Saturday 10 January 2015

துலாசனம்:



துலா என்றால் தராசு. எல்லா சரீரத்தின் பாரத்தை இரு கைகளால் நிறுத்துவதை துலாசனம் என்று கூறுவார்கள். இது குக்குடாசனம் போல பத்மாசனம் போட்டு செய்ய வேண்டும். ஆனால் இது குக்குடாசனத்தை விட சுலபமானது. அந்த ஆசனத்தின் பலன் இதிலும் கிடைக்கிறது. இந்த ஆசனத்தின் அப்யாசத்தால் பூஜங்களும், உள்ளங்கைகளும் உறுதியாகின்றன. நுரையீரல் பலமாகிறது. மார்பு தோள்கள் உறுதியாகின்றன. மலச்சிக்கல் நீங்குகிறது.
          நல்ல காற்றோற்றமான இடத்தில் ஜமுக்காளம் விரித்து அமரவேண்டும். வலது காலை இடது தொடையிலும் இடது காலை வலது தொடையிலும் வைத்து பத்மாசனம் போட வேண்டும். இரண்டு குதி கால்களும் நாபியின் நேராக அடிவயிற்றை ஒட்டி கால் குதிகளும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் பக்கவாட்டில் பூமியில் நன்கு பதியவைத்து ஊன்ற வேண்டும். அதன் பின் மெதுவாக சுவாசத்தை உள் இழுத்து நிரப்ப வேண்டும்.

இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டு சரீரத்தை மேலே தூக்க வேண்டும். 

இரு உள்ளங்கைகளால் மட்டும் சரீரத்தை தாங்கிக்கொண்டிருக்க வேண்டும். 

உள்ளங்கைகள் பூமியில் நன்கு பதியாமல் விரல்கள் பதிய சரீரத்தை தாங்க 

வேண்டும். தலை,கழுத்து, முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். இந்த 

நிலையில் இருபது நொடியிலிருந்து ஒரு நிமிடம் வரை இருக்கலாம். அல்லது 

உள்ளே சுவாசக்காற்றை அடக்க முடிந்த வரை அப்படியே இருக்கலாம். இதை 

பலவந்தமாக கஷ்டப்பட்டு செய்யக்கூடாது. படிப்படியாக சுவாசத்தை அடக்கும்  

நேரத்தையும் ஆசனநேரத்தையும் நீடிக்கலாம். பத்து நொடியிலிருந்த்து அரை 

நிமிடம் வரை உடலை தாங்கி இருக்க வேண்டும். ஆசனம் பழகிய பின் மூன்று 

நிமிடம் வரை செய்யலாம். இதை மூன்றிலிருந்து ஏழு முறை பிரதி தினமும் 

செய்யலாம். ஒருமுறை செய்தபின் முடியாத பட்சத்தில் சவாசனம் போட்டு 

ஓய்வு எடுத்த பின்பு செய்யலாம்.  (தொடரும்)            

No comments:

Post a Comment