பகாசனமும்
யோனிஸ்தானத்தில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அடி வயிறு இரண்டு புட்டம், தொடை,தொடையின் ஆரம்பப்பகுதி, ஜனனேந்திரியம்,நாடி,நரம்புகள் பலப்படும். வீரியம்
காக்கப்படும். சொப்பனதோஷம் நீங்கும். பெண்களுக்கு இது அதிக பலன்களை தரும். வெள்ளைபடுதல், மாதவிலக்கு கஷ்டங்கள், அதிக உதிரபோக்கு முதலிய வியாதிகள்
நீங்கும். மூல நோய் குணமாகும். பௌத்திரம் குணமாகும். பெண்களின் அழகு கூடும்.
செய்யும்
விதி:
கீழே
போர்வை அல்லது ஜமுக்காளம் விரித்து அதில் இரண்டு கால்களையும் நீட்டியபடி
அமரவேண்டும். பின்பு முழங்கால்களை மடக்கி இரண்டு பாதங்களின் அடிப்பாகத்தையும்
சேர்த்து குதி கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும். அதன்பின் இரண்டு கைகளால்
இரண்டு குதிகாலை பிடித்து நாபியின் இடத்தில் கொண்டுபோய் வைக்க வேண்டும். சேர்ந்த
இரண்டு பாதங்களும் ஜனனேந்திரியத்திர்க்கு
நேர்கோட்டில் பூமியில் வைக்க வேண்டும். மெதுவாக சுவாசத்தை நிரப்பவேண்டும்.
இரண்டு கைகளையும் முழங்கால்களில் வைத்து கொள்க. நெஞ்சை நிமிர்த்தி நேராக
அமரவேண்டும். சக்திக்கு தகுந்தவாறு இருபது நொடியிலிருந்து ஒரு நிமிடம் வரை மூச்சை
அடக்கி கொண்டு இருக்க வேண்டும். அதன்பின் மெதுவாக சுவாசத்தை விட வேண்டும். சற்று
நேரம் சாதாரணமாக சுவாசிக்க வேண்டும். கஷ்டமாக இருந்தால் சாதாரணமாக உட்காரலாம்.
இவ்வாறு மூன்று அல்லது ஐந்து முறை ஆசனம் போடலாம். ஆரம்பத்தில் இந்த ஆசனம் போட
கடினமாக இருக்கும். முயற்சி செய்து பயிற்சி செய்தால் சில நாட்களுக்கு பின் போட
வரும். குதிகால்களை நாபியின் நேர் கோட்டில் சேர்த்து வைத்து பத்து நொடி வரை செய்து
கிரமமாக நேரத்தை அதிகப்படுத்தலாம்.
நான்கு முறை பகாசனம் செய்த பிறகு
ஐந்தாவது முறை இவ்வாறு பிராணாயாமம் செய்யலாம். மூன்று நொடி சுவாசத்தை இழுத்து ஆறு
நொடிவரை கும்பகம் செய்து(உள்ளே அடக்கி)மூன்று நொடியில் சுவாசத்தை வெளியே
விடவேண்டும். இதை தாளபத்த
பிராணாயாமத்துடன் செய்யலாம். அதாவது இதயத்துடிப்புடன் சேர்த்து மூன்று முறை
சுவாசித்து ஆறுமுறை சுவாசக்காற்றை அடக்கி மூன்றுமுறை (இதயம் துடிக்கும் நேரத்தில்) வெளியில் விடலாம்
என்று யோகிகள் கூறுவார்கள். (இந்த ஆசனத்தை தக்க வழிகாட்டுதலுடன் செய்யவும்)(தொடரும்)
No comments:
Post a Comment