கூர்மம் என்றால் ஆமை. ஆமை போல முதுகை
மேல்வைத்து செய்வதே அர்த்த கூர்மாசனம். இதை தொடர்ந்து அப்யாசம் செய்து வந்தால் ஈரலும்
குடலும் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். குடலில் அடைத்திருக்கும் அழுக்கு மலமும்
கேஸும் சுலபமாக வெளியேறும். வயிறு டயாப்ராம் சிறுகுடல்,பெருங்குடல் ஆகியவற்றின் செயல்திறன்
அதிகமாகும். வயிறு சம்பந்தப்பட்ட ரோகங்களுக்கு இது ராமபாணமாகும். முதுக்குத்தண்டு
உறுதிபட்டு நல்ல பலன்கள் கிடைக்கும்.
செய்யும் வீதி:
மெத்தென்ற விரிப்பில் முழங்கால்களை
தொடைகள் அடியில் மடக்கி கால்பாதங்களின் அடிப்பாகம் மேல்பக்கத்தில் இரண்டு
புட்டங்களை வைக்க வேண்டும். இரண்டு குதிகால்களும் கால் பெருவிரல்களும்
சேர்ந்திருக்க வேண்டும். இரு கைகளையும் தலையின் இரு பக்கத்திலும் சேர்த்து நீட்டி
இரண்டு உள்ளங்கைகளும் சேர்ந்திருக்க வேண்டும். விரல்களும் சேர்ந்திருக்க வேண்டும்.
பெருவிரல்கள் இரண்டும் தனித்து சேர்ந்திருக்க வேண்டும். முதுக்குத்தண்டு எலும்பு
நேராக இருக்க நெற்றி பூமியில் பதிந்து இருக்க வேண்டும். சேர்ந்த கைகளும் பூமியில்
தொட்டிருக்க வேண்டும். பூமியை இவ்வாறு ஸ்பரிசிக்கும்போது சுவாசத்தை உள்ளிலுத்து
அடக்கி இருக்க வேண்டும். உள்ளே சுவாசத்தை சுலபமாக அடக்கி இருக்கும் வரை அதே
நிலையில் இருக்க வேண்டும். இரண்டு கைகளும் முதுகுத்தண்டும் நேராக இருக்கும்
நிலையில் இந்த ஆசனம் போட வேண்டும். வளைந்த நிலை வரகூடாது. ஆசனம் முடிந்த பின்
பத்து பதினைந்து நொடிகள் சவாசனம் போட வேண்டும்.
மேற்சொன்ன ஆசனம் மூன்றிலிருந்து ஐந்து
முறை செய்யலாம். ஆரம்பத்தில் நெற்றியை பூமியில்
ஸ்பரிசிக்கும் நிலையில் இருபத்தி ஒன்பது முப்பது நொடிகள் வரை செய்க.
கிரமமாக நேரத்தை அதிகப்படுத்தி ஒருமுறையில் ஒரு நிமிடம்வரை அப்படியே இருக்க
வேண்டும். இந்த ஆசனத்தில் இயல்பாக சுவாசத்தை விட்டுக்கொண்டு இருக்கலாம்.
ஒன்றிலுருந்து ஐந்து முறை செய்தபின் இரண்டு நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment