பிரகலாதன் கூறினார்:
“விசுமனைத்தும் வணங்கும் பிரம்மதேவரால் பூஜிக்கப்படும் தாங்கள் பலி ஆட்சி செய்யும்
சுதல லோகத்தில் கோட்டை காவல் தெய்வமாக இருப்பது பெரும் ஆச்சரியமான விஷயம்.ஏனெனில்
அசுர ராக்ஷசர்கள் சுபாவத்திலேயே துஷ்டர்கள்.தர்ம நியாயத்தை அனுசரித்து
இருக்கமாட்டார்கள். இவர்கள் மீது அனுக்கிரகம் செய்து அவர்கள் கோட்டைக்கு
காவல்காரராக போய் விட்டீர்கள். பக்தர்களுக்கு எளிமையானவர் என்பதை நிரூபித்து
விட்டீர்கள்.”
பகவான் கூறினார்:
“அப்பனே பிரகலாதா நீ உன் பேரனோடும் தன் இன பந்துக்களோடும் சுகமாக இருப்பாய்.அங்கு
கதை வைத்து நான் காவல் இருப்பதை தரிசனம் செய்வாய்.எனது அருளால் உனது கர்ம பலன்கள்
நாசப்பட்டு விடும்”.என்று கூறிவிட்டு சுக்கிராசரியாரை நோக்கி கூறினார்.
“ஆச்சாரியரே தாங்கள்
சிஷ்யன் பலிக்காக யாகம் செய்து கொண்டு இருந்தீர்கள்.இனி அதில் குற்றம் குறை
இருந்தால் அதை பூர்த்தி செய்து தாருங்கள்.பிராமணர்களின் அருளால் எந்த குறையும்
தீர்ந்து விடும்.”
சுக்கிராசரியார்
கூறினார்:” பகவானே தாங்கள் பார்வைபட்டவுடன் அங்கு குற்றம் ஏது?,குறை ஏது?தங்கள்
அருளால் எல்லாம் சுபமாக முடிந்தது.என் சிஷ்யனுக்கு சுதலலோக ராஜ்யம் கிடைத்துவிட்டது.
இதோ இந்த யாகத்தை பூர்த்தி செய்து விடுகிறேன்.என்று கூறி பலி ராஜாவுடன் சேர்ந்து
யாகத்தை முடித்து கொடுத்தார்.
No comments:
Post a Comment