யோக முத்ராசனத்தை ஹட யோகிகள்
செய்வார்கள். இதை பத்மாசனம் போட்டு செய்வார்கள். இது குடல் வியாதிகளை தடுக்கும்.
வயிறும் அடி வயிறும் ஆரோக்கியம் அடையும்.
யோகமுத்திராசனத்தை முறையாக செய்து
வந்தால் அஜீரணமும் மலச்சிக்கலும் நீங்கும். சிறுகுடல்,பெருங்குடல், இரண்டிற்கும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சுத்த ரத்தம்
பாயும். குடல்கள் தனது வேலையை நன்கு செயலாற்றும். வாயு(கேஸ்) வெளியேறும். கல்லீரல்,மண்ணீரல்,இதயம்,நுரையீரல் ஆரோக்கியம் பெரும்.
இரண்டு கால்களையும் முன்னால் நீட்ட
வேண்டும். வலது பாதத்தையும் இடது பாதத்தையும் தொடைகளில் பதிய வைக்க வேண்டும்.
இரண்டு குதிகால்களும் சேர்ந்தபடி நாபிக்கு நேர் பதிந்திருக்க வேண்டும்.
முதுகுத்தண்டும்,கழுத்தும் தலையும் முதுகும் நேராக
வைத்துக்கொண்டு திருஷ்டியை புருவ நடுவில் பதியவைக்க வேண்டும். உள்ளங்கைகளை மடக்கி
முஷ்டி போல செய்து பின் பக்கம் குதிகால்களில் வைத்துக்கொள்க. பின்பு முன்னால்
குனிந்து நெற்றியை முடிந்தவரை பூமியில் வைக்க வேண்டும். முழங்கைகள் மடக்கி
சரீரத்தின் இருபக்கமும் ஓட்ட வைத்து இருக்க வேண்டும். தொடைப்பகுதியும்
உட்காரப்படும் இரண்டு புட்டங்களும் பூமியில் பதிந்திருக்க வேண்டும். பத்து நொடி
வரை இந்த நிலையில் நெற்றி பூமியை
தொட்டிருக்க வேண்டும். பின்பு நிமிர்ந்து உட்கார்ந்து அதன் பின் மேலும்
குனிய வேண்டும். முடிந்த வரை செய்து விட்டு
சவாசனம் செய்ய வேண்டும். ஓய்வு எடுக்க வேண்டும்.
இந்த யோக முத்திராசனத்தை
பிராணாயாமத்துடன் செய்யலாம். கீழே குனியும் போது சுவாசக்காற்றை வெளியேற்றி விட
வேண்டும். வயிற்றில் காற்றில்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில் குனியும் போது
வயிற்று பகுதியில் அழுத்தம் கொடுத்தால் நல்லது. நெற்றியை பூமியில் வைத்திருக்கும்
வரை சுவாசிக்காமல் இருப்பது நலம். மூச்சை உள்ளே இழுத்து சகஜ நிலைக்கு வர வேண்டும்.
இவ்வாறு ஐந்தில் இருந்து பத்து முறை தினமும் செய்யலாம்.
இந்த ஆசனத்தை செய்யும்போது சிலர் இரண்டு கைகளையும் பின்னால் (முதுகு ஒட்டிய
இடுப்பு பகுதி)கொண்டு போய் இடது கை மணிக்கட்டை வலது கை மணிக்கட்டுடன் சேர்த்து
உறுதியாக பிடித்துக்கொண்டு சுவாசத்தை வெளியேற்றி நெற்றியை பூமியில் வைப்பார்கள்.
தடித்த சரீரம் உள்ளவர்கள் பத்மாசனம் போட முடியாவிட்டால் வயிறு சம்பந்தப்பட்ட
வியாதிகள் குணமாக வெறும் சுகாசனம் மட்டும் போட்டு இந்த ஆசனத்தை செய்யலாம்.
சுவாசத்தை விடுவதும் சுவாசத்தை
உள்வாங்குவதிலும் சிரமமாக இருந்தால் இயல்பாக சுவாசித்துக்கொண்டு ஐந்தில் இருந்து
பத்து நிமிடம் வரை குனிந்து செய்யலாம். ஆனால் குனிந்து நெற்றியை பூமியில் வைத்தபடி
அதிகநேரம் இருந்தால் நல்லது. தொடர்ந்து அப்யாசம் செய்து நெற்றியை பூமியில் வைத்து
பத்து பதினைந்து நிமிடம் வரை செய்யலாம். வயிற்று கோளாறுகள் சரியாக அதிக நேரம்
குனிந்து பூமியில் தலையை வைக்க வேண்டும். யோகமுத்திராசனத்தை ஆரம்பத்தில் மெதுவாக
சிறிது நேரம் மட்டும் செய்து விட்டு நன்கு பழகியபின் அதிகநேரம் எடுத்துக்கொள்ள
வேண்டும்.---- தொடரும்
No comments:
Post a Comment