Tuesday 18 December 2012

வாமன அவதாரம் தொடர்ச்சி 5

கேட்டதை கொடுக்கும் வள்ளலான உங்களிடம் நான் தேவைக்கு அதிகமாக நான் எதையும் கேட்க விரும்பவில்லை.என் அடியில் மூன்று அடி நிலம் கொடுத்தால் போதும்.தன் ஆத்மாவை மேம்படுத்தும் மனிதன் தேவைக்கு அதிகமாக ஆசைப்படுவது சரியல்ல.
          பலி ராஜா பதில் கூறினார்.பிராமண குமாரரே அனுபவம் மிக்க பெரியோர்கள் போல பேசுகிறீர்கள்.ஆனால் தோற்றத்தில் தாங்கள் சிறுபிள்ளை போல இருக்கிறீர்கள்..அதனால் தான் தன்னலத்தை அறியாமல் லாப நஷ்டங்களை அறியாமல் மூன்றடிநிலம் கேட்கிறீர்கள்.இந்த உலகம் முழுவதும் என் ஆட்சியின் கீழ் உள்ளது.நான் நினைத்தால் உலகில் உள்ள தீவுகளையும் தந்துவிடுவேன்.என்னிடம் வந்துவிட்டால் அவன் தேவைக்காக வேறு எவரிடமும் கையெந்த அவசியம் இருக்கக்கூடாது.
          வாமன பகவான் கூறினார்.பலிராஜா!இவ்வுலகில் மனிதன் ஆசைப்படும் எல்லா விசயங்களும் அவனுக்கு கிடைத்து விட்டாலும் மனிதனின் ஆசை பூர்த்தி ஆவது இல்லை.மனிதன் நிறைவடையமாட்டான்.
அவ்வாறு இருக்க மூன்றடி நிலத்தில் சந்தோஷமாடையாதவன் ஏழு தீவுகள் கொண்ட கடல் சூழ்ந்த பூமியை பெற்றும் நிறைவடைந்து விடுவானா?ஆசைக்கோ ஓர் அளவில்லை.புலன்கள் வசப்படுத்த முடியாதவன் துயரத்தை சந்தித்துக்கொண்டே இருப்பான்.கிடைத்ததை பெற்று சந்தோஷமடையாத  பிராமணனின் தேஜஸ் குறைந்து விடுகிறது.ஆதலால் எனக்கு மூன்றடி நிலமே போதுமானது.அதை தாங்கள் தந்தால் போதுமானது.
          வாமன பகவானின் வார்த்தைகளை கேட்ட பலி மகாராஜாவுக்கு சிரிப்பு தான் வந்தது.சரி உங்களுக்கு எவ்வளவு விருப்பமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.என்று கூறிவிட்டு தாரை வார்த்துக்கொடுக்க கமண்டல நீரை எடுத்தார்.அச்சமயம் குரு சுக்கிராசரியார் குறுக்கிட்டு பேசினார்.-
          அசுரவேந்தே பலிமகாராஜா! நான் சொல்லுவதை சற்று கேளுங்கள்.நாம் முன்னால் சிறுபாலகனாக வந்திருப்பது வேறு எவருமில்லை.இவர் சாட்சாத் விஷ்ணு பகவானே தான்.தேவர்களின் காரியத்தை சாதிப்பதற்காகவே தேவமாதா அதிதி கர்பத்தில் இருந்து ஜென்மமெடுத்து வந்திருக்கிறார்.தானம் என்ற பெயரில் உங்களிடம் ராஜ்யங்களை பிடுங்கி இந்திரனுக்கு தர போகிறார்.இது அசுர குலத்தவருக்கு செய்யும் அநியாயம்,அக்கிரமம்,இது துரோகம்.உங்களுடய ராஜ்யம் ஐஸ்வர்யம்,லக்ஷ்மி தேஜஸ்,உலகப்புகழ் கீர்த்தி அனைத்தையும்
தானமாக பெற்று இந்திரனுக்கு கொடுக்க போகிறார்.ஏனெனில் பகவான் விசுவரூமானவர்.விசுவரூபமெடுத்து பூமியயும்ஆகாயத்தயும்அளந்து விடுவார்.நீங்கள் பிழைப்புக்கு வழியில்லாமல் என்ன செய்ய போகிறீர்கள்.மேலும் ஆகாயமும் பூமியும் இரண்டடி அளந்தபின் மூன்றாவதடி என்ன செய்வீர்கள்.கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டாமா?தனக்கென்று மிஞ்சாத தானத்தைஅறிஞர்கள் புகழ மாட்டார்கள். இவ்வுலகில் தான் சம்பாதித்த செல்வத்தை ஐந்தாக பிரித்துக்கொள்ள வேண்டும்.அறத்திற்காகவும்,புகழுக்காகவும் பணமுதலீட்டிற்காகவும்,தன் சந்தோஷத்திற்காகவும் தன் பந்துக்களுக்காகவும் செலவிடவேண்டும்.
          அரசே நான் வாக்கு கொடுத்துவிட்டேன் என்று கவலைபடாதீர்கள்.வாக்கு தவறுவது அசத்தியம் தான்.இந்த தேகம் ஒருமரம் என்றால் சத்தியம் தான் அதன் பழங்கள்.தேக ஜீவனோபாயமின்றி
சகலமும் தந்துவிட்டால் தேகம் என்ற மரம் பட்டுப்போய்விடும்.மேலும் அறியாமல் அவசரத்தில் விவாகம் போன்ற சந்தோஷமான தருணங்களில் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள சொல்லப்படும் பொய்,பொய்யாகாது.
                                                          (தொடரும்)

No comments:

Post a Comment