Friday, 21 December 2012

வாமன அவதாரம் தொடர்ச்சி 6

ஆச்சரியார் இவ்வாறு கூறியதும் பலி ஒருகணம் பேசாமல் இருந்துவிட்டுபணிவுடன் சொன்னார்.ஸ்வாமி தாங்கள் சொன்னது சரிதான்.அறம்,பொருள்,இன்பம் யாவற்றையும் எந்தவிதத்திலாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.ஆனால் நான் பிரகலாதன் பேரன் ஆனதால் நான் நரகத்திற்க்கு சென்றாலும் ,துன்பக்கடலில் மூழ்கினாலும், தரித்திரம் அடைந்தாலும், ராஜ்யமிழந்தாலும்,மரணம் வந்தாலும் பிராமணனுக்கு கொடுத்த சத்திய வாக்கிலுருந்து மாற மாட்டேன்.தன் அஸ்த்தியை தானமாக தந்த ததிசி முனிவர் சிபிராஜா ஆகியோர் தானத்தினால் பெரும் புகழ் அடைந்திருக்கிறார்கள்.எத்தனயோ அரக்கர்கள் வெற்றிகளை குவித்து ராஜ சுகபோகங்களை அனுபவித்தார்கள்.ஆனால் அவர்கள் ஐசுவர்யங்களை நிலைத்துபெற்றார்களா?பரம்பொருளைதவிரஎல்லாம்அழியக்கூடியவை.ஸ்வாமி தாங்கள் கூறியது போல இந்த பாலகன் விஷ்ணுவாகவே இருந்தால் என்னுடன் போர் செய்து என்னை கொன்றுவிட்டு ராஜ்யத்தை இந்திரனுக்கு கொடுக்கும் ஆற்றல் இல்லாமல் என்னிடம் ஏன் யாசிக்கவேண்டும்? விஷ்ணுவாக இருந்தால் அவருக்கு எல்லாவற்றயும் அர்ப்பணித்த பெருமை என்னை சேரும்.வேறு எவனாக இருந்தாலும் அவனுடன் போர் செய்து அவனை வீழ்த்தி விடுகிறேன்.
          சுக்கிராசரியார் மிகுந்த கோபத்துடன் கூறினார்.”என் பேச்சை கேளாது என்னை அவமதித்து விட்டாய்.சீக்கிரமே எல்லா செல்வங்களயும்,சாம்ராஜ்யங்களையும் இழந்து ஒன்றுமில்லாமல் நிற்கபோகிறாய்.”பலிராஜாகுருசுக்கிராசாரியாரைபொருட்படுத்தவில்லை.பலிராஜா கையில் நீர் எடுத்து மூன்றடி பூமிதானத்திற்க்கு  சங்கல்பம் செய்தார்.பலி மஹாராஜா பட்டத்து ராணி விந்தியாவலி முத்து பொன்னாபரணங்கள் அணிந்தவள் கலசத்தில் புனித நீர் கொண்டுவர அதை வாங்கி வாமன பகவானின் பாதங்களை கழுவி தமக்கு அபிஷேகம் செய்து கொண்டார்.சங்கல்பம் செய்த நீரால் தாரை வார்த்து வாமன பகவானுக்கு மூன்றடி நிலத்தை அர்ப்பணம் செய்தார்.அச்சமயம் தேவதுந்துபிகள் முழங்கின.வானகத்திலுருந்து மலர்மாரி பொழிந்தது.
          வாமனனாக இருந்த விஷ்ணு பகவான் விஸ்வரூபமெடுத்தார்.அவருக்குள் பதினான்கு உலகங்களும் ஜீவராசிகளும்,தேவர்களும் தெரிந்தனர்.அசுரர்கள் பகவானின் விசுவரூபத்தை கண்டு பிரமித்து போய் நின்றனர்.பகவான் ஒரு அடி எடுத்து பூமியின் எல்லை வரை அளந்தார்.அதில் பூமியும் திசைகளும் சொர்க்கம் பாதாளம் எல்லாம் அடங்கி விட்டன.மற்றொரு அடி வானுலகம் சென்று பிரமலோகம் வரை சென்றது.அங்கு வேத உபநிஷத உபவேத யம நியம தர்க்கசாஸ்திர இதிகாச புராணங்கள் உருவமெடுத்து பிரம்மாவை சேவித்துக்கொண்டு இருந்தன.பிரம்மதேவர் தம் கமண்டல நீர் ஊற்றி தன்னிடம் வந்த பாதத்திற்க்கு பூஜை செய்தார்.பகவான் பாதம் கழுவப்பட்ட நீர் புனித கங்கையாக பெருக்கெடுத்து பூமியில் நதியாக பிரவாகமெடுத்து ஓடியது.மூன்றாவதடிக்கு எங்கும் இடமில்லாமல் போகவும் பகவான் தனது விஸ்வரூபத்தை சுருக்கிக்கொண்டு சங்குசக்கரதாரியாக விஷ்ணுவாக காட்சியளித்தார்.
          பலி சக்கரவர்த்தியின் அசுர பந்து மித்ரர்கள்,படை தளபதிகள்,மந்திரிகளும் அனைத்து சாம்ராஜ்யங்களும் பறி போய்விட்டதை அறிந்து மிகுந்த ஆத்திரம் அடைந்து கூறினர். மாயாவி விஷ்ணு நம்மை ஏமாற்றி விட்டார்.நாம் மோசம் போய் விட்டோம்.நமது அரசர் அறநெறி தவறாதவர்.மேலும் யாகத்தில் தீக்ஷை பெற்றதனால் கொல்லாமை விரதம் ஏற்று இருக்கிறார்.அதனால் போருக்கு வரமாட்டார்.நாமே இவர்களுடன் போர் புரிந்தால் என்ன?என்று கூறி விஷ்ணுவின் தெய்வசக்திபடைத்த பார்ஷத சேவகர்களுடனும் அவர்களுக்கு துணையாக இருக்கும் தேவர்களுடன் போர் செய்தனர்.விஷ்ணுவின் சேவகர்களால் அவர்கள் கொல்லப்பட்டனர்.இதைகண்டு அசுரராஜா பலி கூறினார்.”சகோதரர்களே,நண்பர்களே யுத்தம் செய்யும் காலம் இதுவல்ல.நமக்கு காலமும் நேரமும் பிரதிகூலமாக இருக்கின்றன.படைபலம்,மந்திரி,புத்திபலம், கோட்டை,சாம,தான,நீதி,மந்திரம்,ஔஷதம் இவற்றாலும் கால பிரதிகூலமாக இருக்கையில் ஏதும் செய்ய முடியாது.பலியின் பேச்சை கேட்டு அசுரர்கள் போர் செய்வதை நிறுத்தினர்.
          விஷ்ணு பகவான் கூறினார்.”பலிராஜா நீங்கள் மூன்றடி தருவதாக வாக்களித்தீர்களே?எங்கே அந்த மூன்றாவது அடி?கொடுத்தவாக்கை காப்பாற்றாமல் அசத்தியம் பேசி எம்மை ஏமாற்றி விட்டீர்கள்.அதற்கு பலனாக நீங்கள் நரகத்திற்க்கு தான் செல்லவேண்டும்.என்றார்.கருட பகவானின் எண்ணமறிந்துவாருண பாசத்தால் பலியை கட்டிப்போட்டார்.(தொடரும்)  
         

No comments:

Post a Comment