Wednesday 9 January 2013

வாமன அவதாரம் தொடர்ச்சி 7

அப்போது அசுர ராட்சசாபதி பலி தைரியம் இழக்காமல் பகவானை நோக்கி பேசினார்.என்னை பாசக்கயிற்றால் கட்டினால் என்ன? எனக்கு ஒரு கவலையும் இல்லை.என்னிடம் ஒரு செல்லாத காசும் இல்லை.புனித கீர்த்தி பெற்றவரே தங்களை போன்ற குரு தெய்வங்களால் கொடுக்கும் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.அப்படிபட்ட தண்டனையை மாதா,பிதா,அண்ணன்,தம்பி,நண்பர்கள் குற்றங்களை மன்னித்து விடுவார்கள்.  
          பகவானே தாங்கள் அசுரர்களுக்கு மறைமுகமாக குருவாக இருந்து அருள் செய்கிறீர்கள்.ஏனெனில் அசுரர்கள் தனம்,உயர்குடி,பலம் இவற்றால் செருக்கு அடைகிறார்கள்.அவர்களை ஆன்மீக வழியில் செலுத்துவதற்காக ஐசுவர்யங்களையும்,உலகவாழ்க்கையின் மேன்மைகளையும் (பணம்,பெயர்,புகழ்)நாசம் செய்து விடுகிறீர்கள்.அசுரர்கள் தங்களை பகைத்து பகைஉணர்வோடு சிந்தித்து சிந்தித்து இறுதியில்தங்கள் திருவடிகளை சென்றடைகிறார்கள்..என்னை பாருங்கள். நான் எல்லாவற்றயும் துறந்த பின்பும் நான் என்ற கர்வம் இன்னமும் போகவில்லை. நான் எல்லாவற்றயும் உமக்கு அர்ப்பணம் செய்தாலும் நான் தனியனாக அல்லவா நிற்கிறேன்.என்னை இன்னமும் தங்களுக்கு அற்பணிக்க வில்லயே? அந்த மூன்றாவதடிக்கு ஒரு இடம் பாக்கி இருக்கிறது.தாங்கள் திருப்பாதத்தை என் சிரசில் வைத்து விடுங்கள்.அப்போது தான் நான் எல்லாவற்றயும் தந்தவனாவேன் என்று கூறி முடித்தான்.
          அச்சமயம் பிரகலாதன் அங்கு வந்து சேர்ந்தார்.அவர் பகவானை நோக்கி கூறினார்-“பிரபோ தாங்கள் இவனுக்கு இந்திர பதவியை கொடுத்தீர்கள்.அது தங்கள் அருளால் நடந்தது.இப்போது சாம்ராஜ்ய செல்வங்களை அபகரித்துக்கொண்டீர்கள்.அதுவும் தாங்கள் அருள் தான்.லக்ஷ்மி செல்வங்களை அபகரித்து தாங்கள் இவன் மீது அனுக்கிரகம் தான் செய்தீர்கள்.பணம்.பதவி,அதிகாரம்,புகழ்,ஐஸ்வர்யம்,ஆகியவற்றால் மதம் பிடித்து பகவானை மறந்து விடுகிறார்கள்.பற்றுக்களை துறந்தால் தானே ஞானம் பெற முடியும்.பகவானே தாங்கள் எது செய்தாலும் அதில் நன்மை இருக்கிறது.” என்று கூறி முடித்தார்.
          பலிராஜாவின் மனைவி விந்தியாவலி பகவானின் பாதங்களில் விழுந்து வணங்கி தன் கணவரை அனுக்கிரகிக்குமாறு கேட்டுக்கொண்டாள்.
பிரம்மதேவர் கூறினார்-“பகவானே தாங்கள் வருண பாசக்கயிற்றால் இவனை கட்டி வைத்திருக்கிறீர்கள்.இவன் எந்த குற்றமும் செய்ய வில்லயே?தாங்கள் கேட்ட மூன்றடிநிலத்தயும்தந்துவிட்டான்.தன்னயும் கொடுத்து விட்டான்.நான் எனது என்பது இவனிடம் இல்லை.மனமுவந்து எல்லாவற்றையும் அர்ப்பணித்த இவனை விடுதலை செய்துவிடுங்கள்.” என்றார். எல்லாம் அறிந்த பரம புருஷன் விஷ்ணு பகவான் கூறினார்.”எவர்மீது நான் அனுக்கிரகம் செய்கிறேனோ அவரை பற்றற்ற வாழ்க்கைக்கு திருப்பி ஐஸ்வர்யம்,கல்வி,பெயர்,புகழ்,பதவி முதலிய மதம் பிடிக்கும் விஷயங்களை அழித்து விடுவேன்.அல்லது மேற்சொன்ன மேன்மைகளை பெற்றும் என்மீது பக்தி குறையாதிருந்தால் அதையும் என் அனுக்கிரகம் என்று அறியவேண்டும்.பலிராஜா உன்னை பலவிதத்திலும் சோதனைக்கு உள்ளாக்கினேன்..குரு சுக்கிரனின் கோபத்திற்க்கும் ஆளானாய்.ஆனால் நீ சத்தியம் தவறாது இருந்தாய்.எனக்கு எல்லாவற்றயும் அர்ப்பணம் செய்துவிட்டாய்.பழம்,புஷ்பம்,தீர்த்தம் இவற்றை மட்டும் எனக்கு அற்பணித்தாலும் சந்தோஷமடையும்நான் உனக்கு நான் என்ன செய்வேன் என்று குழப்பமடைகிறேன்.
          தேவர்களாலும் விரும்பப்பட்டு பெறமுடியாத ஒரு பெரிய பதவியை கொடுக்க போகிறேன்.சாவர்ணி மன்வந்திர காலம் வரும்போது நீ இந்திரனாகி விடுவாய்.அதுவரை விஸ்வகர்மாவால்மிக கவனமாக நிர்மாணிக்கப்பட்ட சுதல லோகம் சென்று நீ சுகமாக இருப்பாய்.என் அருளால் அங்கு சரீரம்,மனம் சம்பந்தப்பட்ட நோய்கள்,களைப்பு இல்லாமல் அகத்தில்,புறத்தில் இருக்கும் பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.சத்ருக்களால் தோல்வி ஏற்படாது.எந்த விக்னமும் இருக்காது.பலி ராஜா உனக்கு மங்களம் உண்டாகட்டும்.உன்சுற்றதார்களுடன் நீ சுதல லோகம் செல்வாய்.அந்த சுதல லோகத்தை தேவர்களாலும் ஜெயிக்க முடியாது.அங்கு எல்லாவித சுகபோகங்களும் நிறைந்திருக்கும்.எவரும் உன் ஆணயை மீற மாட்டார்கள். எவராவது உன் ஆணயை மீறினால் என் சக்கராயுதம் அவரை வெட்டிவிடும்.சகல செல்வங்களும் நிறைந்திருக்க என் அருள் எப்போதும் இருக்கும்.உனது பூஜை மாளிகையில் எப்போதும் என்னை பிரத்யட்சமாக காண்பாய்.என்னை சேவித்துக்கொண்டிருப்பாய்.என் அருளால் அசுரர்களின் சேர்க்கையால் வரும் அசுரகுணம் உன்னிடம் இருக்காது.” பகவான் இவ்வாறு கூறியதும் அவரது பேரருளை நினைத்து ஆனந்த பரவசத்தில் கண்ணீர் மல்கி தொண்டை அடைத்து கரங்கள் குவித்து வணங்கினான். அவர் வணங்கும்போது வருண பாசக்கட்டு தாமாக அவிழ்ந்தது.    

          தேவர்களாலும் விரும்பப்பட்டு பெறமுடியாத ஒரு பெரிய பதவியை கொடுக்க போகிறேன்.சாவர்ணி மன்வந்திர காலம் வரும்போது நீ இந்திரனாகி விடுவாய்.அதுவரை விஸ்வகர்மாவால்மிக கவனமாக நிர்மாணிக்கப்பட்ட சுதல லோகம் சென்று நீ சுகமாக இருப்பாய்.என் அருளால் அங்கு சரீரம்,மனம் சம்பந்தப்பட்ட நோய்கள்,களைப்பு இல்லாமல் அகத்தில்,புறத்தில் இருக்கும் பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.சத்ருக்களால் தோல்வி ஏற்படாது.எந்த விக்னமும் இருக்காது.பலி ராஜா உனக்கு மங்களம் உண்டாகட்டும்.உன்சுற்றதார்களுடன் நீ சுதல லோகம் செல்வாய்.அந்த சுதல லோகத்தை தேவர்களாலும் ஜெயிக்க முடியாது.அங்கு எல்லாவித சுகபோகங்களும் நிறைந்திருக்கும்.எவரும் உன் ஆணயை மீற மாட்டார்கள். எவராவது உன் ஆணயை மீறினால் என் சக்கராயுதம் அவரை வெட்டிவிடும்.சகல செல்வங்களும் நிறைந்திருக்க என் அருள் எப்போதும் இருக்கும்.உனது பூஜை மாளிகையில் எப்போதும் என்னை பிரத்யட்சமாக காண்பாய்.என்னை சேவித்துக்கொண்டிருப்பாய்.என் அருளால் அசுரர்களின் சேர்க்கையால் வரும் அசுரகுணம் உன்னிடம் இருக்காது.” பகவான் இவ்வாறு கூறியதும் அவரது பேரருளை நினைத்து ஆனந்த பரவசத்தில் கண்ணீர் மல்கி தொண்டை அடைத்து கரங்கள் குவித்து வணங்கினான். அவர் வணங்கும்போது வருண பாசக்கட்டு தாமாக அவிழ்ந்தது.    .    (தொடரும்)

No comments:

Post a Comment