சுகதேவர் பரீட்சீத் மகா ராஜாவிடம் மச்சாவதாரகதையை கூறினார்.
எல்லாம் வல்ல இறைவன் நாராயணன் நல்லவர்களையும் வேதங்களையும் தர்மத்தையும் காக்க பல அவதாரங்களை எடுக்கிறார்.அச்சமயம் உயிர் காற்று போல உயர்ந்த தாழ்ந்த பிரானிகளுக்குள் அல்லது பெரிய சிறிய ஜீவராசிகளுக்குள் அந்தர்யாமியாக இருந்து அவதார திருவிளையாடல்களை நிகழ்த்துகிறார்.ஒரு சமயம் கல்ப கால முடிவில் பிரம்மாவின் ஒரு பகல் பொழுது கழிந்த பின் (பகல் பொழுது என்பது ஆயிரம் நான்கு யுகங்களை கொண்டது)இரவு காலத்தில் மகா பிரளயம் ஏற்பட்டது.அப்போது உலகமெல்லாம் நீரில் மூழ்கி விட்டது.பிரம்மாவின் திருமுகத்திலிருந்து தோன்றிய வேதங்களை ஹயக்கிரீவன் என்ற அசுரன் திருடி சென்று கடலுக்குள் போட்டு விட்டான்.பகவான் மச்சாவதாரம் எடுத்து ஹயக்கிரீவனை கொன்று வேதங்களை மீட்டு கொண்டு வந்தார்.தாமே ஹயக்க்ரீவன் என்ற பெயரை பெற்றார்.
உலகம் அழிவதற்கு முன்னதாக இதே நேரத்தில் திராவிட அரசன் சத்தியவிரதன் தவம் இயற்றிக்கொண்டு இருந்தான்.ஒருநாள் கிருதமாலா நதியில் ஜலதர்ப்பணம் செய்துகொண்டு இருக்கையில் அவன் கைக்குள் எதேச்சையாக ஒரு மீன் வந்தது.அதைக்கண்டு அரசன் மீனை மீண்டும் நதியில் விட்டான்.அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.அந்த மீன் மனிதகுரலில் பேசியது.அரசே தாங்கள் மிகவும் கருணை உள்ளம் படைத்தவர்.என்னை நதிநீரில் விடாதீர்கள்.பெரியமீன்கள் என்னை தின்றுவிடும்,எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.வேறு ஏதாவது ஏற்பாடு செய்து என்னை காப்பாற்றுங்கள் என்றது.பரம புருஷனே மீனாக வந்து தம்மிடம் பேசுவதை அறியாத மன்னர் சத்தியவிரதன் அதை காப்பாற்ற நினைத்து தன கமண்டலத்தில் போட்டு தன ஆசிரமத்திற்கு எடுத்து வந்தான்.அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.ஓர் இரவில் அந்த மீன் கமண்டலம் கொள்ளாமல் வளர்ந்து விட்டது.அரசே என்னை கமண்டலத்தில் இருந்து எடுத்து வேறு இடத்தில விட்டு விடுங்கள் என்றது.
அதை கேட்டு சத்திய விரதன் ஓர் அண்டாவில் மீனை போட்டு வைத்தான்.ஆனால் ஓர் இரவில் அது அண்டாவை அடைத்துக்கொண்டு வளர்ந்து விட்டது.எனக்கு இது போதவில்லை என்றது.அரசன் அதை கிணற்றில் தூக்கி போட்டான்.ஆனால் ஓர் இரவுக்குள் கிணறு சுற்றளவு வளர்ந்து இனி கிணற்றில் என்னால் வாழ முடியாது என்றது.சத்திய விரதன் மீனை ஏரியிலும் குளத்திலும் மாற்றிக்கொண்டே இருந்தான்.மீன் நீர்நிலைகளில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துகொண்டே இருந்தது.இறுதியில் அரசன் மீனை கடலில் போடபோனார்.அச்சமயம் மீன் அதிசயதக்கவகையில் பேசியது."அரசே என்னை கடலில் விட்டால் பெரிய மீன்கள் அல்லது திமிங்கலங்கள் என்னை விழுங்கி விடுமே என்னை கடலில் விடாதீர்கள்"என்றது.குழம்பிபோன அரசன் கூறினான்.இவ்வாறு அசுர வளர்ச்சியடையும் நீங்கள் ஒரு சாதாரண மீன் அல்ல.தாங்கள் யார்?இதுவரை ஒருமணிக்கு காததூரம் வளரும் மீனை நான் கண்டதுமில்லை கேட்டதும் இல்லை.நிச்சயம் நீங்கள் சர்வசக்திமானாகிய இறைவன் உயிருக்குள் உறைபவர் அவினாசி ஸ்ரீ ஹரியாகதான் இருக்க வேண்டும் .
உயிரினங்கள் மீது கருணை கொண்டு அனுக்கிரகம் செய்வதற்காக மீன் உருவம் எடுத்தீரோ?புருசோத்தமரே ஆக்கம்,காப்பது,அழிவு அனைத்தையும் நிகழ்த்தும் வேத நாயகனே சரண் அடைந்தவர்களை காப்பவரே உம்மை வணங்குகிறேன்.தங்கள் திருஅவதாரம் யாவரும் நலம் பெற்று உயர்வடைவதர்க்காக நிகழ்கிறது.இருப்பினும் நான் கேட்கிறேன்.தாங்கள் எந்த உத்தேசத்திர்க்காக மீன் அவதாரம் எடுத்தீர்கள்?இதை அறிய விரும்புகிறேன்.என்றான்.தங்களை சரண் அடைந்தவர்கள் எவராயினும் கீழ் நிலை அடைய மாட்டார்கள். ஏனெனில் தாங்கள் காரணமில்லாமல் அனைவருக்கும் அன்பராக இருப்பீர்கள்.இப்போது எடுத்த மீன் அவதாரம் மிக அற்புதமாக உள்ளது.ராஜரிஷி சத்தியவிரதன் இவ்வாறு வேண்டிக்கொண்டதும் பிரளயகால கடல்நீரில் திருவிளையாடல் புரிய திருவுள்ளம் கொண்டு அரசனை நோக்கி கூறினார்.- "சத்தியவிரதா இன்றிலிருந்து ஏழாவது நாள் கடல் பொங்கி பூலோகமனைத்தும் நீரில் மூழ்கிவிடும்.கடல் பொங்கி வரும்போது என் அருளால் ஒரு படகு உன்னைநோக்கி வரும்.அதில் சப்தரிஷிகள் இருப்பார்கள். நீ தாவர விதைகளை சேகரித்து அனைத்துயிர்களின் சூட்சும சரீரங்களுடன் சேர்ந்து நீ படகில் ஏறிக்கொள்வாய்.பெருங்கடலான பேரலைகளால் படகு தத்தளித்துக்கொண்டு இருக்கும் போது நான் காப்பாற்ற வருவேன்.பிரளய காலத்தில் இருள் சூழ்ந்த நிலையிலும் சப்தரிஷிகளின் தெய்வீக ஜோதியால் வெளிச்சம் பரவ நீ அச்சமின்றி படகில் அமர்ந்து கடலில் சஞ்சரித்துக்கொண்டு இருப்பாய்.அச்சமயம் கடல் புயலால் படகு நிலைகொள்ளாமல் தத்தளிக்கும்போது இந்த மீன் வடிவில் நான் அங்கு வருவேன்.என் மூக்கின் மேல் ஒரு கொம்பு இருக்கும் நீ வாசுகி நாகம் கொண்டு அந்த கொம்புடன் படகை கட்டிவிடு.பேரலைகளால் அடிக்கப்பட்டு படகை கவிழாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்.பிரம்மாவின் இரவுக்காலம் முடியும் வரை நீ படகில் இருந்து கொண்டு கடலில் திரிந்து கொண்டு இருக்க வேண்டும்.அச்சமயம் ஆன்மீகத்தை பற்றி நீ கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்து அறத்தை பற்றி உபதேசம் செய்துகொண்டு இருப்பேன்.பரப்ரம்மம் எனப்படும் பரம்பொருள் உன் ஆத்மாவில் பிரகாசிப்பதை நீ உணர்வாய். (தொடரும் )

No comments:
Post a Comment