இந்த
ஆசனத்தினால் யோகிகள் பலபேர் சித்தி அடைந்திருக்கிறார்கள். அதனால் இதை
சித்தாசனம் என்று அழைக்கிறார்கள். சித்தாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் காமத்தை
வென்று பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கலாம். இல்லறத்தில் உள்ளவர்களும் இதை செய்தால்
சொப்பனதோசம்,சொப்பன ஸ்கலிதம்,ஆகியவை தடுக்கப்படும். உடம்பில் தாது
பலவீனம் ஏற்படாமல் சரீரத்தில் அபூர்வ பலம் ஏற்படும். கண்களுக்கும் நன்மை
உண்டாகும். சரீரத்தில் (ஜாயிண்ட்)சேரும் மூட்டு பகுதிகள் உறுதியாகும். நரம்புகள்
உறுதிபடும். சரீரத்தின் கீழ் பகுதிகள் ஆரோக்கியம் பெறும்.
இந்த ஆசனத்தில் மூலபந்தம்(ஆசனவாயை
சுருக்குதல்)பிரயாசையின்றி போடலாம். சுக்கிலம் மேல்நோக்கி இழுக்கப்படுவதால்
சுஷும்னா நாடியில் பிராணவாயு போகும். இதனால் குண்டலினி விழித்தெழும். அதனால் மனது
ஸ்திரமாகும். மனதில் சாத்வீக குணம் பெருகும். மனதை சுலபமாக வசப்படுத்த முடியும்.
சித்தாசனத்துடன் மூலபந்தம் போடும்போது
தாது குறைவு ரோகம் நீங்கும். முக்கியமாக மூல நோய் குணமாகும். இதனுடன் உட்யாண
பந்தம் (வயிற்றை ஊள்பக்கம் எக்குவது)செய்தால் ஈரல்,மண்ணீரல்,காமாலை நோய்கள் வராது. ஜாலபந்தம்
செய்தால் (முகவாய் கட்டையை கழுத்துடன் ஒட்டி வைப்பது) சித்தாசனத்தில் மூச்சிறைப்பு, இருமல் நோய்கள் வராமல்
தடுக்கப்படுகின்றன. தாயிராட்,பைராதைராட் ஆகிய சுரப்பிகள்
நிறுத்தப்படுகின்றன. சரீரத்தில் சுறுசுறுப்பு உண்டாகும். மூளையில் அறிவு சக்தியும்
நினைவாற்றலும் நன்கு வேலை
செய்யும்.சரீரத்தின் பாரம் சமச்சீராகும்.
இந்த ஆசனத்துடன் பிராணாயாமம் செய்தால்
மிகவும் நல்லது. மனதில் ஒரு லட்சியம் குறித்து ஏகாக்கிரமமாக தியானம் செய்தாலும்
மந்திர ஜபம் செய்தாலும் இந்த ஆசனத்தில் வெகு சீக்கிரம் சித்தி கிடைக்கும்.
செய்யும் வீதி:
முதலில் கால்களை நீட்டி உட்கார
வேண்டும். இடது பாதத்தின் குதிகாலை ஆசனவாய்,விரைகள் இவை இரண்டிற்க்கும் நடுவில்ஒட்ட
வைத்துக்கொள்க. பாதத்தின் அடிப்பாகம் தொடையின் மேல் ஒட்டி இருக்க வேண்டும். வலது
பாதத்தின் குதி ஜனனேந்திரியத்திற்க்கு மேல் திடமாக பதிந்திருக்க வேண்டும். அதன்
பின் முதுக்குத்தண்டு,கழுத்து , தலை எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்க
வேண்டும். திருஷ்டி மூக்கு நுனியை மட்டும் பார்க்க வேண்டும். கைகளை நீட்டி
ஆள்காட்டு விரலையும் பெரு விரலையும் ஒரு சேர வைத்து மற்ற மூன்று விரல்களை ஒன்றாக சேர்த்து வைத்து முழங்காலில்
வைக்க வேண்டும்.
கவனிக்க வேண்டியது எதுவென்றால் இரண்டு
கால்களும் ஒன்றின் மீது ஒன்று வைத்து சேர்ந்திருக்க வேண்டும். இந்த ஆசனத்தை
ஆரம்பத்தில் மூன்றிலுருந்து ஐந்து நிமிடம் வரை செய்ய வேண்டும்
கிரமமாக அப்யாசத்தை அதிகமாக்கி பத்து
நிமிடம் பிரதி தினமும் செய்யலாம். மோட்சத்தை விரும்பும் சன்யாசிகள் ஒருமணிநேரம்
சித்தாசனம் போட்டு தியானத்தில் இருப்பார்கள். அல்லது பிராணாயாமம் செய்வார்கள்.
இந்த ஆசனத்தில் ஜபம் செய்வது உத்தமம்.
நோய்கள் குணமாவதற்கும் மணிக்கணக்கில்
பந்தம் போட்டு அப்யாசம் செய்வார்கள்.
சித்தாசனம் கால் மாறி,மாறி
அதாவது இடது குதி காலை ஆசனவாய்
விரைகளுக்கு நடுப்பகுதியில் ஒட்டவைத்து செய்து சிறிது நேரம் கழித்து வலது குதிகாலை
அதே போல் ஆசனவாய்க்கும் விரைகளுக்கும் நடுவில் வைத்து இடது குதி காலை செய்த அதே
நேரம் செய்ய வேண்டும். மற்றொரு கால் பாதத்தின் குதி ஜனேந்திரியத்திற்கு
மேல்பாகத்தில் பதிந்திருக்க வேண்டும். இந்த ஆசனத்தில் எவ்வளவு நேரம் அமர்ந்தாலும்
முதுகுத்தண்டும் தலையும் நேராக இருக்க வேண்டும். ஆடாமல்,அசையாமல் இருப்பது நல்லது.
இந்த ஆசனத்தில் ஆசனவாயையும்
ஜனனேந்திரிய உறுப்பையும் அவற்றின் பக்கத்தில் இருக்கும் நரம்புப்பகுதிகளையும்
மேல்நோக்கி சுருக்கி அரைநிமிடம் அல்லது ஒருநிமிடம் இருந்தபின் தளர்த்திக்கொண்டு ஓய்வெடுக்க
வேண்டும். இதுவே மூலபந்தமாகும். பின்பு முதுகுத்தண்டை நேராக வைத்து
முகவாய்க்கட்டையை கழுத்துடன் சேர்த்து வைத்தால் ஜாலந்தா பந்தமாகும். இதனால்
மூளைக்கு அதிக சக்தி கிடைக்கும். கழுத்து தொண்டை நோய்கள் சரியாகும்.
உத்யானபந்தம்:
உத்யானபந்தம்:
இந்த ஆசனத்தில் நாபியுடன் சேர்த்து
சுவாசத்தை வெளியேற்றி விட்டு உள்பக்கம் வயிற்றை எக்க வேண்டும். பெரிய பள்ளம்
விழும் வரை எக்க வேண்டும். இதனால் வயிறு,குதம்,அடிவயிறு,ஜனேந்திரிய உறுப்புகள் எல்லாம்
சுருக்கப்படுவதால் அந்த அங்கங்கள் நன்கு செயலாற்றும் ஆற்றலை பெறுகின்றன.
மலச்சிக்கல் அடியோடு ஒழியும். மாந்தம்,அஜீரணம்
தொலையும். கவனம் தேவை. லூசாக மலம் இளகி போகிறவர்கள் உட்யான பந்தம் செய்யக்கூடாது.
முக்கிய குறிப்பு:
சித்தாசனம் பெண்களுக்கு ஏற்றதல்ல. இந்த
ஆசனம் மிக மிக கவனமாகவும், ஆசிரியர் உதவியுடனும் செய்ய
வேண்டும். குதிகால் மேற்சொன்னவாறு ஆசனவாய் ஜனேந்திரியத்திர்க்கு நடுவில் பதியாமல்
மேல்பக்கம் வைத்தால் தீய பலன் உண்டாகும். ஆகையால் நன்கு கவனத்துடன் செய்ய
வேண்டும். (தொடரும்)
No comments:
Post a Comment