Saturday 30 May 2015

சக்திசலாசனம்



சக்திசலாசனம் சரீரத்தின் உள் இருக்கும் சக்தியை தூண்டுவதே ஆகும். சக்தியை அதிகப்படுத்துவது சக்தியை விழித்தெழ செய்வது இவையே சக்திசலாசனத்தில் நடக்கிறது. மனிதனின் செயலாற்றும் சக்தி, திறமை எல்லாம் இந்த ஆசனத்தினால் வரும்.
          மூலாசனம் போல இதுவும் சுக்கில வீரிய தோஷங்களை போக்குகிறது. இதனால் மூல நோய் தீரும். சிறுநீர் கழிக்கும் சமயம் எரிச்சல் சொப்பன தோஷம் எல்லாம் நீங்கும். வயிற்று கோளாறுகளும் நீங்கும். சரீரத்தில் திரவம், இரத்தம், அஸ்தி,மஜ்ஜை ஆகிய தாதுக்கள் புஷ்டியாகும்.
          இந்த ஆசனத்தினால் செரிமானம் ஏற்பட்டு மலம் நன்கு வெளியேறும். சுவாசக்கோளாறு, தொண்டை நோய் நீங்கும். நுரையீரல் வியாதிகள், ஜலதோஷம்,காசநோய் எல்லாம் நாசமாகின்றன. இந்த ஆசனத்தில் மூன்று பந்தங்கள் போடப்படுகின்றன.
செய்யும் விதி:  
          மெத்தென்ற ஒரு விரிப்பை விரித்து அதில் கால்களை நீட்டி அமர வேண்டும். முழங்கால்கள் மடக்கிக்கொண்டு இரண்டு பாதங்களையும்சேர்த்து வைக்க வேண்டும். குதி கால்கள் போல் இரண்டு புட்டங்களையும் வைத்து உட்கார வேண்டும். சுவாசத்தை வெளியேற்றி விட வேண்டும். ஆசனவாயை மேல்நோக்கி சுருக்க வேண்டும். முகவாய் கட்டையை கழுத்துடன் சேர்த்து வைக்க வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். முழங்கால்கள் பூமியில் பதித்ந்திருக்க வேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் வைக்க வேண்டும். இந்த நிலையில் முடிந்த்த வரை ஸ்திரமாகவும், விறைப்பாகவும் இருக்க வேண்டும். அதன் பின் ஆசனவாய் சுருங்குவதை விட்டு முகவாய்க்கட்டையையும் கழுத்திலிருந்து எடுத்துவிட்டு சுவாசத்தை உள்வாங்கி இயல்பு நிலைக்கு வர வேண்டும்.
          பந்தம் போடுவதே சக்திசாலனாசனத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது. குறைந்த பட்சம் ஐந்து முறையும் அதிகபட்சமாக பதினொன்று முறையும் இவ்வாறு (சுவாசத்தை வெளியேற்றி) பந்தங்கள் போடப்படுகின்றன.
          அதாவது மூலபந்தமும்(ஆசனவாயை சுருக்குதல்) ஜாலந்திர பந்தமும்(முகவாய்க்கட்டையை கழுத்துடன் சேர்த்து வைப்பது)உட்யான பந்தமும்(வயிற்றை ஏக்கி,வயிற்றை உள்பக்கம் பள்ளம் ஆக்குவது) சுவாசத்தை வெளியேற்றி (ரேசக பிராணாயாமம் செய்து) செய்ய வேண்டும். சுவாசத்தை வெளியேற்றி நிறுத்தியபின் தான் பந்தங்களை போட வேண்டும். சுவாசத்தை வெளியே நிறுத்துவது சுலபமாக இருக்கும் வரை தான் பந்தம் போட வேண்டும். இதை தவிர மிகவும் கஷ்டப்பட்டு சுவாசத்தை வெளியேற்றி நிறுத்தி செய்ய கூடாது. அதில் பலன் இல்லை. ஐந்து நொடியிலிருந்து பதினைந்து நொடிகள் வரை பந்தம் போடுவது போதுமானது. ஆனால் பிராணாயாமம் செய்யாமல் பந்தம் போடுவது அதிக பலன் இருக்காது. இந்த ஆசனத்தில் செய்வது போல சித்தாசனம் போட்டும் செய்யலாம். இந்த சக்திசலாசனத்தை பெண்களும் செய்யலாம். மாத விலக்கு சமயத்திலும் கர்பகாலத்திலும் செய்யக்கூடாது. நன்கு பழகிய பின் இந்த ஆசனம் செய்யும்போது மூலாதார சக்கரம், மணிபூரக சக்கரம், விசுத்தி சக்கரம் இவற்றை தியானம் செய்யலாம். ஏனெனில் மூலாதாரம்(ஆசனவாய்)மணிபூரகம்(நாபி பக்கம்) விசுத்தி (கழுத்து)இந்த சக்கரங்களின் இடங்களை தியானித்து இவ்வாறு அனுபவ பூர்வமாக உணர வேண்டும். சக்தியின் அலைகள் அங்கிருந்து கிளம்பி நாடி நரம்புகளில் பாய்ந்து புதிய சக்தி கிடைக்கிறது.

          இந்த ஆசனத்தை உணவு உட்கொள்ளாமல் வயிறு காலியாக இருக்கும் போது தான் செய்ய வேண்டும். இதை மற்ற ஆசனங்கள் போட்டு முடித்த பின் இறுதியாக இந்த ஆசனத்தை செய்யலாம். ஆனால் சவாசனம் போட்டு ஓய்வு எடுத்த பின் இதை செய்யக்கூடாது. 

No comments:

Post a Comment