விஷ வேகம் என் தலைக்கு ஏறி என்னை சாய்த்து விடுமே ! அதற்க்குள்ளாக நான் கொய்த இந்த வாளைக்குருத்தை வேகமாக கொண்டு போய் கொடுப்பேன்.நிகழ்ந்ததை ஒருவரிடமும் சொல்ல மாட்டேன்.பெரியவர் போஜனம் செய்தருளல் வேண்டும்.என்று நினைத்து வீட்டினுள் புகுந்து தன தாயிடம் வாழை குருத்தை கொடுத்து மயங்கி சுருண்டு விழுந்தான்.மகனின் கையில் உதிரம் வடிவத்தையும் உடலின் குறிகளையும் கண்டு விஷம் தீண்டியதால் மாண்டுவிட்டான் என்று உணர்ந்து கொண்டு விட்டார்கள்.ஆனாலும் அவர்கள் சிறிதும் மனம் கலங்காமல் திருநாவுக்கரசர் போஜனம் செய்வதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்தார்கள்.அருமை புதல்வனின் சவத்தை ஒரு பாயில் வைத்து சுற்றி மூடி வீட்டின் ஒரு புறத்தில் மறைத்து வைத்தார்கள்.பின்பு பெரியவர் அமுது செய்ய காலதாமதம் ஆகிறதே என்று பரபரப்போடு இல்லை விரித்து சோறு காய்கறிகளெல்லாம் அழகுற வைத்து விட்டு திருநாவுக்கரசர் சுவாமிகளிடம் வந்து வணங்கி எழுந்து நாங்கள் பகவான் அருள் பெற்று பாக்கியசாலி யாக திருவமுது செய்து எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார்கள்.
திருநாவுக்கரசர் எழுந்து கை கால்களை கழுவி வேறொரு ஆசனத்தில் அமர்ந்து இலையில் உணவிற்கு முன் வெந்திருநீறு பூசிக்கொண்டார்.பிறகு அவர் அப்பூதியடிகளுக்கும் அவரது மனைவியாருக்கும் திருநீறு வழங்கினார்.அவர் புதல்வர்களுக்கும் திருநீறு கொடுக்கும் போது உங்கள் மூத்த மகனையும் அழையுங்கள் விபூதி சாத்த வேண்டும்.என்றார்.அப்பூதியடிகள் நிகழ்ந்ததை ஒன்றும் சொல்லாமல் "இப்போது இங்கு அவன் வரமாட்டான் என்றார்." இதை கேட்டதும் அப்பர் சுவாமிகளுக்கு இறைவன் அருளால் ஒருவித தடுமாற்றம் உண்டாகியது.அவர் அப்பூதியடிகலாறை பார்த்து இவ்வார்த்தையை எம் உள்ளம் தாங்காது.அவன் என்ன செய்தான் நீங்கள் உண்மையை சொலுங்கள்.என்றார்.உடனே அப்பூதியடிகள் உடல் நடுங்கி பயந்தார்.உண்மையை சொன்னால் பெரியவர் அமுது செய்வதற்கு இடையுறு நேரிட்டு அப்பாக்கியத்தை இழக்க நேரிடும் .ஆனால் மாதவர் கேட்கும் போது உண்மையை மறைக்காமல் சொல்லவும் வேண்டியிருக்கிறதே என்று சிந்தை நொந்து சுவாமிகளை பரிவோடு வணங்கி தம் மைந்தனுக்கு நிகழ்ந்ததை கூறினார். அதை கேட்டதும் திருநாவுக்கரசர் நீர் செய்தது நன்றாக இருக்கிறது , யார் தான் இப்படி செய்வார்? என்று சொல்லி எழுந்தார்.ஆவி நீங்கிய பிள்ளையின் சவத்தை பார்த்தார்.இறைவன் திருவருள் புரியும் வண்ணம் "ஒன்று கொலாம் " என்னும் திருப்பதிகத்தை பாடி பாம்பின் விஷத்தை போக்கலானார்.தீய விஷம் நீங்கியது.மூத்த புதல்வரான திருநாவுக்கரசு ,சுவாமிகளின்சிவந்த திருவடிகளை வணங்கினார். அவனுக்கு அவர் தூய வெண்ணீறு அளித்தார்.அப்பூதியடிகளும் அவர் மனைவியாரும் ஸ்வாமிகள் உணவு உண்ண இவன் சிறிது இடையூறு செய்தானே என்று மனம் வருந்தினார்கள்.
மற்ற விசயங்களில் ஆசையை துறந்து பற்றற்ற நிலை வந்து அகண்ட பஜனை செய்த பின் பக்தி மேலும் எப்படி உறுதியாகிறது என்பதை கூறுகிறார்கள்.அந்த மேலான பக்தி மகான்களின் கருணை பார்வையால் வருகிறது.பகவானின் அருளால் கூட வரலாம்.
மகா புருஷர்கள் என்றும் கருணையுள்ளவர்கள் அவர்கள் அருளுக்கு பாதிரமாகிவிட்டாலே போதும்.அவர்களுடன் பொழுதை கடத்த வேண்டும்.
அவர்களை உதாரணமாக வைத்துக்கொண்டால் தாமாக உலக பற்றுகள் விலகி விடும்.பகவானை மறக்காத பாக்கியம் கிட்டும்.மகா புருஷர்கள் சாஸ்திர ஞானம் உள்ளவர்களாக ஒழுக்க சீலர்களாக இருப்பதுடன் பகவானின் தத்துவங்களை உணர்ந்து பக்தயுள்ளவர்கலாகவும் இருப்பார்கள்.இவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள்.
பாகவத புராணத்தில் சூத ரிஷி கூறுகிறார்:
அடியார்களான மகான்களின் நட்பு கிடைத்தால் போதும் அதற்க்கு இணையாக சொர்க்கத்தில் கிடைக்கும் மேன்மையும் ஈடாகாது.பிறவாமை என்ற மோட்சமும் பெரிதல்ல.மற்ற ஐஸ்வர்யங்களை கேட்கவா வேண்டும்.மகான்களின் அருகாமையில் வரும் சாந்தியும் சுகமும் வேறு எந்த சாதனத்திலும் வராது.(தொடரும்)