உத்தானபாதாசனம்:
கால்கள்
இரண்டையும் தூக்குவதே உத்தானபாதாசனம் எனப்படுகிறது. கால்களை தூக்கிவைப்பதே
முக்கியம். இதனால் வயிற்றில் இருக்கும் கேஸ் வாயுரூபமாக வெளியேறுகிறது. இடுப்பு
பலப்படுகிறது. பசி எடுக்கிறது. மலச்சிக்கல் நீங்குகிறது. வயிற்று நரம்புகள்
பலப்படுகின்றன. இரைப்பை நன்கு செயல்படும். வயிற்றில் கொழுப்பு இருக்காது. ஹிரனியா
வராது. ஆண்,பெண் இருவருக்கும் சரிசமமான
பலன் கிடைக்கிறது. இந்த ஆசனத்தை காலையில் எழுந்தவுடன் செய்யலாம். இதனால் கால்களின்
ஜாயிண்ட் பகுதியும் நரம்புகளும் இடுப்பும் உறுதி படும். இதில் இருக்கும்
அசுத்தங்கள் சிறுநீர் வழியாக வெளியே வரும். தேகத்தின் கீழ் இருக்கும் அங்கங்கள்
உறுதியாகும்.
செய்முறை:
கீழே
ஜமுக்காளத்தில் படுக்கவேண்டும். இரண்டு கைகளையும் தொடைகளின் பக்கம் ஓட்டினார் போல
நேராக வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு கால்களும்,முழங்கால்,குதி,கால்பெருவிரல் எல்லாம் சேர்த்து
வைத்துக்கொள்க. மூச்சை இழுத்து அடக்க வேண்டும். மெது-மெதுவாக இரண்டு கால்களையும்
சேர்ந்தாற்போல் மேலே தூக்கி கீழே பூமி-விரிப்பிலிருத்து இரண்டு அடி மேல்தூக்கி
ஸ்திரமாக வைக்க வேண்டும். பார்வை கால் பெருவிரல் மீது பதியவைக்க வேண்டும். எவ்வளவு
நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் மேல் தூக்கி வைக்க வேண்டும். பத்து பதினைந்து
நொடிகள் வரை அவசியம் வைக்க வேண்டும். பின்பு மூச்சை விட்டுக்கொண்டு மெதுவாக
கால்களை கீழே வைக்க வேண்டும். ஐந்து அல்லது ஏழு முறை கால்களை தூக்கி உத்தான
பாதாசனம் செய்தபின் கால்களை மெதுவாக கீழே வைத்தபின் கண்களைமூடி சவாசனம் செய்ய
வேண்டும். எவ்வளவு நேரம் இந்த ஆசனம் செய்கிறோமோ அதன் பாதி நேரம் சவாசனத்தில் ஓய்வு
எடுக்க வேண்டும்.
இந்த ஆசனத்தை செய்யும் போது இரண்டு
முறை ஒவ்வொரு அடியாக மேலே கொண்டுபோய் இரண்டடி உயரம் வைத்து அப்யாசம் செய்ய
வேண்டும். இந்த ஆசனத்தில் இடது கால்,
வலது கால் மாறி மாறி தூக்கி செய்யலாம். இப்படி சுலபமாக செயலாம்.
இந்த ஆசனத்தில் மூன்று அல்லது ஐந்து
முறை அப்யாசம் செய்யும்போது ஒருநிமிடம் மூச்சை அடக்கி வைத்திருக்கும் வரை இரண்டு
கால்களும் மேல் தூக்கி இருக்க வேண்டும். கால்களை மேல்தூக்கி வைத்திருக்கும்போது
இரண்டும் சேர்ந்தே இருக்கவேண்டும் என்று கவனத்தில் இருக்க வேண்டும். இரண்டு
கால்களையும் மெதுவாக மேல்நோக்கி போகவேண்டியது அவசியம். அப்போது தான் ஆசனத்தின்
முழுப்பலனையும் அடையலாம். அதே போல மெதுவாக மந்தகதியுடன் கீழே கொண்டுவருவதும்
அவசியம். கால்களில் நடுக்கம் இருக்க கூடாது. மன உறுதி அவசியம். கால்களை மேல்தூக்கி
வைத்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்தி அப்யாசம் செய்ய வேண்டும்.
தொடரும்
No comments:
Post a Comment