முன்னொரு காலத்தில் பாஹூகன்
என்ற அரசன் அயோத்யா நாட்டில் ஆட்சி
செய்துகொண்டிருந்தான்.ஒரு சமயம் அண்டை நாட்டு பகைவர்களால் தோற்கடிக்கப்பட்டு
காட்டிற்க்கு வந்தான்.காட்டில் அவன் மனைவியுடன் இருந்த சில நாட்கள் கழித்து இறந்து
விட்டான். அப்போது அவன் மனைவி கர்ப்பமாக இருந்தாள். அவள் ஒளர்வரிஷி ஆசிரமத்தில்
ஒரு மகனை பெற்றாள். ஒளர்வரிஷி அவனுக்கு சகரன் என்று பெயர் வைத்து போர் கலைகள்
அனைத்தையும்கற்று கொடுத்தார்.சகரன் தந்தை ஆட்சி செய்த நாட்டிற்க்கு சென்று
பகைவர்களை வென்று அரசனானார்.பாரதத்தை தாக்க வந்த தாலஜங்கர் சக்,யவனர் பர்பர முதலிய அந்நிய தேசத்து பகைவர்களை
வென்று சகரன் சக்கரவர்த்தி ஆகிவிட்டார்.
ஒருமுறை சகரன் அச்வமேத யாகத்தை
தொடங்கினார்.அவனுக்கு சுமதி,கேசினி என்று இரு மனைவியர் இருந்தனர்.அச்வமேத யாகம் நெடுநாள்
நீடித்தது.சகரன் நூறு யாகம் செய்து விட்டால் இந்திர பதவி அடைந்து விடுவான் என்ற
பயத்தில் அச்வமேத யாக குதிரையை இந்திரன் திருடிச்சென்று விட்டான்.
சகர ராஜா மூத்த மனைவி புத்திரர்களை
அனுப்பி யாகக்குதிரையை கண்டுபிடித்து கொண்டுவர சொன்னார். சகரரின் அறுபதாயிரம் புதல்வர்களும்
பூமியெங்கும் சென்று தேடினார்கள்.இறுதியில் பூமியை தோண்ட ஆரம்பித்தார்கள்.பூமியின்
அதள பாதாளத்தில் தோண்டி விட்டார்கள்.இறுதியில் கபில முனிவரின் ஆசிரமத்தை கண்டனர்.கபில
முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார்.அவர் பக்கத்தில் குதிரை மேய்ந்து கொண்டிருந்தது.சகர
புத்திரர்கள் கூறினார்கள்.இதோ பார் குதிரையை திருடிவிட்டு ஏதும் அறியாதவர் போல கண்
மூடி பாசாங்கு செய்து கொண்டிருக்கிறார்.இவரை கொன்றுவிட்டு குதிரையை கொண்டு செல்வோம்
என்று கோடாரி கடப்பாறைகளால் அவரை கொல்ல வந்தனர். கபில முனிவர் ஒன்றும் அறியாது கண்களை
திறந்தார்.அக்கணமே அனைவரும் எரிந்து சாம்பலானார்கள்.கபில முனிவர் பற்று பகையற்றவர்.ஆதலால்
சகர புத்திரர்கள் தம் தீய எண்ணங்களால் எரிந்து விட்டனர்.
குதிரையை தேடிப்போன புதல்வர்கள் திரும்பவில்லை
என்று அறிந்த இளய மனைவியின் மகன் அசமஞ்ஜசன் மகன் அம்ஸுமானை குதிரையயும் அதை தேடபோன
தன் புத்திரர்களையும் கண்டுபிடித்து அழைத்துவர அனுப்பினான். அசமஞ்ஜசன் பூர்வ ஜன்மத்தில்
ஒரு சித்தன்.அவன் புத்தி சுவாதீனமில்லாமல் நடந்துகொள்வான்.அவன் ஒரு சித்த யோகி என்று
அறியாது அவன் மகன் அம்ஸுமானை அனுப்பினான்.அவன் காடு மலை எல்லாம் தேடினான்.அவன் தந்தை
மார்கள் பூமியை அதள பாதாளமாக தோண்டிவிட்டிருந்தனர்.அதில் மலை பெய்து கடலாக மாறிவிட்டதை
கண்டான்.அதில் பயணம் செய்து இறுதியில் கபில முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான்.அங்கு குதிரை
இருப்பதையும் பக்கத்தில் பெரிய சாம்பல் குவியலயும் கண்டான்.எல்லாவற்றயும் புரிந்து
கொண்டவன் கபில முனிவரை துதி செய்தான்.
“பகவானே உம்மை வணங்குகிறேன்:படைக்கும் கடவுள்
பிரம்மாவாலும் மற்ற தேவர்களாலும் தாங்கள் சத்திய சொரூபமாக அறியப்படவில்லை.தாங்கள் சித்தர்களுக்கு
யோகம் பயிலும் முறையை உபதேசித்துள்ளீர்கள்.சாங்கிய யோகம் என்ற யோக நூலை தந்து மோட்சம்
அடைவதற்க்கு வழிகாட்டியிருக்கிறீர்கள்.விஷ்ணு பகவானின் அம்சாவதாரமான தங்கள் கோபத்தால்
என் தந்தைகள் மாண்டு போகவில்லை.அவர்களது தவறான எண்ணமே அவர்களை பஸ்மம் செய்துவிட்டது”
அம்ஸுமான் இவ்வாறு வேண்டிக்கொண்டதும் கபில முனிவர் கூறினார்.”எனக்கு எவரிடமும் கோபமில்லை,உன் தாத்தாவின் யாகக்குதிரையை கொண்டுசெல்வாயாக.
கங்கை நீர் பட்டாலன்றி உன் சிறிய தந்தைகள் முக்தியடய மாட்டார்கள்.” கபிலர் இவ்வாறு
கூறியதும் அம்ஸுமான் அவரை வலம் வந்து வணங்கி விட்டு குதிரையை எடுத்து சென்றான் (தொடரும்)
No comments:
Post a Comment