இது வேகமாக பயிற்சி செய்யும் ஆசனம்.
இந்த ஆசனம் இடுப்பு, இடுப்புக்கு மேல்பாகம் நன்கு
அசைவு கொடுக்கப்படுகிறது. இடுப்பு இறுக்கம் தளர்ந்து நன்கு பலப்படுகிறது.
முதுமையிலும் இடுப்பு பலமாக இருக்கும் வயிற்றில் கொழுப்பு சேராது.
கால் பாதங்கள் கிரண்டைகால்கள்
முழங்கால்கள்,தொடை சேரும் பகுதி இடுப்பு,உறுதியாகின்றன. வயிற்று தசைகள் அசைவு
கொடுக்கப்படுவதால் கல்ஈரல்,மண்ஈரல் உறுதியாகின்றன. இரைப்பை,சிறுகுடல்,பெருங்குடல் தடைபடாமல் நன்கு
இயங்குகின்றன. அதனால் வயிற்று கோளாறுகள் நீங்குகின்றன. நுரைஈரலும்,அதன் தசைகளும் ஆரோக்கியம் அடைகின்றன.
செய்முறை:
முதலில் நன்றாக இரு கால்களையும்
பரப்பிக்கொண்டு நிற்க வேண்டும். இரண்டு கால்களுக்கு இடைவெளி இருபத்தி இரண்டு இன்ச்
இருக்க வேண்டும். இரண்டு கைகளையும் முதுகுக்கு பின்னால் கொண்டு போயி வலது கையால்
இடது முழங்கையையும் இடது கையால் வலது முழங்கையையும் பலமாக பிடித்துக்கொள்க. நீண்ட
பெருமூச்சு விடவேண்டும். அதன் கழுத்து வரை மூச்சுக்காற்றை இழுத்து நிரப்புக. இடது
பக்கத்தில் இருந்து வலது பக்கமாக இடுப்பையும் இடுப்பின் மேல் பகுதியையும் சக்கரம்
போல சுழற்ற வேண்டும். சுவாசம் நிறுத்தப்பட்ட நிலையில் மூன்று நான்கு முறை சுழற்ற
வேண்டும். பின்பு மெதுவாக சுவாசத்தை விட வேண்டும். ஐந்து நொடிகள் ஸ்திரமாக நேராக
நிற்கவேண்டும். அதன் பின் கழுத்து வரை சுவாசத்தை நிரப்ப வேண்டும். இம்முறை
வலதிலிருந்து இடது பக்கத்தில் இடுப்பையும் இடுப்பின் மேல்பாகத்தையும் சக்கரம் போல
சுழற்ற வேண்டும். மூச்சை நிறுத்தி வைத்திருக்கும் வரை மூன்று நான்கு முறை இவ்வாறு
சுழற்ற வேண்டும். பின்பு மூச்சை வெளியேற்ற வேண்டும். ஐந்து நொடிகள் ஸ்திரமாக நிற்க
வேண்டும். இருபக்கம் சேர்ந்த இது ஒரு ஆசனமாகும். இதை மூன்று அல்லது ஐந்து முறை
பிரதி தினமும் செய்யலாம். கவனத்தில் கொள்ளவேண்டியது எதுவென்றால் சரீரத்தின்
மேல்பாகத்தை வேகமாக சுழற்ற வேண்டும். சுவாசத்தை நிறுத்தி ஆரம்பத்தில் மூன்று
நான்கு முறை செய்ய முடியாவிட்டால்(ஆரம்பத்தில்) ஓரிருமுறை சுழற்றலாம். இந்த
சுழற்றும் செயல் மெதுவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எடுத்தவுடன் வேகமாக
செய்தால்(சுழற்றும் செயல்) பேலன்ஸ் இல்லாமல் விழும் அபாயம் உள்ளது. இடுப்பும் அதன்
மேல்பாகமும் சுழற்றும்போது இரண்டு கால்களும் திடமாக பூமியில் பதிந்த்திருக்க
வேண்டும். கால்களும் பின்னக்கூடாது. (தொடரும்)
No comments:
Post a Comment