல ஜென்மங்கள் செய்த பாவங்கள் ஒழியும். பிறவி பெருங்கடலில் இருந்து விடுபட்டு இறுதியில் இறைவனிடம் சேர்ந்து விடலாம்.
"முகயதஸ்து மஹத்க்ருபையைவ பகவத்க்ருபாலேசாத்வா " 
அவன் தாள் பணிய அவன் அருள் வேண்டும்.என்று கூறியிருக்கிறார்.மாணிக்கவாசகர்.
          பிரேமை பக்தி கை கூட வேண்டுமானால் சிறிதளவாவது பகவான் அருள் வேண்டும்.மகான்களின் அனுக்கிரகம்மிகவும் அவசியம்.
         மகான்களின் கருணையால் அடியார்களும் இறைவன் அருளை எளிதில் பெற்று விடுகிறார்கள்.திருநாவுக்கரசர் என்ற மகான் அன்பான கருணையால் அப்பூதி அடிகளாரினை கடைதேற்றினார்.இதற்க்கு உதாரணமாக இந்த கதையை கூறலாம்.
 சோழ நாட்டில் திங்களூரில் அந்தன குலத்தில் அப்பூதியடிகள் என்ற பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.அவர் ஆனந்த தாண்டவம் புரியும் சிவபெருமானுக்கு அன்பர்.திருநாவுக்கரசு சுவாமிகளை கண்டறியும் முன்பே அவருடைய திருத்தொண்டின் பெருமைகளையும் அதற்க்கு இறைவன் அருளிய திருவருட்பன்பையும் பற்றி கேள்விப்பட்டு திருநாவுக்கரசர் மீது மானசீகமாக பேரன்பு கொண்டார்.
          தமது வீட்டிலுள்ள அளவுக்கருவிகளுக்கும் மக்கள்களுக்கும் பசுக்களுக்கும் மற்ற பொருள் எல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசர் என்ற திருப்பெயரை வைத்து அன்புடன் அழைத்து வந்தார்.தாம் அமைத்த திருமடம்,தண்ணீர்பந்தல் முதலியவற்றிற்கும் திருநாவுக்கரசர் பெயரையே வைத்து அளவிலா அற செயல்கள் புரிந்து வந்தார்.
         அவ்வாறு அப்பூதியடிகள் தர்மங்கள் புரிந்து வாழ்ந்து வரும் காலத்தில் திருநாவுக்கரசர் ஸ்வாமிகள் பல சிவஸ்தலங்களை தரிசிக்க வேண்டி திங்களூர் வழியாக வந்தார். அங்கு தமது பெயர் சூட்டிய ஒரு தண்ணீர் பந்தலை கண்டார்.திருநாவுக்கரசர் அங்கிருந்து புறப்பட்டு அப்பூதியடிகளின் வீட்டு வாசலை அடைந்தார்.திருநாவுக்கரசருடைய திருவடிகளை அப்பூதியார் வணங்கினார்.கருணை வடிவானவரே தாங்கள் என் வீட்டிக்கு வந்தருளினீர்கள்.இது நான் செய்த தவம் என்றார்.திருநாவுக்கரசர் அதற்க்கு "திருபுவனத்தில் எழுந்தருளி உள்ள சிவபெருமானை வணங்கிவிட்டு வரும்போது வழியில் நீர் வைத்துள்ள நிழல் நிறைந்த தண்ணீர் பந்தலை கண்டோம்.அவ்வாறே நீர் செய்து வரும் மற்ற அறங்களை பற்றியும் கேள்விப்பட்டோம்.அதனால் உம்மை காண விரும்பி இங்கு வந்தோம்.என்று கூறினார்.அப்பூதியடிகளே நீங்கள் தண்ணீர் பந்தலுக்கு தம்முடைய பெயரை எழுதாமல் வேறொரு பெயரை எழுத வேண்டிய காரணம் என்ன ? அதை கூறுங்கள் என்று கேட்டார்.
          இதை கேட்டதும் அப்பூதியடிகள் சற்று கோபமாக கூறினார்."சிவனடியாரே நீங்கள் இப்படி சொல்லகூடாது.சமணர்களுடன் சேர்ந்து கொண்டு பல்லவ மன்னர் இழைத்த கொடுமைகளையும் சூழ்ச்சிகளையும் திருநாவுக்கரசர் தமது திருத்தொண்டின் வலிமையினாலே வென்றார்.அத்தகையவரின் திருபெயரயா வேறொரு பெயர் என்று சொல்கிறீர்கள்? சிவபெருமானின் திருவடியின் கீழ் அன்புடன் செய்யும் திருத்தொண்டின் மூலமாக இப்பிறவியிலும் நாம் கடைத்தேறலாம் என்று நினைத்து திருநாவுக்கரசர் என்று பெயர் எழுதினேன்" என்றார்.
           அவருடைய அன்பின் பெருமையை திருநாவுக்கரசர் உணர்ந்து "புறச்சமயமான சமணத்துறையில் நான் முன்பு பிரவேசித்து விட்டேன்.அதை தடுப்பதற்காக சிவபெருமானால் பெருஞ்சுலை நோய் தரப்பட்டு அவரருளால் ஆட்கொள்ளப்பட்டு பாக்கியம் பெற்றிருந்தாலும் சிறு தொண்டன் நான் என்றார்.
         அவருடைய வார்த்தைகளை கேட்டு அவர் தாம் திருநாவுக்கரசர் என்பதை அப்பூதியடிகள் அறிந்து கொண்டார்.தம் இரு கைகளையும்   தலைமேல் குவித்து ஆனந்த கண்ணீர் அருவியாக பெருகி வழிய வாய் குழற உடம்பெல்லாம் புல்லரிக்க தரையில் அப்படியே விழுந்து திருநாவுக்கரசரின் திருவடிகளை தம் தலை மீது வைத்தார்.
          அதன் பின் அப்பூதியடிகளார் திருநாவுக்கரசரை தம் வீட்டிற்க்கு அழைத்து சென்று அவர் தம் திருவடிகளை தமது மனைவி மக்களுடன் வாசனை நீரால் சுத்தம் செய்து அந்நீரை அவர்கள் எல்லோர்க்கும் தங்கள் தலை மீது தெளித்துக்கொண்டு மகிழ்ந்தார்கள்.சுவாமிகளை ஒரு பீடத்தில் அமர செய்து அன்னம் ஏற்கவேண்டும் என்று அப்பூதியடிகள் வேண்டினார். தம் மனைவியாரை பார்த்து ஆண்டவன் அருளால் பெறுவதற்கரிய பேரு பெற்றோம்.என்று கூறி மிகவும் மகிழ்ந்து சமைக்க புகுந்தார்.அறுசுவை கறிகளாக்கி இனிய அன்னம் வடித்து அமுதமாக்கினார். உணவு பரிமாற இலை விரிப்பதர்க்காக தம் பிள்ளைகளில் மூத்த திருநாவுக்கரசரை கூப்பிட்டு வாழை இலை அரிந்து கொண்டு ஓடி வா என்று சொல்லி அனுப்பினார்.
         பெற்றோர் சொல்படி திருநாவுக்கரசு என்ற பெயர் கொண்ட மூத்த மகன் கொல்லைப்புற தோட்டத்திற்கு விரைந்து ஒரு பெரிய வாழை குருத்தை அரிந்தான். அப்போது ஒரு பாம்பு அவன் கையை தீண்டி சுற்றிக்கொண்டு கண்ணில் கனல் எரிய படமெடுத்தபடி இருந்தது.(தொடரும்)

Friday 9 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 27

இந்த புராணத்தில் விஷ்ணுவின் அவதாரங்களும் மகிமைகளும் வர்ணிக்கப்பட்டுள்ளன. இவை உலக தாபங்களையும் துக்கங்களையும் தணிக்ககூடியவை.இதை கேட்பவர்களும் சொல்பவர்களும் புனிதமாகி விடுவார்கள்.
          எல்லையற்ற இறைவன் உவமை அற்றவர், தெவிட்டாத பேரின்பமானவர். அவரிடம் பக்தி கொண்டு விட்டால் இப்பிறவி எடுத்த பலனை அடைந்து விட்டோம் என்பதை அறிய வேண்டும்.உலகியல் சந்தோசங்கள் இதற்க்கு முன் தூசி பெறாதவை.இதை விட மேலானது எதுவும் இல்லாததால் இனி எதையும் அடைய தேவையில்லை.
         ஒரு வீட்டில் அல்லது ஓர் இடத்தில பகவானின் திருநாம குணங்களை பாடி ஒலிக்கசெய்யும்   போது அங்குள்ள சூழ்நிலையே மாறிவிடும்.தீமைகளும் தீய எண்ணங்களும் அங்கிருந்து ஓடி விடும்.
        பகவான் நாமங்களை உச்சரித்தால் பாவங்கள் நாசப்பட்டு போகின்றன.மரண காலத்திலோ எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.நிச்சயம் அந்த ஆத்மா நற்கதி அடையும்.பகவானை ஆராதிக்கும் பொது பத்து குற்றங்களை செய்ய கூடாது.
  1. சான்றோர்களை நிந்திப்பது,
  2. பகவான் நாமங்களை தரக்குறைவாக பேசுவது அல்லது அவமதிப்பது,
  3. குருவை அவமதிப்பது,
  4. சாஸ்திரங்களை நம்பாமல் குற்றம் காண்பது,
  5. பகவான் நாமங்களின் மகிமையை நம்பாமல் இருப்பது,
  6. பக்தி  இல்லாத  தானம்,விரதம்,யாகம் எல்லாம் பகவான் நாமங்களுக்கு ஈடாகாது என்று சொல்வது,
  7. பகவான் நாமங்களை பஜனை செய்ய பிடிக்காதவர்களிடம் பக்தியை பற்றி பேசுவது,உபதேசிப்பது,
  8. இறைவனை நினைத்து உருகாத மனம் படைத்தவரை நிர்பந்திப்பது.
  9. பகவானின் பூஜைக்காக பணம் வசூலித்து அதை கொள்ளை அடிப்பது,
  10. அகந்தை கொண்டு பணியாமல் இருப்பது. 
ஸ்ரீ பாகவத புராணம் கூறுகிறது:
          பகவான் நாமத்தை எப்படி நினைத்தாலும் அது தன சக்தியை அவசியம் வெளிப்படுத்தி விடும்.நெருப்பின் சக்தியை தெரியாமலும் அதை தொட்டால் அதன் சக்தியை காட்டி விடும்.
         அது போல பகவானின் பெயரால் வேறு ஒருவரை அழைத்தாலும் அல்லது கேலி செய்தாலும் அல்லது வேறு விஷயங்கள் பேசும்போது நடுவில் அறியாமையில் பகவானின் பெயரை உச்சரிக்கபடுவதாலும் அந்த திரு நாமத்திற்கு சக்தி குறையாது.அதாவது எந்த சூழலிலும் மனிதர்கள் பாவம் அழியும்.
          பகவானின் மகிமையை புகழ்பாடும் அனைத்து புராணங்களும் திருநாமங்களை பற்றி பெருமை பேசுகின்றன.எல்லா தெய்வங்களுக்கும் ஆயிரம் திருநாமங்கள் உள்ளன.பாகவத புராணத்தில் தன தாயிடம் கபில முனிவர் கூறுகிறார்: 
" பகவான் நாமங்களை உச்சரிப்பவன் புலயனாக இருந்தாலும் அவன் மேன்மை அடைகிறான்.அவன் தவங்களை செய்து விட்டான்.கங்கை முதலிய ஆறுகளில் நீராடிவிட்டான்,யாகங்கள் செய்து விட்டான்,வேதங்களை ஓதி விட்டான்,இதை அறிந்து கொள்க,அவர் மேலும் கூறுகிறார்:
         மனிதன் நடந்து கொண்டிருக்கும் போது தடுக்கி விழுந்தால் ஹரி,ஹரி,என்று ஹரே நமஹா என்று சொல்ல வேண்டும்.அல்லது ராம,ராமா என்று உச்சரிக்கவேண்டும்.வலியால் துடிக்கும் போதும் ஹரி ஹரி அல்லது இஷ்ட தெய்வங்களான சிவா சிவா என்றோ கூற வேண்டும். இவ்வாறு பழகி விட்டால் பழக்கம் காரணமாக தன்னை அறியாமல் பகவான் நாமம் வாயிலிருந்து வந்தால் எல்லா பாவங்களும் கழுவப்படும்.
          பகவான் நாமங்களை உச்சரிக்கும் போது முடிவில்லா பரம்பொருளான இறைவன் நிச்சயமாக  செவிமடுக்கிறார்.ஆபத்து காலத்திலோ அல்லது தேவைப்படும் போதோ பக்தர்கள் ஹரி நாமத்தை உச்சரித்து அழைத்தால் இறைவன் நிச்சயம் அங்கு வருவார்.பிரத்யட்சமாக தெரியாவிட்டாலும் அவர் அருளை நிச்சயமாக அங்கு உணர முடியும்.ஆபத்துகள் விலகும்.துன்பத்தில் மாட்டிக்கொள்பவர்கள் நிச்சயம் அதிலிருந்து விடுபடுவார்கள்.இது சத்தியம்.
மேலும் பகவான் திருநாமங்களை உச்சரிக்கும் போது பகவான் அவர் சித்தத்தில் அமர்ந்து பாவங்களையும் அஞ்ஞான இருளையும் அழித்து விடுகிறார்.சூரிய ஒளி பரவும் போது இருள் காணாமல் போகிறதல்லவா?
                                                                                     (தொடரும்)
        

Thursday 8 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 26

"லோகே அபி பகவத்குணச்ரவண கீர்தனம்" 
உலகில் மனித சமுதாயத்தின் நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது மனதில் இறைவனை சுமந்து கொண்டே இருக்கவேண்டும்.அவனுக்காக எல்லா பணிகளையும் செய்ய வேண்டும்.காதால் அவன் புகழ் கேட்கவும் வாக்கால் அவன் புகழ் பாடவும் அதிகநேரம் செலவிடவேண்டும்.அவ்வாறு செய்யும் போது வெட்டிபேச்சுகளிலும் வீண் விவகாரங்களிலும் ஈடுபட வாய்ப்பிருக்காது.
         சுயநலத்திற்காக பொருளீட்டுவதற்காக பணத்திற்கு பின்னால் போகும்  
மனிதர்கள் சொந்த சுகத்திற்காக உயிர் வாழ்ந்து இறக்கும் மனிதர்கள் சாரமில்லாத உலகில் எதை சாதித்தார்கள்.இவர்கள் ஐந்து அறிவு இரண்டறிவு ஓரறிவு படைத்த மிருக பட்சி ஜீவா ஜந்துக்களை விட கீழானவர்கள்.ஏனெனில் மிருக பட்சிகளுக்கு சூதும் பொய்யும் தெரியாது.பிறரை வஞ்சிக்க தெரியாது.
        பகவான் சம்பந்தப்பட்ட இல்லாத கதைகளும் பேச்சுக்களும் உலகவாழ்க்கைக்கு தேவையாக இருக்கலாம்.ஆனால் இறைவனை நெருங்க வேண்டும் என்று பக்தி செய்பவர்களுக்கு அவை வீணானவையே.பகவானின் திருநாமங்களும் குணங்களும் அடங்கிய பாட்டு அதுவே புண்ணியமும் மங்களமும் தரும்.இதுவே சாத்தியமானது.அந்த மகிமையை அறிந்தவர்களுக்கு ரம்யமாகவும் சலிக்காமலும் நித்தமும் புத்தம் புதிதாகவும் இருக்கும்.மனதிற்கு இன்பம் தரும்.அதை மனதில் பக்தியுள்ளவர்களே அனுபவிக்க முடியும்.ஆனந்தமாக அதை ஏற்றுக்கொள்பவர்களுக்கு துக்ககடலில் இருந்து கரை சேரும் உணர்வு ஏற்படும்.
       பகவானின் பஜனையில் கலந்து கொள்பவர்கள் சிரத்தையுடன் திருவிளையாடல் புராண கதைகளை கேட்பவர்கள் நிச்சயம் பக்தர்களாகி விடுவார்கள்.பாகவத புராண முடிவில் சுகதேவர் கூறுகிறார்.(தொடரும்)

Wednesday 7 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 25

திருநாவுக்கரசர் முன் அலங்காரமாக வந்து நின்றார்கள்.வில் போன்ற நெற்றி விளைநதிழுக்க கான அமுதம் பொங்கும் கொல்வய் கனிவாய் ஒளிவீச கவர்ந்திழுக்கும் கண்கள் மின்னலிட அப்பெண்கள் இன்னிசை பாடினார்கள்.கற்பக பூந்தளிர் போன்ற காலடிகளால் மோக நடிப்புடன் அவர்கள் நடனமாடவும் தொடங்கினார்கள்.அப்சரசுகள் அப்பரின் முன் நடனமாடி பூமாரியை அவர் மீது அள்ளி பொழிந்தார்கள்.அரம்பையர்கள் பலவிததாலும் அப்பரின் மனநிலையை கவர்ந்திழுக்கவும் குலைக்கவும் முயன்றார்கள்.ஆனால் சிவபெருமானின் திருவடிகளில் சிறிதும் அகலாத அன்பு செலுத்தும் பெருந்துரவியாரான அப்பரோ அந்த பேரின்ப நிலையிலேயே நினைவெல்லாம் நிலைத்திருக்க தமது சித்த நிலை சிறிதும் மாறுபடாமல் தம் திருதொன்டிலேயே நிலையாக நின்றார்.அவருக்கு மங்கையரும் சிவமாகவே தென்பட்டார்கள்.

          மனதில் வேறு ஆசைகளை வைத்துக்கொண்டு வெளிப்பார்வைக்கு கோவிலுக்கு சென்று பக்தி கொள்வது போல இருப்பது வெளிவேசமாகும்.பகவான் மீது அன்பு இதயத்தில் இருந்து வரவேண்டும்.உள்ளம் உருகி பாட வேண்டும்.உலக விசயங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் இறைவன் பக்தியார் உருவாகும் பரமானந்தத்தை அறிய மாட்டார்கள்.அது போல இறைவன் பக்தி என்ற தேனை குடித்த பக்தர்கள் உலகியல் விஷயங்கள் என்ற கரும்பு சாற்றை நோக்கி போக மாட்டார்கள்.
         "அவ்யாவ்ருத பஜனாத் "
          பக்தி பகவத் பிரேமையினால் வருகிறது என்பது உண்மை தான்.அது மாறாத பக்தியாக உருவாக வேண்டுமானால் அகண்ட பஜனை அதாவது இடைவிடாத பஜனை செய்ய வேண்டும்.
          இந்த மனம் மிக மோசமானது.இதில் மிருககுணமும் உண்டு.தேவ குணமும் உண்டு.இதை இழுத்து பிடித்து பகவான் திருவடிகளில் பதிய வைக்க வேண்டும்.இல்லையேல் நொடியில் அது வேறு விசயங்களை நோக்கி ஓடி விடும்.அதற்க்கு மனம் வைராக்கியம் அடைந்து பக்குவப்படவேண்டும்.
         தியானம்,பஜனை இன்று செய்தோம்,நாளை செய்யவில்லை என்று இருக்ககூடாது.அது தொடர்ச்சியாக நடைபெறவேண்டும்.
         கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் இதையே கூறுகிறார்.
        அனன்ய பக்தி கொண்டு என்னை என்றும் நினைப்பவர்களுக்கு நான் சுலபமாகிவிடுகிறேன்.ஏனெனில் அவர்கள் மிக உறுதியாக இருக்கிறார்கள்.
இறைவனை நினைத்து நினைத்து அகண்ட பஜனை செய்வார்கள்.
         அன்றாட வேலைகள் செய்யும் போதும் (ஸ்நானம்,போஜனம்)வேறு பல கடமைகள் செய்யும் போதும் பகவானின் திருநாமங்களை ஜபித்துக்கொண்டே இருப்பார்கள்.உயிர் மூச்சில் நாம ஜபம் கலந்து விடும்.(தொடரும்)

Tuesday 6 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 24

ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கும் ஆத்மா ஆனந்த ரூபமானது.அது அன்பு மயமானது.ஏனெனில் ஆத்மா,பரமாத்மா இறைவனின் அம்சம் தான்.இறைவன் பரமானந்த சொரூபமானவர்.பரம பிரேமை என்ற அன்புமயமானவர்.
         ஜீவனில் சித்தம் ஆசை,துக்கம்,கிலேசம் முதலிய வற்றை பற்றிக்கொள்ளும் போது அது கலங்கி போகிறது.அதில் தெளிவு ஏற்படாது.ஆதலால் துக்கத்தை தரும் ஆசைக்கு அடிமையாகி விடுகிறது.ஆதலால் சித்தத்தில் பரமாத்மனின் தெய்வீக சொரூபத்தின் ஒளி பிரதிபலிக்காமல் இருக்கிறது.அந்த ஆத்ம ஜோதி தெரிய வேண்டுமென்றால் விசயங்களை நோக்கி ஓடும் எண்ணங்களை இறைவன் பால் திருப்ப வேண்டும்.அதற்க்கு இரண்டு உபாயங்கள் இருக்கின்றன.மற்ற உலக விஷய ஆசைகளை துறக்க வேண்டும்.உலக விஷய சுகங்களில் ஈடுபட்டுக்கொண்டே பக்தி செலுத்த முடியாது.பற்றில்லாமல் உலகில் கடமைகளை செய்துகொண்டு பக்தி செய்ய  முடியும். ஏனெனில் இறைவன் ஒருவரே அன்புக்கும் ஆசைக்கும் உரியவர்.அவரிடம் மட்டும் பிரியம் வைக்க வேண்டும்.ஏனெனில் நான்,எனது என்று நினைக்கும் போது தான் அங்கு ஆசை உண்டாகிறது.பகவானின் பக்திக்கு முன் நான் என்பது எங்கே வரும்?நான் பகவானுக்கு சொந்தமாகிவிட்டேன் அல்லவா,எனது என்பதும் இல்லை,ஏனெனில் எனது என்பது உலகில் எதுவும் இல்லை.எனக்கு சொந்தமானது அனைத்தையும் அவர்க்கு அர்ப்பணித்து விட்டேன் அல்லவா.
          புலன் வழி சுகங்களில் மனதை செலுத்தினால் அவற்றில் மனம் சிக்கிக்கொள்ளும்.விசயதியாகம் என்ற சூத்திரத்தில் சொல்லப்பட்டது.பகவான் சம்பந்தமான விசயங்களை நாம சங்கீர்த்தன பஜனை வழிபாடு ஆகியவற்றிற்கு எதிரான விஷயங்கள்.
         மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணிப்பார்க்கும்போது மனதை பிரவிபெருங்கடலில் வீழ்த்திவிடும். ஆதலால் சான்றோர்களை சேவிக்கவேண்டும்.பக்தர்களோடும் நல்லவர்களோடும் நட்பு கொண்டு வாழவேண்டும்.முடிந்தவரை இது பகவானின் கட்டளை என்று நினைத்து பலனை கருதாமல் கடமைகளை செய்யலாம், அது தியாக வாழ்க்கைக்கு சமமாகும்.
            ஒரு சமயம் திருநாவுக்கரசர் மதுரையிலிருந்து புறப்பட்டு திருப்புவனம் ராமேஸ்வரம்,திருநெல்வேலி, திருகாளாப்பெர் முதலிய திருப்பதிகளை கண்டு வணங்கி ஆங்காங்கே திருப்பதிகங்களை பாடித்தந்து பாண்டியநாட்டை விட்டு சோழநாட்டை அடைந்து திருப்புகலூர்க்கு வந்து சேர்ந்தார்.. அங்கேயே தங்கி இருந்து பல திருப்பதிகங்களை பாடியவண்ணம் வழிபாடு செய்தார்.
          அவருடைய பற்றற்ற நிலையினை உலகுக்கு எடுத்துக்காட்ட சிவபெருமான் விரும்பினார்.அதனால் திருநாவுக்கரசர் உலவாரதிருப்பணி செய்யும் இடங்களில் எல்லாம் பரர்கற்களோடு   செம்பொன்னும் நவமணிகளும் தோன்றி விளங்கும்படி சிவபெருமான் அருள் செய்தார்.அப்பர் அவற்றை எல்லாம் பருக்கை கற்களோடு சேர்த்து கூட்டி உலவாரத்தில் ஏந்தி தடாகத்தில் வீசி எறிவார்.புல்லுக்கும்,கல்லுக்கும், பொன்னுக்கும் மணிக்கும் சொல்லை தவிர எவ்வித வேறுபாடும் இல்லை என்னும் பற்றுஅற்று நிலையில் இருந்தார்.அப்பரின் இந்த தூய துறவு நிலையை மென்மேலும் விளங்கசெய்ய பூம்புகலூர் புண்ணியனார் விரும்பினார்.
          அவருடைய திருவருளினால் விண்ணுலகத்து தேவதாசிகள் வானகத்தில் இருந்து இறங்கும் மின்னல் கொடிகள் போல மன்னுலகத்திர்க்கு   வந்தார்கள்.
                                                                                                               (தொடரும்)
                                                                

Monday 5 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி23

          இவர்கள் பக்திக்கு இருப்பிடமான இறைவனுடன் இரண்டற கலந்து விடுகிறார்கள்.மற்ற ஞானம் முதலிய விஷயங்கள் முக்கியமில்லாமல் போய்விடுகின்றன என்று நாரதர் கூறுகிறார்.
        "ஸ்வயம் பலரூபதேதி ப்ரஹ்ம குமாரா:"  
          சனகாதி முனிவர்களும் ஸ்ரீ தேவரிஷி நாரதரும் பக்தியால் தான் பக்தியின் உயர்ந்த நிலைக்கு போக முடியும் என்கிறார்கள்.பக்தியே சிறந்த பக்தி என்ற பலனை தருகிறது.ஆதலால் (அதுவே)பக்தி தாமே பலனாக இருக்கிறது.பக்தர்கள் பக்தியை வளைக்கவே மேலும் பக்தி செய்கிறார்கள்.அதாவது இறைவனை நேசிக்கிறார்கள்.பக்தி இயற்கையாகவே தாமாக வருகிறது.அதை விட சிறந்தது எதுவும் இல்லை.அது ஆண்டவனையும் வசப்படுத்தி விடுகிறது.
       "  ராஜ க்ருஹ போஜனாதிஷு ததைவ த்ருஷ்டத்வாத் 
ந தேன ராஜ பரிதோஷ: க்ஷ்தாசாந்திர்வா "
          அரசனின் அரண்மனையும் ராஜ போக உணவும் நன்கு அறிந்து கொள்ளும் போது அதை பற்றி முழு ஞானம் தான் ஏற்படுகிறது.ஆனால் அனுபவ பூர்வமாக உணர முடியாது.அதாவது அரசனின் அரண்மனை பற்றியும் அரசனை பற்றியும் அறிந்து கொண்டால் அரசனை மகிழ்விக்க முடியுமா?
          அரசன் அறங்காவலன் மிகுந்த படை பலம் பெற்று வலிமையானவன்.குடிமக்களுக்கு நன்மை செய்பவன் என்று தெரிந்து கொண்டால் அரசனிடம் நட்பு கொண்டாட முடியாது, அல்லது அரச போக உணவை அறிந்து கொண்டால் பசி தீராது.அது போல வேத சாஸ்திரங்களை படித்து இறைவனை தத்துவார்த்தமாக அறிந்து ஞானம் பெற்றாலும் அந்த இறை அனுபவம் கிட்டாது. இறை அனுபவம் தியானத்தாலும் யோகத்தாலும் மட்டுமே கைகூடும்.இறைவனை தியானித்துக்கொண்டு இருந்தால் பிரேமை பக்தி முற்றிய நிலை அடையும்.அதனால் உள்ளம் கரைந்து இறை அனுபவம் உண்டாகும்.
         பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்:
பக்தி மிக கொண்டு என்னை தொழுதால் நான் அவர்கள் உள்ளத்தில் குடியிருப்பேன்.அவர்களும் என்னுள் இருப்பார்கள்.
 "தஸ் மாத் சை(सै )வ க்ராஹ்யா முமு க்ஷூ பி " 
          பிறப்பு இறப்புகளில் இருந்து பற்று என்ற பந்தத்திலிருந்து விடுபட் வேண்டுமானால் பக்தியை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
         பிரேமை பக்தியோடு தன வாழ்க்கை யை இணைத்து கொண்டால் பகவானின் தெய்வீகத்தை பிரத்யட்சமாக உணரலாம்.மேலான பக்தியில் ஈடுபட தியாகராஜ சுவாமிகளும் புரந்தர தாசரும் ஆண்டவனை பிரத்யட்சமாக கண்டார்கள்.அவர் அருளை பெற்று சித்தி அடைந்தார்கள்.யோகிகளும் முனிவர்களும் சிரமப்பட்டு கிடைக்கும் முக்தி பக்தர்கள் முன் அடிமை போல வந்து விடுகிறது.ஆனால் பக்தர்களோ முக்தியை விரும்ப மாட்டார்கள்.பகவானை தான் விரும்புவார்கள்.இப்படிப்பட்ட உயர்ந்த நிலைக்கு கொண்டு போகும் பக்தி மார்க்கத்தை விட்டு வேறு மார்க்கத்தை ஏன் பின்பற்ற வேண்டும்?
      "தஸ்யா ஸாதனானி காயன்த்யா சார்யா:"  
கர்மயோகத்தையும் ஞானத்தையும் விட பக்தியே சிறந்தது என்று கூறிவிட்டு பக்தி யோகத்தை கூறும் நாரதர் பக்தி மார்க்கத்தை பின் பற்றும் ஆச்சாரியர்கள் உபதேசிக்கும் உபாயங்களை கூறுகிறார்.
       " தத்து விஷயத்யாகாத் ஸ ங்கத்யாகாச்ச"
பக்தியோக வழியில் செல்ல வேண்டுமானால் ஆசைகளை தூண்டும் விசயங்களை துறக்க வேண்டும்.அந்த இன்பம் என்று கருதப்படும் விசயங்களில் ஒட்டுதல் இல்லாமல் இருக்க வேண்டும்.(தொடரும்)

Sunday 4 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 22

அந்த அம்மையாருக்கு ஓர் உபாயம் தோன்றியது.உடனே அவர் தம் கணவரை நோக்கி" நம் வறுமை நீங்குவதற்காக இன்று பகல் பொழுதெல்லாம் வயலில் செந்நெல் விதைத்தோமே அவவிதைகள் இப்போது சேற்றில் ஊறி முளை விட்டிருக்கும் அவற்றை ஒரு கூடையில் அள்ளிக்கொண்டு வந்தால் அவற்றை கொண்டு கூடியவரை சோறு சமைக்கலாம்.இதை தவிர வேறு வழி எனக்கு தோன்றவில்லை".என்றார்.
          தம் மனைவி கூறிய வார்த்தைகளை கேட்டதும் நாயனாருக்கு பெருஞ்செல்வம் பெற்றது போன்றதொரு பெரு மகிழ்ச்சி போங்க வயலில் விதைத்த செந்நெல்லை தோண்டி எடுத்துவர புறப்பட்டார்.
        (விதை நெல்லை விதைக்கே வேளாளர்கள் பயன் படுத்துவார்களே தவிர விதையை குத்தி சாப்பிடும் வழக்கம் இல்லை)
         வானம் பெருகி பெருமழை பொழிந்து கொண்டிருந்த அந்த நள்ளிரவில் எங்கும் ஒரே இருள் சூழ்ந்திருந்தது.வழி திசை கண் மண் எதுவும் தெரியாத கும்மிருட்டு சூழ்ந்த உலகத்தவர் அஞ்சி நடுங்கும் படியான அந்த நடு சாமத்தில் மாறனாரோ உள்ளூர சிவனடியார் அன்பு ஊக்க தூண்டுவதால் ஓர் கூடையை தமது தலையில் கவிழ்த்திக்கொண்டு வயலை நோக்கி நடந்தார்.திசை தெரியாத கருமிருள் படலதினூடே மாறனார் தமக்கு பழக்கமான வழித்தடத்தை குறிப்பால் உணர்ந்து காலினால் தட்டி தடவியவாறு வயலை அடைந்தார்.அங்கு வயலில் மலை நீரில் மிதக்கும் செந்நெல் முளைகளை தம் கையினால் சேகரித்து அள்ளி அள்ளி தம் கூடை நிறைய நிரப்பினார்.பிறகு அந்த பெருங்கூடையை தம் தலை மீது தூக்கி சுமந்து கொண்டு வீடு நோக்கி வேகமாக திரும்பி வந்தார்.
         அவர் வருகையை பேராவலுடன் எதிர்பார்த்து அவர் மனைவியார் தம் வீட்டு வாசலிலேயே காத்திருந்தார்.நாயனார் வந்ததும் அவரது தலையிலுள்ள கூடையை அன்புடன் வாங்கிகொண்டார்.நெல் முளைகளில் படிந்திருந்த சேறு போகும்படி அவற்றை நன்றாக நீரில் கழுவி ஊற்றினார்.நாயனாரை நோக்கி அடுப்பில் தீ மூட்ட விறகு இல்லையே என்றார்.மாறனாரோ தம் வீட்டின் கூரையோடு சேர்த்து கட்டப்பட்டிருந்த கிலமான வரிச்சு கொம்புளை வெட்டி அடுப்பில் தீ மூட்ட கொடுத்தார்.அதன் பின் தம் வீட்டு விருந்துக்கு வந்திருக்கும் சிவனடியார் வழி நடந்த இளைப்போடும் வருந்தும் பசியோடும் துன்புருவாரே என்று நினைத்து அன்புடன் தன் வீட்டு கொல்லை புறத்திற்கு சென்று அங்கு குழிகளில் முளைத்திருக்கும் சிறு கீரைகளையும் பூசணி முதலியவற்றின் புன்செய் குரும்பயிர்களையும் கையினால் தடவி வேரோடு பறித்துக்கொண்டு வந்து மன மகிழ்வோடு மனைவியாரிடம் தந்தார்.அவர் சுத்தமான நீர் விட்டு கழுவி புனிதமான பாத்திரத்தில் வைத்து தன் கைதிறமையினால் வகையாக கறி சமைத்தார். இனி சிவனடியாருக்கு இங்கே விருந்து பரிமாறி திருப்தியாக அமுது செய்விப்போம் என்றார்.
           சிவனடியாரோ ஒருபுறம் உறங்குபவர் போல படுத்திருந்தார்.எவராலும் உணர முடியாத ஒருவரான அப்பெருமானுக்கு விருந்து தயாராகிவிட்டதை உணர்த்த விரும்பி மாற நாயனார் அடியாரின் முன்னே சென்று துயிலை நீக்கினார்.
         பெரியவரே எழுந்தருள்க மாயை இருளில் அழுத்திக்கிடக்கும் அடியேன் உய்யும் படி எழுந்தருளி இங்கு திருவமுது செய்ய அருள்க என்று மாற நாயனார் அன்புடன் அழைத்தார்.உடனே சிவனடியார் வேடந்தாங்கிவந்த சிவபெருமான் சோதி வடிவமாய் எழுந்தருளினார். அந்த சோதி வடிவமான காட்சியை கண்ட நாயனாரும் அவரது மனைவியாரும் திகைத்து மயங்கி குழம்பினார்கள்.சிவபெருமான் மனம் மகிழ்ந்து ரிஷப வாஹனத்தில் உமாதேவியாருடன் அவர்களுக்கு காட்சி தந்தருளினார்.(தொடரும்)

Saturday 3 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 21

இதற்க்கு உதாரணமாக அரிவாட்டாய நாயனார் கதையும் இளையான்குடி மாற நாயனார் கதையும் கூறலாம்.உளவு தொழில் புரியும் வேளாளர் குலத்தில்,அக்குலத்தினர்  செய்த தவத்தினால் மாறனார் என்னும் பெயருடன் ஒருவர் சிறந்து விளங்கினார்.மாறனார் படிப்பறிவும் ஞானமும் இல்லாதவர்.பக்தியால் மட்டும்இவருக்கு  இறைவனருள் எப்படி கிடைத்தது என்பதை இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.

                                            

          மாற நாயனார் தம் இல்லத்திற்கு எந்த நேரத்தில் சிவனடியார்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு கொடுப்பதையே பெருந்தொண்டாகவும் தம் பிறவி பயனாகவும் கருதி வாழ்ந்து வந்தார்.இவ்வாறு அவர் வாழும் நாளில் சிவபெருமான் ஓர் எண்ணம் கொண்டார்.சிவனடியாருக்கு உணவிடும் திருத்தொண்டை மாறனார் செல்வம் மிகுந்திருக்கும் காலத்தில் செய்வதோடல்லாமல் வறுமை வந்தடைந்து துன்புறுத்தும் காலத்திலும் அத்திருதொண்டை தளராது செய்யும் வல்லமை கொண்டவர் என்பதை உலகுக்கு உணர்த்த கூத்த பெருமான் விரும்பினார்.அதனால் மாறனாரின் செல்வ வளம் மெல்ல மெல்ல தேய்ந்து மறைந்து போகும்படி திருவுல்லம்  கொண்டார். வளமான செல்வம் நாள் தோறும் மாறி மாறி மறைந்ததும் வாட்டும் வறுமை நிலை மாறனாரை வந்தடைந்தது.ஆயினும் அடியார்களுக்கு சோறிடும் தொண்டில் அவர் சிறிதும் சலிப்பும் தளர்ச்சியும் கொள்ளாமல் குறைவற செய்து வந்தார்.நாளுக்கு நாள் வறுமை வளர வளர அவர் தம் வீட்டிலுள்ள பொருட்களை விற்றும் பிறகு தம்மையே விற்று கொடுக்கத்தக்க அளவுக்கு கடன்கள் வாங்கியும் சிவனடியார்களுக்கு உணவிடும் திருத்தொண்டை சிறிதும் வழுவாமல் அன்போடு செய்து வந்தார்.
          இவ்வாறு நிகழ்ந்து வரும் நாளில் மாறனார் திருத்தொண்டின் பெருமை இத்தகையதென இவ்வுலகிற்கு எடுத்து காட்டுவதற்க்காக சிவபெருமான் ஒரு சிவயோகி போல திருவேடம் தாங்கி ஒரு மழை காலத்தில் நள்ளிரவில் மாற நாயனார் வீட்டுக்கதவை தட்டினார்.அச்சமயம் மாறனார் எந்த உதவியும் கிடைக்காததால் உண்ணுவதற்கு கூட உணவில்லாமல் பல நாள் பட்டினி கிடந்தாலும் பெரும் பசியை சமாளித்துக்கொண்டு இரவில் வெகுநேரம் வரை கண் விழித்திருந்தார். 
          தம் இல்லத்திற்கு சிவனடியார் வருகையை உணர்ந்து கதவை திறந்தார்.சிவனடியார் நிற்பதை கண்டு உள்ளம் மகிழ்ந்து வரவேற்று விருந்தினராக அன்போடு உள்ளே அழைத்து சென்றார்.பின்பு மழையால் நனைந்திருக்கும் சிவயோகியாரின் உடம்பிலுள்ள ஈரத்தை துடைத்து நல்லதொரு இடத்தில அடியாரை அமர செய்தார்.
          நாயனார் தம் மனைவியாரிடம் சென்று தம் வீட்டிற்க்கு வந்திருக்கும் சிவனடியார் மிகவும் பசித்திருக்கிறார் என்ன செய்வது? என்று கேட்டார்.நமக்கு உண்ண உணவில்லை என்றாலும் அம்மையப்பருக்கு இனியவரான சிவனடியாருக்கு நாம் இனிமையாக உணவிட வேண்டுமே அதற்க்கு என்ன வழி என்று கேட்டார்.அவரது மனைவியாரோ இன்னும் வருத்ததோடு நம் வீட்டில் எதை வைத்து எப்படி சமைப்பது?விற்பதர்க்கோ வீட்டில் ஒரு பொருளும் இல்லை.அண்டை அயலாரிடம் கடன் வாங்கலாமென்றால் அதற்கும் வழி இல்லை.இனியும் நமக்கு கடன் தருவார் யாரும் இல்லை.பொழுதும் போய் இரவு வெகு நேரம் ஆகிவிட்டது என்று கூறி திகைத்தார்.  (தொடரும்)
          

Friday 2 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 20

பகவத் பக்தனான பிரகலாதன் கூறுகிறார்:
          தேவரிஷி முனிவர்களாலும் தன் புலமை மிக்க தெய்வீக துதிகள் மூலமாகவும் பகவானை மகிழ்விக்கமுடியவில்லை என்றால் அசுர குணம் படைத்த என்னால் எப்படி பகவானை துதிக்க முடியும்?
         உண்மையில் செல்வம்,உயர்குடியில் பிறப்பு, அழகு,தவம்,கல்வி,மிகுந்த ஆற்றல்,செல்வாக்கு,பலம்,பேரறிவு,பௌருஷம் என்ற ஆண்மை,யோகம் இவை எல்லாம் ஒரு மனிதனிடம் இருந்தாலும் பகவானை ஆராதனை செய்து மகிழ்விக்க முடியாது.பக்தியால் மட்டும் தான் பகவான் மனமிரங்கி வருவார்.அறிவில்லாத கஜேந்திரனுக்கும் கருணையுடன் அவர் அருள் புரிந்தவர் அல்லவா?உண்மையில் பகவான் பற்று பகை அற்றவர். அவருக்கு அனைவரும் சமமானவர்கள்.பாமரர்,படித்தவர் அனைவரையும் கடைதேற்றுபவர்.கல்வியிலும் வலிமையிலும் கர்வம் கொண்ட அசுர குணம் படைத்தவர்களை தண்டித்து தன்னுடன் சேர்த்துக்கொள்வார்.எளிய பக்தனுக்கோ சீக்கிரம் அருள் கிடைத்து விடும்.ஏனெனில் நீயே கதி என்று அவன் சரண் அடைந்து விடுகிறான்.அவனுக்காக மகா வல்லவனான இறைவன் தன் மகா மகிமையை விட்டு இறங்கி வந்து சிறுமை அடைந்து பக்தனுக்கு சமமான எளியவனாகி விடுகிறார்.
          இறைவன் முன் பக்தன் கதியில்லாமல் ஏழையாக இரக்கதிற்குரியவனாக நினைத்து அவர் முன் மண்டியிட்டு கதறுகிறான்.அவன் தன்னை பாவியாகவும் இழிவாகவும் நினைத்து பிரார்த்தனை செய்கிறான்.இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்து ஊன் உருக உள்ளம் உருக பக்தி செய்கிறானென்றால் அவனே பரம பக்தன், உண்மையான பக்தனிடம் ஆணவம் இருக்காது.பகவானின் தரிசனம் கிடைக்க வேண்டும என்று ஏங்குபவனிடமே பகவான் நிச்சயம் வருவார்.
         " தஸ்யா க்ஞானமேவ ஸாதன மித்யேகே "  
          பக்தி எப்படி ஏற்படுகிறது? அதற்கு காரணம் என்ன? உலகில் ஒருவர் மீது காரணமின்றி அன்பு உண்டாகிறது என்று கூறினாலும் அவசியம் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.பக்திக்கு ஞானமே காரணமாகிறது என்று சில ஆச்சாரியர்கள் கூறுகிறார்கள்.இறைவனை பற்றி நன்கு அறிந்து கொள்வதே ஞானம்.அந்த ஞானமே இயக்கம் கருவி என்று கூறுகிறார்கள்.
          என்னுடைய நாதன் அனைத்திற்கும் ஆதாரமாக மகேஸ்வரனாக இருப்பவர்.அருள் நிறைந்தவர்.இந்த ஞானம் உண்டாகும்போது மரியாதையும் பிரேமை பக்தியும் உண்டாகிறது.பிரியம் வரும் போது பக்தி ஏற்படுகிறது என்பதோ உண்மை தான்.
         பக்தி மனதில் ஏற்படுவதற்கு ஞானம் அவசியம் இல்லை. என்று நாரதர் கூறுகிறார்.
         "அன்யோன்யாச்ரயத்வமித்யன்யே"  
வேறு பல ஆச்சாரியர்கள் கூறுகிறார்கள்:
          ஞான தத்துவத்தை அறிந்த பின் இறைவன் மீது பக்தி உண்டாகிறது.அதனால் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது.அன்பால் பக்தி பெருக்கெடுத்து வரும் போது ஞானமும் தத்துவமும் அங்கு முக்கியத்துவம் அடைவதில்லை.அவற்றை சிந்திக்க வாய்ப்பில்லாமல் போகிறது.அன்பால் விளைந்த பக்தி செய்யும் பக்தனும் ஞானியாக இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. (தொடரும்)

Thursday 1 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 19

         பக்தி செய்ய எந்த தகுதியும் வேண்டியதில்லை.உதாரணமாக வால்மீகி முனிவர் ஒரு கொள்ளைக்காரராக இருந்தார்.கண்ணப்பநாயனார் ஒரு வேடுவனாக இருந்தார்.இவர்கள் செய்த பக்தி, தவம் செய்த முனிவர்களையும் மிஞ்சக்கூடியது.துளசிதாசர் செய்த ராம பக்தியை விட,ராம நாமத்தை விட சிறந்தது எதுவும் இல்லை.
        பல காலம் சிரமப்பட்டு ஞானம் பெற வேண்டும்.யாகம் செய்வதற்கோ பொருள் செல்வம் வேண்டும்.கடினமான யோக பயிற்சியில் வெற்றி பெற யோகாசனம், பிரணாயாமம் முதலியவற்றை சரியாக செய்ய வேண்டும்.பக்தி யோகத்தில் இவை எதுவும் தேவை இல்லை.அன்புடன் ஒரு பூவை சாற்றினால் போதும்,அல்லது தமக்கு கிடைத்த உணவை படைத்தாலே போதும்,பிரார்த்தனை செய்தாலே போதும். பாகவத புராணத்தில் பகவானே கூறுகிறார்:
"ந ஸாதயதி மாம் யோகோ ந ஸாங்க்யம் தர்ம உத்தவ
நஸ்வாத் யாய ஸ்த பஸ்த்யாகோ யதா பக்திர் மமொர்ஜிதா 
பக்த்யா ஹமேகயா க்ராஹ்ய:ச்ரத்தயாத்ம பிரிய: ஸதாம் பக்தி 
புனாதி மன்னிஷ்டா,ச்வபாகானபி ஸம்பவாத் "
யோகம்,ஞானயோகம்,தர்மம்,ஸ்வாத் யாயம் (வேதங்களை படித்து தத்துவார்த்தமாக பாராயணம் செய்வது)யாகம்,தவம்,தியாகம் ஆகியவற்றால் கூட நான் சீக்கிரம் வசப்பட மாட்டேன்.சான்றோர்களின் பிரிய ஆத்மாவாக இருக்கும் நான் சிரத்தை பிரேமையுடன் அன்பான பக்திக்கு மட்டும் கட்டுப்படுவேன்.பக்தன் அவன் புலயனாக இருந்தாலும் தூய பக்தியால் சித்தி பெற்று விடுவான்.இதற்க்கு உதாரணம்:
   ஸ்ரீ கண்ணப்ப நாயனார் அவர்கள் பன்றிக்கறியை சமைத்து பிரசாதமாக சிவபெருமானுக்கு படைத்தார்.அவர் செய்த பக்தி ஈடு இணையற்றது.
           பகவத்கீதையில் அர்ச்சுனனுக்கு மட்டுமே  தன் விசுவரூப தரிசனத்தை தரிசிக்க செய்து கூறுகிறார்.:
          அர்ச்சுனா நீ கண்ட எனது விசுவரூபதரிசனம்காணக்கிடைக்காதது.மிகவும் அரிது.வேதங்களை பாடி உணர்ந்து பாராயணம் செய்தாலும் யாகங்கள் பல செய்தாலும் தவத்திலும் தானத்திலும் நீ இப்போது கண்டது போல காண முடியாது.ஆனால் என் மீது அனன்ய பக்தி கொண்டால் தான் இது போல் தரிசனத்தை பெற முடியும்.எனது உண்மை தத்துவத்தை அறிய முடியும்.என்னுள் பிரவேசிக்க முடியும்.
         " பல ரூபத்வாத் "
          பக்தி என்பது முழுமையாக பிரதானமாக இருந்து பலன் தர கூடியது.அதாவது இங்கு பிரேமை பக்தியே முழுமையாக இருக்கிறது.இங்கு பக்தி சாதனமாக இல்லை.
      புனிததலயாத்திரை,ஞானம்,வைராக்கியம்,யோகம்,கடமை,தர்மம்(அறம்)விரதம்,உபாசனை,தானம்,புலனடக்கம்,யம நியமங்கள்,ஜபம்,தபம்,யாகம்,அஹிம்சை, குருசேவை,கல்வி, பணிவு,விவேகம்,புகழ்,வேதங்களை கற்று உணர்தல்,இவை எல்லாம் ஆண்டவனை அடைவதற்காக துணை புரியும் சாதனங்கள். பக்தியை அடிப்படையாக கொண்டு தான் இந்த சாதனங்கள் பலன் தருகின்றன.ஆனால் பக்தி இந்த அனுஷ்டானங்களில் துணையாக இருக்கிறது.பக்தி இல்லாமல் எந்த ஜப தபங்களிலும் வெற்றி அடையாது.அவ்வாறு இருப்பதனால் இங்கு நாரதர் மற்ற சாதனங்களுக்கு முக்கயத்துவம் கொடுக்காமல் பக்திக்காகவே பிரேமை பக்தியை உருவாக்க வலியுறுத்துகிறார்.ஆதலால் இங்கே கூறப்படும் பக்தி எந்த துணை சாதனமும் அல்லாமல் முழுமையான பக்தியாகவே கூறப்படுகிறது.
 "ஈச்வரஸ்யாப்யபிமானத்வேஷித்வாத் தைன்யப்ரியத்வாச்ச"   
          பக்தி எப்படி சிறந்ததாக உருவெடுக்கிறது என்பதை கூறுகிறார்கள்.
         யோக சாதனை செய்யும் சாதகர்கள்,சாதரணமாக கீழ் நிலையில் இருக்கும் மனிதர்களை விட நாம் மேம்பட்டவர்கள் வலிமை உள்ளவர்கள் என்று கர்வப்பட்டு கொள்வார்கள்.ஆனால் பகவான் நாமத்தை பக்தியுடன் பஜனை செய்யும் பக்தர்களோ கர்வமில்லாமல் இருப்பார்கள்.(தொடரும்)

Wednesday 30 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 18

ஸ்ரீகிருஷ்ணன் பதிலுரைக்கிறார்:
         பிரிய சகிகளே ஒருவர் அன்பை காட்டினால் தான் மற்றவர் அன்பாக இருப்பது அது சுய நலத்தின் அடிப்படையில் உருவாகிறது.அது ஒன்றை கொடுத்து ஒன்றை வாங்குவது போல வியாபாரமாகிறது.அதில் உள்ளார்ந்த நட்பும் இருக்காது.தர்மமும் இருக்காது.அந்த அன்பு நிலைத்தும் இருக்காது.ஏனெனில் காரியம் முடிந்தவுடன் அவர்கள் விலகிசெல்வார்கள்.
         இரண்டாவது ரகத்தினர் அன்பு செலுத்தாமல் இருந்தும் அன்பாக இருப்பார்கள்.சான்றோர்,குரு,தாய்,தந்தையர்கள் இவர்கள்.சுபாவத்திலேயே பாசமுள்ளவர்கள் இதயத்தில் அன்பு சுரந்து கொண்டே இருக்கும்.அன்பு செலுத்தாவிட்டாலும் அவர்கள் நன்மைக்காக பாடுபடுபவர்கள்.மகான்கள் அல்லது உண்மையான நண்பர்களும் இருக்கலாம்.இவர்களின் அன்பில் சத்தியமும் தர்மமும் இருக்கும்.
          மூன்றாவதாக எவ்வளவு அன்பு செலுத்தினாலும் அன்புடன் இருக்க மாட்டார்கள்.முற்றும் துறந்த யோகிகளுக்கு அன்பும் கருணையும் கூட தடையாக இருக்கும்.அவர்கள் இறைவனை அனைத்துயிர்களிலும் காண்பார்கள்.அவர்கள் அன்பு பாசம் ஆகிய வலையில் விழாமல் பற்றற்று இருப்பார்கள்.இவர்களும் யோகா சாதனையில் ஈடுபட்ட சாதகர்களும் எவரிடமும் எதையும் விரும்பாமல் பற்று என்ற அன்பை பிறரிடம் காட்ட மாட்டார்கள்.
          வேறொரு ரகத்தினர் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்.தம்மிடம் யார் அன்பு செலுத்துகிறார்கள் என்பதை அறிய மாட்டார்கள்.மற்றொரு ரகத்தினர் உபகாரம் செய்து தன்மீது அன்பு கொண்டவர்களிடமும் பிரியமாக இருக்க மாட்டார்கள்.இவர்கள் கல் நெஞ்சக்காரர்கள்.அல்லது துரோகிகள்.நெஞ்சில் பகை வளர்த்துக்கொண்ட பகையாளிகள் அல்லது திருடர்களாகவும் தீயவர்களாகவும் இருப்பார்கள்.
          கோபியர்களே மேற்சொன்ன எல்லாவித அன்பும் என்னில் பொருந்தாது.இறைவன் உயிர்களிடம் செலுத்தும் அன்பு என்ற அருள் ஒப்பற்றது.அதற்க்கு எதுவும் ஈடாகாது.இறைவன் அருள் எங்கும் ஒரே மாதிரி தான் பொழிகிறது.இறைவன் அருளை பெறுவதற்காக பக்குவப்படுவதர்க்காக வைரம் போல பக்தர்கள் பட்டை தீட்டப்படுகிரர்கள்.நான் உங்களை விட்டு பிரியும் போது அது உண்மையான பிரிவு அல்ல.என்னில் மேலும் மேலும் அதிக அன்பும் ஏக்கமும் பெருகத்தான் நான் திடீரென்று மறைந்து போகின்றேன்.
"பொக்கிசத்தை அடைந்த பின் அது தொலைந்து போனதும் அதில் மிகுந்த பற்று ஏற்படுகிறதல்லவா?அது போல நீங்கள் என்னை மறக்காமல் இருப்பீர்கள்.எனக்காக நீங்கள் குடும்பத்தையும் வேத சாஸ்திர கடமைகளையும், ஆசைகளையும், உறவினர்களையும் கூட துறந்து என்னிடம் சரணடைந்து விட்டீர்கள்.மேலும் தன் அதிஷ்டத்தை பற்றியும் அழகை பற்றியும் கர்வம் கொள்ளாமல் இருக்க உங்கள் எதிரில் நானும் என் அருளும் சுலபமானவை அல்ல என்று அறிவுருத்துவதர்காகவே நான் மறைந்து போனேன்.ஆதலால் நீங்கள் என் அன்பில் குற்றம் காணாதீர்கள்.எனக்காக சாஸ்திர சம்பிரதாயங்களை தகர்தெறிநதீர்கள்.யோகிகளாலும் அறுக்க முடியாத குடும்ப பந்த பாசங்களை அறுத்தெறிந்து விட்டீர்கள்.என் மீது தூய அன்பை வைத்தீர்கள்.சித்தத்தில் இமை பொழுதும் நீங்காது எனது இனிய நினைவில் வாழ்ந்து அளவு கடந்த பக்தி செய்து தியாகம் செய்து என்னை கடனாளியாக்கி விட்டீர்கள்.அந்த கடனை இறவா வாழ்வு  பெற்று தெய்வீகதாலும் முடிவில்லா காலத்திலும் என்னால் தீர்க்க முடியாது.பரந்த மனம் கொண்டு எல்லையற்ற பிரேமையினால் என்னை ஆட்கொண்டு நீங்கள் தான் என்னை கடனில் இருந்து விடுவிக்க வேண்டும்.
" ஸாது கர்மக்ஞான யோகேப்யோ அப்யதிகதரா "
அந்த பிரேமை பக்தி,கர்ம யோகத்தை விட, ஞான யோகத்தை விட சிறந்தது.எளிதானது.நிச்சம ஞானயோகமும் கர்மயோகமும் யோகமும் மற்ற எல்லா வழிகளும் ஆண்டவனிடம் கொண்டு சேர்கின்றன.ஆனால் இவற்றை சரியாக அனுஷ்டிககாமல் நடுவில் சில தவறு நடந்தாலும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியது தான்.மேலும் இவற்றை கடைபிடிக்க பல யம நியமங்களை அனுசரிக்க வேண்டும்.(தொடரும்)

Tuesday 29 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 17




தவசிகளுக்கு எல்லாம் உன் திருவடிகளை தந்தாய். லக்ஷ்மி தேவிக்கும் உன் திருவடிகளை தந்தாய்.என்று உன் திருவடிகளை தொட்டு வணங்கினோமோ அன்றே எம்மை ஆட்கொண்டாய்.மற்ற விசயங்களை எம்மால் சிந்திக்க முடியவில்லை.லக்ஷ்மி தேவி உன் திருமார்பில் இடம் பெற்று வீற்றிருந்தாலும் துளசியும் மற்ற பக்தர்களும் பெரும் பாக்யமுடன் கொண்டாடும் நிந்தன் பாட தூசி யை நமக்கு கிடைக்காதா என்று விரும்புகிறார்கள்.நாங்கள் அதை விரும்பினால் என்ன தவறு?உன் கருணை கடாட்சம் நம் மீது விழாதா என்று தேவர்களும் ஏங்குகிறார்கள்.
          நீ நிச்சயம் இடையர் குலத்தில் பிறந்த நந்தகோபன் மகான் அல்ல.நீ சகல உயிர்களின் தேகத்தில் உறையும் அந்தராத்மாவாக, சர்வசாட்சியாக இருப்பவன்.நீ பிரம்ம தேவர் கேட்டுக்கொண்டதால் மாந்தர்களை கடைதேற்ற வந்த தெய்வம் நீ.
        இவ்வாறு கோபிகை பெண்களுக்கு இறைவன் மீது கொண்ட பக்தி மிகுதியால் ஞான திருஷ்டியும் வந்து விடுகிறது.
   "தத் விஹீனம் ஜாராணாமிவ" 
         உலகியலில் ஒரு பெண்ணோ ஆணோ ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டினால் அதன் பின்னால் பல விசயங்கள் ஒளிந்து இருக்கும்.எந்த அன்பும் பலனை எதிர்பாராமல் உருவாகாது.பெண் ஒரு ஆணை காதலித்தால் அவன் தன்னை ஆதரிக்க வேண்டும் .ஆசைகளை நிறைவேற்றி வைக்க வேண்டும்.வாழ்நாள் எல்லாம் தமக்கு துணையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பல பலன்களை எதிர்பார்ப்பாள். அது போல ஆணும் அவனுக்கு தகுந்த பல லாபங்களை எதிர்பார்ப்பான்.இது போல உலகியல் காதலுக்கு முற்றிலும் எதிரானது இறைவன் மீது செலுத்தப்படும் பக்தி அல்லது பிரியம்.அதையே கோபிகை பெண்கள் செய்தார்கள்.ஸ்ரீ கிருஷ்ணனால் அவர்களுக்கு ஆகவேண்டியது எதுவும் இல்லை.அந்த தூய பிரேமை பக்திக்கு உலகியல் காதல் ஈடாகாது.அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணனை நினைத்தாலே பரவச நிலை ஏற்பட்டது.அந்த பரவச நிலை ஏற்பட்டது.அந்த பரவசநிலை யோகிகளுக்கு மட்டும் கிடைக்க கூடியது.கோபிகை பெண்கள் மோட்சத்தையும் விரும்பவில்லை.இந்த கிருஷ்ண பக்தி தான் சுக தேவ முனிவர் பரீட்சித் மன்னன் முக்தியடைய,நற்கதியடைய பாகவத புராண கதை மூலமாக சொன்னார்.
          "நாஸ்த்யேவ தஸ்மின்ஸ்தத்ஸுகஸுகித்வம் "
உலகில் மக்கள் தன் சொந்த லாபத்தை வைத்து ஒருவர் மீது ஒருவர் அன்பு கொள்வார்கள்.மற்றவர் க்ஷேம லாபத்தை பற்றி நினைக்க மாட்டார்கள்.கண்ணப்ப நாயனார் போல கோபிகை பெண்கள் கிருஷ்ணனுக்காக அவனை மகிழ்விக்க எதையும் இழக்க தயாராக இருந்தார்கள்.அதில் தான் சந்தோசம் அடைந்தார்கள்.அவர்கள் மனம்,தேகம்,அறிவு,செல்வம்,உயிர் அழகு எல்லாம் தன் அன்பன் கிருஷ்ணனின் பூஜை பொருள்களாக கருதினார்கள்.பாகவத புராணத்தில் கோபியர்க்கும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் இடையே நடந்த சம்பாஷனை அனைவரும் அறியக்கூடிய ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறது.
கோபிகை பெண்கள் கூறுகிறார்கள்:" கிருஷ்ணா எங்கள் கேள்விகளுக்கு முதலில் நீ பதில் கூறவேண்டும்.உலகில் சில பேர் அன்பு செலுத்தினால் தான் பதிலுக்கு அன்பு செலுத்துகிறார்கள்.சிலர் அன்பு செலுத்தாவிட்டாலும் அவர்களை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள்.சிலர் இருவரில் எவருமே அன்பை பரிமாறிக் கொள்வதில்லை. இந்த மூன்று ரகமானவர்கள் யாரை உனக்கு பிடிக்கும்? யாருடைய அன்பை உயர்வாக எண்ணுகிறாய்? (தொடரும்)
 

"