Sunday 31 May 2015

ஸமீரவிஸர்ஜனாசனம்


இந்த ஆசனம் சுவாசத்தை வெளியேற்றி செய்யப்படுகிறது. வயிற்றிலிருக்கும் கசடுகள் வெளியேறுகின்றன. இதை பவனமுக்தாசனம் என்றும் கூறுவார்கள். இந்த ஆசனத்தில் டாயாப்ராம் வயிற்றில் நல்ல அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அபான வாயுவுடன்(காஸ்) எல்லா தீமைகளும் வெளியேறுகின்றன. வயிறு கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல் ஒழியும். ஈரல்,கல்லீரல்,மண்ணீரல் பலப்பட்டு சிறுநீரகங்கள் ஆரோக்கியம் அடைகின்றன. இந்த அங்கங்களில் சுத்த ரத்த ஓட்டம் யதேஷ்டமாக பாய்ந்து அவை நன்கு செயல்படுகின்றன. உறுதியாகின்றன. இதை நித்தமும் தொடர்ந்து செய்துவந்தால் ஹார்னியா,குடல் உபாதைகள் நீங்குகின்றன. இதில் நோயுற்றவர் கொஞ்சம் சொஸ்தமான பின் இந்த ஆசனத்தை போட்டு பழகியபின் பெல்ட் போடும் அவசியம் இராது.
செய்யும் வீதி:
சுத்தமான போர்வையை விரித்து அமர வேண்டும். தலையும் முதுகுத்தண்டும் நேராக வைத்துக்கொள்ள வேண்டும். மார்புடன் சேர்த்து முழங்கால்களை மடக்கிக்கொண்டு இரண்டு கைகளால் முழங்கால்களை கட்டிக்கொள்ள வேண்டும். தொடைகளை அடிவயிற்றுடன் ஒட்டவைத்து முழங்கால்களை மார்புடன் சேர்த்து கைகளால் நன்கு கட்டிக்கொள்ள வேண்டும். கால்களின் பாதங்கள் சேர்ந்திருக்க வேண்டும். இரண்டு குதிகால்களும் தொடைகளின் அடிப்பக்கம் உட்காரப்படும் இரண்டு பகுதியில் சேர்ந்திருக்க வேண்டும்.
          அதன்பின் ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணிக்கொண்டு மெதுவாக சுவாசக்காற்றை வெளியே விட வேண்டும். இதில் கவனிக்க வேண்டியது அதிகமாக சுவாசக்காற்றை வெளியே விட முயற்சி செய்ய வேண்டாம். வாயுவை வெளியேற்றிக்கொண்டு அடிவயிரையும் உள்பக்கம் சுருக்க வேண்டும். அதனால் முழங்கால்களும் குதிகால்களும் அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்பக்கம் போகும். கைகளாலும் முழங்கால்களை கட்டி அமுக்க வேண்டும். சுலபமாக மூச்சை அடக்கும் வரை இவ்வாறு அழுத்தி கட்டி இருக்க வேண்டும். பின்பு மெதுவாக சுவாசிக்க வேண்டும், கட்டிய கைகளையும் தளர்த்த வேண்டும்.

          இந்த ஆசனத்தை காலையிலும் மாலையிலும் ஐந்து, ஐந்து முறை செய்யலாம். ஒருமுறை ஆசனம் செய்தபின் பதினைந்து அல்லது இருபது நொடிகள் ஓய்வு எடுப்பது அவசியம். எதிலும் அவசரம் கூடாது, இழுத்த சுவாசத்தை சுலபமாக அடக்க முடிந்த வரை மெதுவாக அதிகப்படுத்த வேண்டும். மூச்சு திணறும் வரை சுவாசத்தை அடக்க கூடாது. 

No comments:

Post a Comment