Wednesday 3 June 2015

பிருங்காசனம்


இந்த ஆசனம் ஆறு கால்களுடய வண்டு போல உருவ அமைப்பு இருப்பதால் இதை   பிருங்காசனம் என்று கூறுவார்கள்.
          இந்த ஆசனம் சிறுகுடல்,பெருங்குடல்,ஈரல் ஆகியவை தாக்கப்பட்டு பலம் பெறுகின்றன. வயிற்றிலிருக்கும் வாயு கோளாறுகள் நீங்குகின்றன. அதனால் மலச்சிக்கல் உண்டாகாது.அபான வாயு சுலபமாக வெளியேறும். வஜ்ராசனத்தில் இருக்கப்படும் பலன்கள் எல்லாம் இந்த ஆசனத்திலும் கிடைக்கின்றன. இதை அப்யாசம் செய்தால் வஜ்ராசனம் போட தானாக வரும். கைகளும் முழங்கைகளும் உறுதியாகின்றன. மார்பு தசைகள், முதுகுத்தண்டு ஆகியவை பலப்பட்டு இறுக்கம் இல்லாமல் ஆரோக்கியம் அடைகின்றன.
செய்யும் விதி:

          ஒரு போர்வை விரிப்பில் முழங்கால்களை மடக்கி கொண்டு கால்பாதங்களை புட்டத்தின் பக்கம் கொண்டு போக வேண்டும். இரண்டு குதி கால்களையும் சேர்த்து வைத்து பாதங்களின் பலத்தில் அமர வேண்டும். மெதுவாக நீண்டு மூச்சை இழுக்க வேண்டும். மூச்சை அடக்கிக்கொண்டே கீழே குனிய வேண்டும். மார்பின் கீழ் பகுதியில் முழங்கால்களை வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு முழங்கைகளையும் முழங்கால்களுக்கு நடுவில் பதிக்க வேண்டும். கைவிரல்கள் சேர்ந்து பூமியில் பதிந்திருக்க வேண்டும். தன் சக்திக்கு தகுந்தவாறு சுவாசத்தை உள்ளே அடக்கிக்கொண்டு இதே நிலையில் இருக்க வேண்டும். பின்பு மெதுவாக சுவாசத்தை விட்டு விட வேண்டும். நடுவில் ஓய்வெடுத்துக்கொண்டு இந்த ஆசனத்தை மூன்று அல்லது ஐந்து முறை செய்யலாம். நோய் தீர்ப்பதற்க்கு அதிகமாகவும் செய்யலாம். சுவாசத்தை அடக்கி பின்பு விட்டுக்கொண்டு அரைமணி நேரம் வரை பிருங்காசனம் செய்யலாம்.             

No comments:

Post a Comment